தனியார் பள்ளிகளுக்கான கல்விக்கட்டணத்தை நீதிபதிகள் குழு அறிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகள் மாணவர்களிடம் கூடுதல் கட்டணம் வசூல் செய்வதாக எழுந்த புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க முடிவு செய்த தமிழக அரசு. தனியார் பள்ளிகளின் கல்விக் கட்டணத்தை நீதிபதிகள் தலைமையிலான குழு ஆய்வு செய்து கல்விக்கட்டணத்தை நிர்ணயிக்கும் என்று அறிவித்தது. இதையடுத்து நீதிபதி கே.கோவிந்தராஜன் தலைமையிலான தலைமையிலான குழு தமிழகம் முழுவதும் உள்ள தனியார் 1950 தனியார் பள்ளிகளின் கல்விக்கட்டணத்தை ஆய்வு செய்தது. இதில் 1233 பள்ளிகள் தங்களின் கல்விக்கட்டணத்தை நீதிபதிகள்குழுவிற்கு தெரிவித்திருந்தன. 701 பள்ளிகள் தங்களின் கல்விக்கட்டணம் குறித்த விபரங்களை தெரிவிக்கவில்லை. மேலும் தனியார் பள்ளிகளின் கட்டமைப்பு, கல்வித்தரத்தை நிர்ணயிக்க 200 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. இதையடுத்து தனியார் பள்ளிகள் மாணவர்களிடம் வசூலித்து கொள்ள வேண்டிய கல்விக் கட்டணத்தை நீதிபதி கோவிந்தராஜன் அறிவித்தார். அதில்...''அதிகபட்சமாக நர்சரி மற்றும் தொடக்கப் பள்ளிகள் (எல்.கே.ஜி. முதல் 5 ஆம் வகுப்பு வரை ) ரு 3,500 எனவும், நடுநிலைப்பள்ளிக்கு ( 1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை ) ரூ 5,000 எனவும், உயர்நிலைப்பள்ளிக்கு தொடக்கப்பள்ளிகளுக்கு (6 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்புவரை) ரூ 8,000 எனவும், மேல்நிலைப்பள்ளிக்கு ( 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை) ரூ 11,000 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எல்லாப் பள்ளிகளுக்கும் ஒரே விதமான கல்விக்கட்டணம் நிர்ணயிக்கப்படவில்லை. அதனால் அவற்றுக்கு அதிக பட்ச கட்டணம் பொருந்தாது. பள்ளிக்குப் பள்ளி கட்டணத்தில் மாற்றம் இருக்கும். கட்டண நிர்ணயம் தொடர்பான ஆணைகள் அனைத்து பள்ளிகளுக்கும் விரைவில் அனுப்பப்படவுள்ளன. இடைப்பட்ட காலத்தில் கட்டணத்தை உயர்த்தி வசூல் செய்யக் கூடாது. அப்படி வசூலித்தால், அதிகமாக வசூலித்த கட்டணத்தை, பள்ளிகள் மாணவர்களுக்கு திருப்பி அளிக்க வேண்டும். தவிர ஒவ்வொரு பள்ளிக்குமான கல்விக் கட்டண விபரம் பள்ளிக் கல்வித் துறையின் இணையத்தளத்தில் வெளியிடப்படும். இந்த கல்விக்கட்டணம் 3 ஆண்டுக்கு செயல்பாட்டில் இருக்கும். நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் கேட்பதாக பள்ளிகள் மீது புகார் வந்தால் அந்த பள்ளியின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும். "என்று நீதிபதி கோவிந்தராஜன் தெரிவித்தார். பள்ளிக்கல்வித்துறை செயலர் குற்றாலிங்கம். இயக்குநர் பெருமாள்சாமி, மெட்ரிக் பள்ளி இயக்குநர் மணி, தொடக்கப் பள்ளி இயக்குநர் தேவராஜ் ஆகியோர் உடனிருந்தனர். |
Wednesday, June 9, 2010
தனியார் பள்ளிகள் கட்டணம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment