Sunday, February 28, 2010

பட்ஜெட் ...................2010

டெல்லி: பட்ஜெட் [^]டில் பல்வேறு பொருட்களுக்கு வரி விதிக்கப்பட்டுள்ளது. சில பொருட்களுக்கு வரி குறைப்பு செய்யப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து பல பொருட்களின் விலை உயரப் போகிறது. சிலவற்றின் விலை குறையப் போகிறது.

விலை உயரும் பொருட்கள்..

பெட்ரோல், டீசல், கார், டி.வி., சிகரெட், புகையிலை, ஏர் கண்டிஷனர்கள், தங்கம், வெள்ளி, இறக்குமதி செய்த வெள்ளி நகைகள், பிளாட்டினம்.

தங்க கட்டிகள் மீதான இறக்குமதி வரி 10 கிராமுக்கு 200 ரூபாயில் இருந்து 300 ரூபாயாக உயர்த்தப்படுகிறது. மேலும், இதர வகையிலான தங்கம் இறக்குமதியின் மீதான வரி ஒரு கிராமுக்கு முன்பு 500 ரூபாயாக இருந்தது தற்போது 750 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் இறக்குமதி செய்யும் வெள்ளி ஆபரணங்களுக்கான வரி, ஆயிரம் கிலோவுக்கு ஆயிரம் ரூபாயில் இருந்து 1500 ரூபாயாக அதிகரிக்கப்படுகிறது. 10 கிராம் பிளாட்டினத்தின் மீதான இறக்குமதி வரி 200 ரூபாயில் இருந்து 300 ரூபாயாக உயர்த்தப்படுகிறது. இதனால், தங்கம், வெள்ளி, பிளாட்டினம் ஆகியவற்றின் விலை உயரும்.

60 மில்லி மீட்டருக்கும் குறைவான சிகரெட் தவிர்த்து, அனைத்து வகையான சிகரெட்டுகளுக்கும் உற்பத்தி வரி ஆயிரம் சிகரெட்டுகளுக்கு 2 ஆயிரத்து 363 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. சுவைக்கும் புகையிலை ரகங்களுக்கான உற்பத்தி வரி 50 சதவீதத்தில் இருந்து 60 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக சிகரெட், புகையிலை பொருட்களின் விலை கணிசமாக உயர்கிறது.

வீடு கட்ட இனி ரொம்பச் செலவாகும்..

வீடு கட்டுவதற்கு அத்தியாவசிய தேவையான சிமெண்ட் விலையும் உயர்கிறது. 50 கிலோ மூட்டையின் அடிப்படையில் ஒரு டன் சிமெண்டுக்கு 185 முதல் 315 ரூபாய் வரை புதிய உற்பத்தி வரியை விதிக்க மத்திய அரசு திட்டமிட்டிருப்பதால் ஒரு டன் சிமெண்ட்டின் சில்லறை விலை 40 முதல் 65 ரூபாய் வரை விலை உயரும்.

இதேபோல், மைக்ரோ புராசசர், பிளாப்பி மற்றும் பிளாஷ் டிரைவ்கள், ஹார்ட் டிஸ்க் ஆகியவற்றின் விலையும் உயர்கின்றன. இவற்றுக்கு அளித்து வந்த உற்பத்தி வரி விலக்கு திரும்பப் பெறப்பட்டு இருப்பதுடன் 4 சதவீதம் வரை உற்பத்தி வரி விதிக்கப்படுகிறது.

கூலிங் கிளாஸும் விலை உயரும்..

குளிர் கண்ணாடிகள் எனப்படும் கூலிங் கிளாஸ்கள் மீது10 சதவீதம் வரை உற்பத்தி வரி விதிக்கப்பட்டு உள்ளதால் இவற்றின் விலையும் அதிகரிக்கிறது.

சேவை வரியின் கீழ் மின் உபயோகம் வருவதால் மின் கட்டணமும் உயரும்.

தொழில் நிறுவனங்களின் சம்பளம்பெறுவோர் மருத்துவமனைகளில் மருத்துவ பரிசோதனை செய்து கொள்வது சேவை வரியின் கீழ் வருவதால் இதற்கான செலவும் அதிகரிக்கிறது. இது தவிர, மருத்துவ இன்சூரன்சு திட்டங்களும் சுகாதார சேவையின் கீழ் வருவதால், இவற்றுக்கும் சேவை வரி உண்டு.

ஒலிப்பதிவு மற்றும் ஒளிப்பதிவுகள் மீதான காப்புரிமைகள் மீது சேவை வரி விதிக்கப்பட்டுள்ளது. எனினும் நாடகம், இதர கலைப்படைப்புகளுக்கு இதில் இருந்து விதி விலக்கு அளிக்கப்பட்டு இருக்கிறது.

பலூன் விலை குறையும்...

பலூன்களுக்கான உற்பத்தி வரி முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேபோல பொம்மைகளுக்கும் உற்பத்தி வரி நீக்கப்பட்டுள்ளது. எனவே இவற்றின் விலை குறையும்.

இந்தியாவில் தயாரான மொபைல் போன்கள், மொபைல்போன் உதிரி பாகங்கள், மைக்ரோ வேவ் ஓவன்கள், பாக்கெட்டுகளில் அடைத்து இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள், மடிப்பு ஜவுளி பொருட்கள், தண்ணீர் சுத்திகரிப்பு சாதனங்கள், கடிகாரங்கள், ஆயத்த ஆடைகள், மென்தா எண்ணை, நீள மிளகு, பெப்பர் மின்ட், மருத்துவ துறையில் பயன்படும் சி.இ.எல். விளக்குகள், செட் டாப் பாக்சுகள், காம்பாக்ட் டிஸ்க்குகள், லேட்டெக்ஸ் ரப்பர் இழை, அட்டை பெட்டிகள் போன்றவற்றின் விலை குறைகிறது.

Saturday, February 20, 2010

மவ்லிதுகள் தீனுக்காக அல்ல! தீனிக்காக!

தமிழகத்தில் பல வருடங்கள் பக்தி பரவசத்துடன் ஓதிவரும் சுப்ஹான மவ்லித் இஸ்லாத்திற்கு எதிரானது என்று பல ஆதாரங்களை எடுத்துக்காட்டி மக்களை சிந்திக்க வைத்துள்ளோம். மவ்லித் என்பது நபிகளார் காலத்தில் இருந்ததில்லை என்பதையும் அவை மூடநம்பிக்கையை வளர்ப்பதற்காகவும் உலக நோக்கத்திற்காகவும் தொகுப்பப்பட்டதுதான் என்பதை மவ்லித் ஓத வேண்டும் என்று வலியுறுத்தும் மவ்லவி தேங்கை சர்புத்தீன் என்பவர் எழுதிய சுந்தரத் தமிழில் சுப்ஹான மவ்லித் என்ற புத்தகத்திலிருந்து எடுத்து எழுதியுள்ளோம் வாசகர்கள் கவனத்தில் கொள்க!
சுப்ஹான மவ்லிதை எழுதியவர் யார்?
தமிழகம் எங்கும் பரவலாக பாடப்படும் சுப்ஹான மவ்லிதை எழுதியவர் யார் என்பது தெரியாது. மகுடமாய்த் திகழும் சுப்ஹான் மவ்லிதை கல்விக்கடல் கஸ்ஸாலி இமாம் (ரஹ்) அவர்களோ, அல்இமாமுல் கத்தீப் முஹம்மதுல் மதனி (ரஹ்) அவர்களோ இயற்றியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. ‘இயற்றியவர் யார்?’ என்று திட்டவட்டமாக தெரியவில்லை. (ஆதாரம் : சுந்தரத் தமிழில் சுப்ஹான மவ்லித் பக்கம் : 5)
சுப்ஹான மவ்லிதின் பெயர் காரணம்?
இந்த மவ்லித் ”ஸுப்ஹான அஸீஸில் ஃகஃப்பார் என்று தொடங்குவதால் இதன் முதல் சொல்லான ஸுப்ஹான என்பதே இந்த மவ்லிதுக்குரிய பெயராக அமைந்தது. (ஆதாரம் : சுந்தரத் தமிழில் சுப்ஹான மவ்லித் பக்கம் : 5)
‘மவ்லித்’ என்பதின் பொருள்
‘மவ்லிது’ எனும் அரபிச் சொல்லின் அகராதிப் பொருள் ‘பிறந்த நேரம்’ அல்லது ‘பிறந்த இடம்’ என்பதாகும். (ஆதாரம் : சுந்தரத் தமிழில் சுப்ஹான மவ்லித் பக்கம் : 8)
மவ்லித் ஓதுதலை உருவாக்கியவர் யார்?
மவ்லிது ஓதும் அமலை அரசின் பெருவிழாக்களில் முக்கியம் வாய்ந்த ஒன்றாக முதலில் ஏற்படுத்திவர்,தலை சிறந்த-வள்ளல் தன்மை மிக்க-அரசர்களில் ஒருவரான ‘அல்மலிக்குல் முழஃப்ஃபர் அபூஸயீத் கவ்கப்ரீ – பின்- ஸைனுத்தீன் அலிய்யிப்னு புக்தகீன்’ என்பவர் ஆவார். (ஆதாரம் : சுந்தரத் தமிழில் சுப்ஹான மவ்லித் பக்கம் : 13)
ஆஹா மெகா ஆஃபர்
உங்கள் நோக்கம் நிறைவேற உங்களுக்கு முழுயைக பாதுகாப்பு பெற வருடத்தில் ஒருமாதம் மெகா ஆஃபர் நாள் வந்துள்ளது என்று மவ்லித் பிரியர்கள் அறிவித்துள்ளனர்.
மவ்லிது ஓதுவது அந்த வருடம் முழுவதும் பாதுகாப்பாகவும் நாட்டத்தையும் நோக்கத்தையும் அடையச் செய்வதின் மூலமாக உடனடியான நற்செய்தியாகவும் அமைந்திருப்பது மவ்லிதின் தனித்தன்மைகளைச் சார்ந்ததென்று அனுபவத்தின் வாயிலாக அறியப்பட்டிருக்கின்றதென இமாம் கஸ்தலானி (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள். (ஆதாரம் : சுந்தரத் தமிழில் சுப்ஹான மவ்லித் பக்கம் : 11)
ஈமானின் வெற்றிக்கு இலகுவான வழி
மறுமையில் வெற்றிபெற தொழுகை நோன்பு போன்ற எந்த கடமையும் செய்யாமல் இலகுவாக செல்லும் வழியை சொல்லுகிறார்கள் மவ்லித் பிரியர்கள்.
”திருநபி (ஸல்) அவர்களின் மவ்லிது சபைக்கு ஒருவர் வருகை தந்து, அவர்களின் மகத்துவத்தை ஒருவர் கண்ணியப்படுத்தினால் அவர், ஈமானின் மூலம் வெற்றிபெற்றுவிட்டார்” (ஆதாரம் : சுந்தரத் தமிழில் சுப்ஹான மவ்லித் பக்கம் : 11)
ஆனால் அல்லாஹ்வின் வெற்றிப்பெற்றவர்களை யார்? அவர்களின் நடவடிக்கைள் என்ன? என்று கூறுவதை பாருங்கள் : நம்பிக்கை கொண்டோர் வெற்றி பெற்று விட்டனர்,(அவர்கள்) தமது தொழுகையில் பணிவைப் பேணுவார்கள். வீணானதைப் புறக்கணிப்பார்கள். ஸகாத்தையும் நிறைவேற்றுவார்கள். தமது மனைவியர் அல்லது தமது அடிமைப் பெண்களிடம் தவிர, தமது கற்பைக் காத்துக் கொள்வார்கள். அவர்கள் பழிக்கப்பட்டோர் அல்லர்.இதற்கு அப்பால் (வேறு வழியை) தேடியவர்களே வரம்பு மீறியவர்கள். தமது அமானிதங்களையும், தமது உடன்படிக்கையையும் அவர்கள் பேணுவார்கள். மேலும் அவர்கள் தமது தொழுகை களைப் பேணிக் கொள்வார்கள். பிர்தவ்ஸ் எனும் சொர்க்கத்திற்கு அவர்களே உரிமையாளர்கள். அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள்.(23 : 1-11)
செலவு செய்யும் முறை
நம்மிடம் இருக்கும் செல்வத்தை எவ்வாறு செலவு செய்வது என்பதை மவ்லிது பிரியர்கள் கூறுவதை பாருங்கள் : ”உஹது மலையளவு தங்கம் என்னிடம் இருக்குமானால் நான் அதை நாயகம் (ஸல்) அவர்கள் மீது மவ்லிது ஓதுவதற்காகச் செலவு செய்ய விரும்புவேன்” என்று ஹஜ்ரத் ஹஸன் பஸரீ அவர்கள் கூறினார்கள். (ஆதாரம் : சுந்தரத் தமிழில் சுப்ஹான மவ்லித் பக்கம் : 11)
ஆனால் திருக்குர்ஆனும் நபி மொழிகளும் கூறுவதை பாருங்கள்
தாம் எதைச் செலவிட வேண்டும் என்று உம்மிடம் கேட்கின்றனர். “நல்லவற்றிலிருந்து நீங்கள் எதைச் செலவிட்டாலும் பெற்றோருக்காகவும், உறவினருக்காகவும், அனாதைகளுக்காகவும், ஏழைகளுக்காகவும், நாடோடிகளுக்காகவும் (செலவிட வேண்டும்.) நீங்கள் எந்த நன்மையைச் செய்தாலும் அல்லாஹ் அதை அறிந்தவன்” எனக் கூறுவீராக! (அல்குர்ஆன் 2 : 214)
மவ்லித் சாப்பாடு கொடுத்தால் சுவர்க்கம்?
”மாநபி (ஸல்) மவ்லிது ஓதுவதற்காக ஒருவர் உணவு தயாரித்து முஸ்லிம் சகோதரர்களைத் திரட்டினார். அந்த மவ்லிதைக் கண்ணியப்படுத்துவதற்காக நறுமணம் பூசினார். புத்தாடை புனைந்தார். தன்னையும் சபையையும் அலங்கரித்தார். விளக்குகள் ஏற்றினாரென்றால் அத்தகையவரை மறுமை நாளில் நபிமார்கள் அடங்கிய முதல் பிரிவுடன் அல்லாஹ் எழுப்புவான். மேலும் அவர் நல்லோரின் ஆன்மா ஒதுங்கும் இல்லிய்யீன் திருத்தலத்தின் உயர்நிலையில் இருப்பார்” (ஆதாரம் : சுந்தரத் தமிழில் சுப்ஹான மவ்லித் பக்கம் : 12)
அமுத சுரபி மவ்லித்
அள்ள அள்ள குறையாத அமுத சுரபியாக செல்வத்தை அள்ளித்தரும் பாத்திரம் மவ்லிதாம்.
”நாயகம் (ஸல்) அவர்கள் மீது மவ்லிது நிகழ்ச்சி நடத்துவதற்காக ஒருவர் தங்கம் அல்லது வெள்ளி நாணயங்களைத் தனியாக உண்டியலில் சேமித்து மவ்லிது நிகழ்ச்சி நடத்தியபின் எஞ்சிய நாணயங்களுடன் கலந்து விட்டாரெனில் இந்த நாணயங்களின் ‘பரக்கத்’ ஏனைய நாணயங்களிலும் ஏற்பட்டு விட்டது. இந்த நாணயம் வைத்திருப்பவர் வறுமை நிலை அடையமாட்டார்.மாநபி (ஸல்) மவ்லிதின் பரக்கத்தினால் இவரின் கை நாணயங்களை விட்டுக் காலியாகாது”. (ஆதாரம் : சுந்தரத் தமிழில் சுப்ஹான மவ்லித் பக்கம் : 12)
நல்லாடியர்களுடன் சுவர்க்கத்தில் இருக்க சுலபமான வழி
எந்த சிரமமும் இல்லாமல் சுவர்க்கத்திற்கு செல்ல அழகான ஒரு வழியை காட்டுகிறது மவ்லித்.
”எந்த இடத்தில் எம்பெருமானார் (ஸல்) அவர்களின் மவ்லிது ஓதப்படுகிறதோ அந்த இடத்தை ஒருவர் நாடினால் நிச்சயமாக அவர் சுவனப்பூங்காக்களில் இருந்தும் ஒரு பூங்காவை நாடிவிட்டார். (ஆதாரம் : சுந்தரத் தமிழில் சுப்ஹான மவ்லித் பக்கம் : 12)
”நாயகம் (ஸல்) அவர்களின் மவ்லிதுக்காக ஒருவர் தனியிடத்தை ஒதுக்கி, முஸ்லிம் சகோதரர்களைத் திரட்டி உணவு தயாரித்து வழங்கி உபகாரம் பல செய்து மாநபி (ஸல்) மவ்லிது ஓதுவதற்குக் காரணமாக இருந்தால் இத்தகையவரை மறுமைநாளில் மெய்யடியார்கள்,ஷுதாக்கள் ஸலாஹீன்கள் குழுவினருடன் , அல்லாஹ் எழுப்புவான் மேலும் ‘நயீம்’ எனும் சுவனத்தில் மறுமையில் இவர் இருப்பார்” என்று எமன் நாட்டு மாமேதை இமாம் யாஃபிஈ (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள். (ஆதாரம் : சுந்தரத் தமிழில் சுப்ஹான மவ்லித் பக்கம் : 12)
படைத்தவன் கூறும் வழிமுறையை கவனியுங்கள் : அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் (முஹம்மதுக்கும்) கட்டுப்பட்டு நடப்போர், அல்லாஹ்வின் அருள் பெற்ற நபிமார்கள், உண்மையாளர்கள், உயிர்த் தியாகிகள், மற்றும் நல்லோருடன் இருப்பார்கள். அவர்களே மிகச் சிறந்த நண்பர்கள். (அல்குர்ஆன் 4 : 19)
மலக்குகளின் வருகை
”எந்தவொரு வீட்டிலோ பள்ளி வாசலிலோ மஹல்லாவிலோ மாநபி (ஸல்) மவ்லிது ஓதப்பட்டால் அவ்விடத்தைச் சார்ந்தவர்களை மலக்குகள் சூழ்ந்தே தவிர இல்லை. அவர்களைத் தன்கருணையினால் அல்லாஹ் சூழ வைத்துவிடுகிறான்” (ஆதாரம் : சுந்தரத் தமிழில் சுப்ஹான மவ்லித் பக்கம் : 13)
நபி (ஸல்) அவர்கள் கூறுவதைக் கேளுங்கள் : அல்லாஹ்வின் ஏதாவது ஒரு வீட்டில் ஒரு கூட்டத்தினர் ஒன்றிணைந்து அல்லாஹ்வின் வேதத்தை ஓதி அதை தங்களுக்குள் பாடம் நடத்தினால் அவர்கள் மீது அமைதி இறங்கும் அவர்களை ரஹ்மத் சூழ்ந்து கொள்ளும் மலக்குமார்கள் அவர்களை போர்த்திக் கொள்ளவார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல் : முஸ்லிம் (4867)
மவ்லிதுகள் தீனுக்காக அல்ல! தீனிக்காக!
மாநபி (ஸல்) மவ்லிதையொட்டி இந்த (அல்மலிக்குல் முழஃப்ஃபர் அபூஸயீது கவ்கப்ரீ பின் ஸைனுத்தீன் அலிய்யிப்னு புக்தகீன்) மன்னர் ஏற்பாடு செய்த விருந்து வைபவத்தில் ஒரு முறை பங்கேற்றவர்களில் ஒருவர் கூறுகிறார்.’ அவ்விருந்தில் சமைக்கப்பட்ட ஐயாயிரம் ஆட்டுத் தலைகள், பத்தாயிரம் கோழிகள், ஒரு இலட்சதம் வெண்ணெய்ப் பலகாரங்கள் முப்பதாயிரம் ஹல்வா தட்டைகள் இருந்தன. அந்த விருந்தில் ஞானிகள் மற்றும் சூஃபிகளின் தலைவர்களும் பங்கேற்றனர்.
அவர்களுக்கொல்லாம் மன்னர், பொன்னாடைகள் போர்த்திக் கவுரவித்தார்,மேலும் அன்பளிப்புகளும் வழங்கினார். லுஹர் முதல் சுபுஹ் வரை சூஃபிகளுக்காவே மன்னர் தனியாக ஒரு இசையரங்கம் ஏற்பாடு செய்தார். அதில் பாடப்பட்ட பேரின்பப்பாடல் கேட்டு குதித்துக் களித்த சூஃபிகளுடன் சேர்ந்து மன்னரும் பக்திப் பரவசத்துடன் ஆடினார்.
ஆண்டு தோறும் மூன்று இலட்சம் ரூபாயை மன்னர் முழஃப்ஃபர் மாநபி (ஸல்) மவ்லிதுக்காவே செலவிட்டார். (ஆதாரம் : சுந்தரத் தமிழில் சுப்ஹான மவ்லித் பக்கம் : 13)

Wednesday, February 10, 2010

விசாரிக்கப்படுவதற்கு முன்னர் விசாரித்துக் கொள்வோம்

ஒவ்வொரு நாள் முடிவிலும் அன்றைய தினத்தின் நம்முடைய நடவடிக்கைகள் பற்றிச் சிறிது சிந்தித்துப் பார்க்க வேண்டும். நாம் செய்த நன்மைகள் என்ன? தீமைகள் என்ன? சீர்திருத்தப்பட வேண்டியது என்ன? அதிகப்படுத்த வேண்டியது, தவிர்ந்து கொள்ள வேண்டியது என்ன? என்பன போன்ற கேள்விகளைக் கேட்டுக் கொள்வது நல்லது.
ஒவ்வொரு நாளும் இஸ்லாத்துடன் இருப்பதற்கு - உங்களது நினைவுக்குச் சில துளிகள் :-
Ö அதிகாலைத் தொழுகையை, அதன் குறித்த நேரத்தில், கூட்டாக இணைந்து, பள்ளியில் தொழுதீர்களா?
Ö ஐங்காலத் தொழுகைகளை பள்ளிவாசலில் வைத்து, முதல் ஜமாஅத்துடன் நிறைவேற்றினீர்களா?
Ö இன்றைய தினம் திருமறையில் இருந்து சில வசனங்களை ஓதினீர்களா?
Ö ஒவ்வொரு தொழுகையின் முடிவிலும் அல்லாஹ்வின் சில திருநாமங்களை (திக்ருகளை)த் துதித்தீர்களா?
Ö தொழுகைக்கு முன்பும் அல்லது பின்பும் உள்ள சுன்னத்தான தொழுகைகளை நிறைவேற்றினீர்களா?
Ö தொழுகையின் பொழுது நீங்கள் ஓதக் கூடிய வசனங்களின் பொருள்களை விளங்கி ஓதினீர்களா?
Ö மரணத்தையும், மரணத்திற்குப்பின் உள்ள விசாரணை நாள் பற்றியும் நினைவு கூர்ந்தீர்களா?
Ö மறுமைத் தீர்ப்பு நாள் பற்றியும், அந்த நாளின் கடுமை பற்றியும் நினைத்துப் பார்த்தீர்களா?
Ö யா அல்லாஹ்..! என்னை அந்த சுவனத்தினுள் பிரவேசிக்க அனுமதிப்பாயாக..! என்று மூன்று முறை கூறினீர்களா? ஏனென்றால், ''யா அல்லாஹ், என்னை சுவனத்தினுள் அனுமதிப்பாயாக - என்று மூன்று முறை கூறினால், அந்த சுவனம் (இவ்வாறு) பதிலளிக்கின்றது : யா அல்லாஹ், அவன் அல்லது அவளை என்னுள் நுழைந்து விட அனுமதிப்பாயாக..! (என்று சுவனம் அல்லாஹ்விடம் மன்றாடுகின்றது). (திர்மிதீ)
Ö இறைத்தூதர் (ஸல்) அவர்களின் நபிமொழி ஒன்றையேனும் இன்று வாசித்தீர்களா?
Ö தீமைகளிலிருந்து விலகிக் கொள்ள வேண்டும், அத்தகைய தீங்கினைச் செய்து கொண்டிருப்பவர்களிடமிருந்தும் விலகிக் கொள்ள வேண்டும் என்று நினைத்தீர்களா?
Ö அதிகமான சிரிப்பு, அதிகமான ஜோக்குகள் இவற்றினைத் தவிர்ந்து வாழ முயற்சித்தீர்களா?

Tuesday, February 9, 2010

Indian Engineering Services Exam 2010

The Union Public Service Commission (UPSC) announces the Indian Engineering Service (IES) examination 2010 to commence from 26-Jun-2010. The examination is used to fill various engineering positions in Indian Government.

Eligibility
Aged between 21 to 30,
Degree in Engineering or equivalent
Physically fit

Selection Process
IES Written Examination 2010 will be conducted from 26-Jun-2010
Selected Candidates will be called for a personality test

How to Apply
UPSC will open an online application for IES 2010. The online application form will open from 06-Feb-2010

Alternatively, Candidates can also Apply on the UPSC common application form which is available at all Head Post Offices, with an application fee of Rs100/- in the form of Central Recruitment Fee Stamps

Important Dates
02-Mar-2010 Last Date To Apply
Candidates applying from remote areas can send their application by 16-Feb-2009

Further Info
Visit UPSC website at http://www.upsc. gov.in

Thursday, February 4, 2010

தொழுகை

நிச்சயமாக தொழுகை, (அதை நிறைவேற்றுபவரை) மானக்கேடான செயலிலிருந்தும், (மார்க்கத்தில்) மறுக்கப்பட்டவற்றிலிருந்தும் தடுக்கும். நிச்சயமாக, (தொழுகையின் மூலம்) அல்லாஹ்வை நினைவுகூறுவது (எல்லாவற்றையும் விட) மிகவும் பெரிதாகும். நீங்கள் செய்பவைகளை அல்லாஹ் நன்கு அறிகிறான்.

அல்குர்ஆன் 29:45

'நாளை (மறுமையில்) அல்லாஹ்வை முஸ்லிமாக ஒருவன் சந்திக்க விரும்பினால் பாங்கு கூறி அழைக்கப்பட்டதும், ஐந்து நேரத் தொழுகைகளைப் பேணட்டும். நிச்சயமாக அல்லாஹ், உங்களின் நபிக்கு நேரான வழிமுறைகளை கடமையாக்கி உள்ளான். நிச்சயமாக இவைகளும் நேரான வழிமுறைகளில் உள்ளவைகளே. தொழுகைக்கு வரப் பிந்தியவர் தன் வீட்டில் தொழுதவர் போல், உங்கள் வீடுகளிலேயே நீங்கள் தொழுதால்; உங்கள் நபியின் வழிமுறை விட்டவர்களாவீர்கள். உங்கள் நபியின் வழிமுறையை நீங்கள் விட்டுவிட்டால், நீங்கள் வழிதவறியவராவீர்கள்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பாளர்: இப்னு மஸ்ஊத் (ரலி),  நூல்: முஸ்லிம்

'கூட்டுத் தொழுகை என்பது, தனித்துத் தொழுவதை விட தகுதியால் 27 மடங்கு சிறந்ததாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பாளர்: இப்னு உமர் (ரலி),  நூல்: புகாரி, முஸ்லிம் 'ஒருவர், மற்றவருடன் கூட்டாகத் தொழுவது, தன் வீட்டில், தன் கடையில் தனித்துத் தொழுவதைவிட 25 மடங்கு கூடுதல் நன்மையாகும். ஒருவர் அழகிய முறையில் உளூச் செய்து, பின்பு தொழுகைக்காகவே தவிர வேறு எதற்குமின்றி பள்ளிவாசலுக்கு வந்தால், அவர் எடுத்து வைக்கும் ஒவ்வொரு காலடிக்கும் ஒரு பதவி உயர்த்தப்படாமல் இருப்பதில்லை. அவர் தொழுது முடித்ததும், தான் தொழுத இடத்தில், தன் உளூ முறியாமல் அவர் அமர்ந்திருந்தால், வானவர்கள் அவருக்காக, 'இறைவா! இவரை மன்னிப்பாயாக! இறைவா! இவருக்கு அருள்புரிவாயாக என்று கூறி பிரார்த்திப்பார்கள். அவர் (மறு) தொழுகையை எதிர்பார்த்திருக்கும் வரை இது நீடிக்கும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி),  நூல்கள்: புகாரி, முஸ்லிம்


'என் உயிரை தன் கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக, விறகு கொண்டுவர நான் கட்டளையிட்டுவிட்டு, பின்பு தொழுவதற்காக பாங்கு கூற கட்டளையிட்டு, அதன்பின் ஒருவரை மக்களுக்கு இமாமத் செய்யச் சொல்லிவிட்டு (தொழுகைக்கு வராத) ஆண்களிடம் நான் சென்று அவர்களை அவர்களின் வீட்டோடு எரித்துவிட விரும்புகிறேன்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி),  நூல்கள்: புகாரி, முஸ்லிம்

'நயவஞ்சகர்களுக்கு சுப்ஹு, இஷா தொழுகைகளை விட கடுமையானதாக வேறு எதுவும் இல்லை. அவ்விரண்டிலும் உள்ளதை (சிறப்பை) அவர்கள் அறிந்து கொண்டால், தவழ்ந்தேனும் அவ்விரண்டுக்கும் வருவார்கள்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்கள்: புகாரி, முஸ்லிம்

Tuesday, February 2, 2010

தொ(ல்)லைக் காட்சிகள்

இந்தியாவில் சின்னத்திரையில் ஹிந்தி சேனல்களுக்கு அடுத்து தமிழகத்தில் தான் மிக அதிகமான சேனல்கள் உள்ளன. தமிழகத்தில் மட்டும் 14 தமிழ் சேனல்கள் உள்ளன. இது தவிர அந்தந்த ஊர்களில் கேபிள் டி.வி. இணைப்பு தருபவர்கள் தனியாக உள்ளூர் சேனல்களை நடத்தி வருகின்றனர்.
மக்களைச் சிந்திக்க விடாமலும், நற்காரியங்களைச் செய்யவிடாமலும் தடுக்கும் முதல் சாதனமாக இந்தத் தொலைக்காட்சிகளே உள்ளன.
ஆரம்பத்தில் இலவச சேனல்களாக இருந்த பல சின்னத்திரைச் சேனல்கள், இன்று கட்டணச் சேனல்களாக மாறி உள்ளன. மக்களுக்கு இலவசமாக சில காலங்கள் உருப்படாத காட்சிகளைத் தந்து, அதில் அவர்களை அடிமையாக்கி, பின்னர் அவர்கள் மூலம் கொள்ளை லாபம் அடிக்கத் தீட்டம் தீட்டி செயல்படுகின்றன பல முன்னணி சேனல்கள்.
சமீபத்தில் இலவச சேனலாக இருந்த முன்னணி டி.வி. சேனல் ஒன்று, கட்டண சேனலாக மாற்றப் பட்டது. இதற்காக கேபிள் டி.வி. உரிமையாளர்கள் கட்டணத்தைக் கடுமையாக உயர்த்தினர். அந்த டி.வி. சேனல், ஒரு வீட்டின் இணைப்பிற்கு மட்டும் 32 ரூபாய் கேட்பதாக கேபிள் உரிமையாளர்கள் கூறுகின்றனர். இதனால் சுமார் 50 ரூபாய் வரையிலும் கூடுதலாகக் கட்டணத்தை உயர்த்தியுள்ளனர்.
இதன் மூலம் மாதத்திற்குப் பல கோடி ரூபாய்களை அள்ளிக் கொண்டிருக்கிறது அந்த டி.வி. சேனல்.
கடுமையான கட்டண உயர்வை ஏற்று இன்றும் ஏராளமானோர் அந்த சேனல்களைப் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். நல்ல செய்திகள் நிறைந்திருந்தால் அதற்காக செலவழிப்பதில் தவறில்லை. முழுக்க முழுக்க சினிமா, சீரியல் என்று மக்களை அடிமைப்படுத்தி நல்ல செயல்களைச் செய்யவிடாமல் தடுக்கும் இவற்றிற்குப் பணம் கொடுத்துப் பார்க்க வேண்டுமா?
டி.வி. பார்ப்பதில் முத­டம் வகிக்கும் பெண்களை நாடகத்தில் அடிமையாக்கி இப்போது அறுவடை செய்கிறார்கள்.
குறிப்பாக, பெரும்பாலான சின்னத்திரைச் சேனல்களில் மக்களுக்குப் பயன் தரும் செய்திகள் மிக மிகக் குறைவு தான். அதிலும் அந்த டி.வி.யை எடுத்துக் கொண்டால் காலை 11.00 மணிக்கு ஆரம்பித்து இரவு 12.00 மணி வரையும் தொடர் நாடகங்கள். அதில் மூட நம்பிக்கையை ஊக்குவிக்கும் நாடகங்களும் அடக்கம்.
பெரும்பாலான நாடகங்கள் சமூகச் சீரழிவையே ஏற்படுத்துகின்றன. தவறுகள் எந்த விதத்திலெல்லாம் செய்யலாம் என்பதற்கு இந்த நாடகங்கள் நல்ல (?) வழி காட்டுகின்றனர். இதனால் கெட்டுப் போனவர்கள் ஏôரளம்.
இடையில் சில நிமிடங்கள் செய்திகள் வருகின்றன. அவை அனைத்தும் அந்த டி.வி. சேனல் சார்ந்துள்ள கட்சிக்கு ஆதரவான செய்திகள். அல்லது அந்தக் கட்சியைப் பாதிக்காத செய்திகள். நாட்டில் எவ்வளவு பெரிய ஆர்ப்பாட்டம் நடந்தாலும் அந்தக் கட்சிக்கு எதிராக இருந்தால் முழுமையாக இருட்டடிப்புச் செய்யப்படுகிறது. இதனால் உண்மையான செய்திகளை அதில் காணமுடிவதில்லை.
முழுக்க முழுக்க பயனற்ற நாடகங்கள், சினிமா, ஆபாசம், வன்முறைகள் நிறைந்த இந்தத் தொலைக்காட்சியைப் பார்ப்பதற்காக எவ்வளவு கட்டண உயர்வையும் ஏற்க மக்கள் குறிப்பாகப் பெண்கள் தயாராக உள்ளனர்.
சின்னத்திரையில் வர்த்தக விளம்பரங்கள் மூலம் நல்ல லாபத்தைக் கண்டு வரும் முதலாளிகள், கட்டண அலைவரிசையாக மாற்றி இன்னும் கொள்ளை லாபம் அடிக்கின்றனர்.
தென் மாநிலங்களில் விளம்பரக் கட்டணம் கடுமையாக உள்ள ஒரே சேனல் அந்த டி.வி. மட்டுமே! வர்த்தக விளம்பரம் மூலம் கடுமையான வருமானம் கிடைத்தாலும் நடுத்தர வர்க்கத்தினர் மடியிலும் கை வைக்கத் துவங்கியுள்ளனர் அந்த டி.வி. உரிமையாளர்கள்.
எந்தத் தொலைக்காட்சியாக இருந்தாலும் நல்ல விஷயங்களுக்கு மட்டுமே மக்களிடம் வரவேற்பு கிடைக்கும் என்ற நிலையை உருவாக்கினால் தரமான செய்திகளும் உண்மை நிலவரமும் நமக்குக் கிடைக்கும்.
கட்டணங்களை கடுமையாக உயர்த்தும் போது அந்த டி.வி. சேனல்களை மக்கள் முற்றிலுமாகப் புறக்கணித்தால் இது போன்ற கடுமையான கட்டண உயர்வு ஏற்படாது.

Govindakudi Mosque

zakat calculator