Sunday, June 6, 2010
வீட்டுக்கே வரும் " மொபைல் பள்ளி "
திருப்பூர் : குழந்தைகளுக்கு நல்ல கல்வியை தர வேண்டும் என்பதில் பெரும்பாலான பெற்றோர் அதிக ஆர்வமாக உள்ளனர். இதனால், ஒரு வயது நிரம்பிய குழந்தைகளுக்கு "கிரீச்' என்று துவங்கி, "பிளே ஸ்கூல்', "கின்டர் கார்டன்' என ஐந்து வயது நிரம்பும் முன்பே குழந்தைகள் கல்வி கற்க துவங்கி விடுகின்றனர்.
திருப்பூரில், குழந்தைகளுக்கான "மொபைல் பள்ளி' ஒன்று செயல்பட்டு வருகிறது. பிரத்யேகமாக வடிவமைக்கப் பட்டுள்ள ஒரு பஸ்சில் இந்த மொபைல் பள்ளி இயங்குகிறது. பஸ்சிற்குள் கரும்பலகை, புத்தகங்கள் என வகுப்பறையில் உள்ள அத்தனை வசதிகளும் உண்டு. பாடத்துடன் நடனம், விளையாட்டு ஆகியவையும் கற்றுத் தரப்படுகின்றன. மொபைல் பள்ளியில், குழந்தைகளுக்கான பாடப் புத்தகங்கள், சிலேட், பென்சில் என அனைத்தும் இலவசம். தினமும் முட்டை, பயறு, வாழைப்பழம் ஆகியவையும் வழங்கப்படுகின்றன. தனியார் நிறுவனம் ஒன்று நடத்தும் அறக்கட்டளை சார்பில் இந்த மொபைல் பள்ளி நடத்தப்படுகிறது. ஆதரவற்ற குழந்தைகள், பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த மற்றும் கிராமப்புற குழந்தைகள் மட்டுமே இப்பள்ளியில் சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர். சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த ஒரு நிறுவனத்துடன் இணைந்து செயல் படுத்தப்படும் இந்த மொபைல் பள்ளியில் இருந்து இதுவரை ஆயிரம் குழந்தைகள் படித்து, முடித்து வெளியேறியுள்ளனர். புத்தக மூட்டைகளை தூக்கிக் கொண்டு, மூச்சிறைக்க பள்ளி செல்ல வேண்டிய அவசியம் இல்லாமல், ஏழை, எளிய குழந்தை களைத் தேடி ஓடி வரும் மொபைல் பள்ளியின் சேவை பாராட்டுக்கு உரியது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment