Tuesday, June 1, 2010

கைசேதப்படுவதற்கு முன் விழித்துக் கொள்வோம்


ஒரு தொலைபேசி அழைப்பு, புதியதொரு இலக்கம். அவள் பதிலளிக்க வில்லை. மீண்டும் அதே இலக்கத்திலிருந்து அழைப்பு வருகின்றது. அவள் பதிலளிக்கவில்லை. இவ்வாறு பல தடவைகள் அதே இலக்கத்திலிருந்து அழைப்புகள் வந்து கொண்டிருந்தன. ஆனால் அவள் பதிலளிக்கவில்லை. அழைப்பை மேற்கொண்டவன் சலிப்படையவில்லை. அவளோடு பேச வேண்டு மென்பதில் அவன் உறுதியாக இருந்தான். அவளுக் குப் பின்னால் அழைந்து திரிந்தான். இறுதியாக அவள் ஒருநாள் அவனு டன் பேசுவதற்காக நின்றாள். அவன் தனது ஏக்கங்களை, கவலைகளை சொன்னான். அவன் அவளை மிக வும் அதிகமாக விரும்பினான். அவ னது உள்ளம் முழுவதும் அவளே நிறைந்தி ருந்தாள். அவன் பேசுவதை அவன் கேட்காவிட்டால் தன்னை அழித்துக் கொள் வதாக அவன் சொன்னான்.அவளுக்கு அவன்மீது இரக்கம் ஏற்பட்டது. அவனுடைய பேச்சைக் கேட்டாள். எவ்வளவு இரக்கம் கொண்டவனாக அவன் இருக்கின் றான் என்பதை அவள் அறிந்து கொண்டாள். கொஞ்சம் கொஞ்ச மாக ஷைத்தான் அவளை ஆக்கிர மித்தான். அந்த இளைஞனுடன் அவள் தொலைபேசியில் உரையா டலானாள். பின்னர் இருவரும் பாதைகளிலும் சந்தித்துக் கொண் டனர். அவர்களுக்கிடை யில் காதல் ஏற்பட்டது. அதன் பின்னர் பாவங் கள் நிகழ்ந்தன. பிறகு அவன் அவளை விட்டுவிட்டு வேறொரு இரையைத் தேடிச் சென்றுவிட்டான்.2. இன்னொரு இளைஞன் ஒரு யுவதியைப் பார்க்கின்றான். அவ ளோடு நட்பாகவும் அன்பாகவும் பேசுகின்றான். அவளும் உரையா டலில் கலந்துகொள் கின்றாள். காலம் செல்கின்றது. அவர்களு டைய நட்பு திருமணம் போன்று மாறிவிட்டது. ஆனால், அவர்கள் திருமணம் முடிக்கவில்லை. அவ ளுடைய உடலிலே உணர்ச்சியின் நெருப்பு பற்றியெரிந்தது. முடிவு எப்போதும்போல இழிவானதும் அவமானமானதுமாக அமைந்தது.அவன் அவளைவிட்டுவிட்டுச் சென்றுவிட்டான். பொறுப்பாள ரின் அனுமதி யின்றி அவனது கைப்பட எழுதிய திருமண ஒப்பந் தத்தை மறைத்துவிட்டான். அவள் ஒரு தந்தையில்லாத குழந்தைக்கு தாயாகின்றாள். பின்னர் எதிர்காலம் சூனியமானநிலையில் அவள் தனது காலத்தை கழிக்கின்றாள்.3. குடும்ப சந்திப்புகளின் போது இரண்டு குடும்ப அங்கத்தவர்களும் பரஸ்பரம் நல்ல முறையில் உரை யாடிக் கொள்கின்றனர். இரு குடும் பத்தவர்களினதும் பிள்ளைகளும் சகோதர சகோதரிகளாக பழகிக் கொள்கின்றனர். அவர்களில் ஒரு இளைஞனுக்கும் யுவதிக்குமிடையில் நெருக்கம் அதிகரிக்கின்றது. பின்னர் தொலைபேசி ஊடாகவும் தொடர்புகள் நீடிக்கின்றன. அதன் பின்னர் அவளுக்கு துயரங்களும் வேதனைகளும்தான் எஞ்சியிருக்கின்றன.4. இரண்டு நண்பர்கள் இருந் தார்கள். அவர்களது குடும்பங்கள் அடிக்கடி சந்தித் துக் கொள்ளும். அவன் அவளது கணவனுக்கு சகோ தரன் போலாவான். அவள் அவனது மனைவிக்கு சகோதரி போலாவாள். அவர்களுக்கிடையில் நட்பு ஏற்பட் டது. அவள் கணவனை விட்டுவிட்டாள். வளரும் பருவத்திலிருந்த பிள்ளை களை விட்டுவிட்டாள். தனது உள்ளத்தை கணவனின் நண் பனிடம் இழந்து விட்டாள். கணவ னிடம் விவாகரத்துக் கோரினாள்.மேற்கூறிய சம்பவங்கள் எமது சமூகத்தில் நிகழ்ந்துகொண்டுதானி ருக்கின்றன. இந்த அழுக்குகளை விட்டும் எமது சமூகத்தை பாது காக்க வேண்டியிருக் கின்றது.அன்பிற்குரியவர்களே அல்லா ஹுத்தஆலா முஸ்லிம் பெண்ணிற்கு ஒரு தங்க கிரீடத்தை ஏற்படுத்தியி ருக்கின்றான். அவள் அதன்மூலம் தன்னைப் பாதுகாத் துக் கொள்வ தோடு ஏனையவர்களையும் பாது காக்கின்றாள். அந்த கிரீடம்தான் ஹிஜாப் ஆகும். அது அவளது தூய் மையையும் அவளது கற்பையும் அவளது பார்வையையும் ஏனையவர்களின் பார்வை அவள்மீது விழுவதையும் தடுக்கின் றது.இந்த கிரீடத்தின் கருத்து இஸ்லாம் பெண்ணுக்களித்துள்ள கண் ணியமும் பாதுகாப்புமாகும். சில மேற்கத்தேய வாதிகளும் மனித உரிமை செயற்பாட் டாளர்களும் சொல்வது போல ஹிஜாப் அவளுக்கு ஒரு சிறையல்ல. அவளு டைய உரிமைகளை அது குழிதோண்டிப் புதைக்கவில்லை. மாற்றமாக அது தான் அவளது சுதந்திரத்தின் இரத்தினமாக இருக்கின்றது. அதனால் தான் அவள் சமூகத்தில் கண்ணியத்துடன் நடமாடுகின்றாள்.அல்லாஹ்மீது ஆணையாக மேற்கத்தேயவாதிகளே! உங்களு டைய முயற்சி யின் மூலம் பெண்களுக்கு உரிமைகளைப் பெற்றுக் கொடுத்துள்ளீர்களா? அல் லது அவர்களை நிர்வாணப்படுத்தியுள் ளீர்களா? பெண்களை நிர்வாணப் படுத்தி அவர்களுக்கு பல சமூக நோய்களை ஏற்படுத்தியுள்ளீர்கள். மேற்கத்தேய பெண் ஒரு வியாபாரப் பொருளாக மாற்றப்பட்டிருக்கிறாள். அவர்களுடைய பார்வைக ளும் கரங்களும் உடல்களும் அவளை இம்சிக்கின்றன. இதனால் தான் இன்று மனித சமூகம் எதிர் நோக்கியுள்ள மிகப் பெரிய அழிவுகளுக்கு தீர்வுகளை தேட வேண்டிய நிலைமை மேற்கிற்கு ஏற்பட்டுள்ளது.ஆனால், இஸ்லாமிய சமூகம் அதன் ஹிஜாபுடன் இருக்கும் காலம் வரை பாது காப்பாக இருக்கும். அது குடும்பத்தின் பாதுகாப்பிற்கும் குழந்தை வளர்ப்பிற்கும் கணவனின் பெறுமதிக்கும் உதவி செய்கின்றது.நாம் ஷரீஆவின் வரையறைகளை மீறி ஆண், பெண் கலப்பதன் மூலம் பல பிரச்சினைகள் ஏற்படுகின்றன. எங்களுடைய குழந்தைகளுக்கு ஆபத்தான மரணத்தை நாம் ஏற் படுத்தி விடுகின்றோம். எங்களு டைய யுவதிகள் தமது கற்பையும் வெட்கத்தையும் இழந்துவிடுகின்றனர். எங்களுடைய இளைஞர்கள் தமது இளமையையும் ஆண்மையையும் இழந்து விடுகின்றனர். எனவே, எமது சமூகம் அதிகமான சக்திகளை இழந்துவிடுகின்றது.கற்பும் தூய்மையும், வழிகேடான பித்னாவை ஏற்படுத்துகின்ற இடங்களிலி ருந்து விலகி நிற்பதும் அல்லாஹுத்தஆலாவின் ஷரீஆவை இறுக்கமாகப் பற்றிப் பிடித்துக் கொள்வதும் இந்த சமூகத்தை அபி விருத்தியடைந்த நாகரிக முள்ள சமூகமாக மாற்றும்.அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்; நபியே நீர் முஃமினான ஆண்களுக்குக் கூறு வீராக, அவர்கள் தமது பார்வைகளை தாழ்த்திக் கொள்ளட்டும். தமது மர்மஸ் தானங்களைப் பாதுகாத்துக் கொள்ளட்டும். அது அவர்களுக்கு மிகவும் சிறந்த தாகும். நிச்சயமாக அல்லாஹுத்த ஆலா அவர்கள் செய்பவற்றை நன்கறிந்த வனாக இருக்கின்றான். நபியே நீர் முஃமினான பெண்களுக்குக் கூறுவீராக, அவர்கள் தமது பார்வைகளை தாழ்த்திக் கொள்ளட்டும்.தங்கள் மர்மஸ்தானங்களை பாதுகாத்துக் கொள்ளட்டும். அவர் கள் தமது அழகி லிருந்து இயல்பாக வெளிப்படுபவற்றைத் தவிர ஏனையவற்றை மறைத்துக் கொள்ளட்டும். தமது மேற்சட்டைகளின் மீது முந்தானைகளை போட்டுக் கொள் ளட்டும். அவர்கள் தமது அலங்காரத்தை தம் கணவர்கள், அல்லது தம் தந்தை யர் அல்லது தம் கணவர்களின் தந்தையர் அல்லது தம் பிள்ளைகள் அல்லது தம் கணவர்களின் பிள்ளைகள் அல்லது தம் சகோதரர்கள் அல்லது தம் சகோத ரர்களின் பிள்ளைகள் அல்லது சகோதரிகளின் பிள்ளைகள் அல்லது தங்களு டைய பெண்கள் அல்லதுதம் வலது கரம் சொந்தமாக் கிக் கொண்டவர்கள் அல்லது பெண்கள் மீது விருப்பற்ற பணியாளர்கள் அல்லது பெண்களின் மறை வான உறுப்புகளை தெரிந்து கொள்ளாத சிறுபராயத்தையுடைய சிறுவர்கள் ஆகியோரைத் தவிர வேறெவருக்கும் வெளிப்படுத்த வேண்டாம். மேலும் தம் அலங்காரத்திலிருந்து தாம் மறைத்திருப்பதை அறியப்படுவ தற்காக தம்மு டைய கால்களை (நிலத்தில்) அடிக்கவேண்டாம். விசுவாசிகளே நீங்கள் வெற்றி பெறுவதற்காக அல்லாஹ்வின் பக்கம் மீண்டும் தௌபாச் செய்யுங்கள்.இந்தக் கட்டுரையை ஒரு சகோதரி ஒரு சஞ்சிகை ஒன்றிற்காக கண்ணீருடனும் கைசேதத்துடனும் எழுதிய கடிதத்துடன் முடித்துக் கொள்ள விரும்புகின்றேன். அல்லாஹ் அவளுடைய பாவங்களை அவளுடைய தௌபாவிற்காக மன் னிக்க வேண்டுமென்று பிரார்த்திப்போம். அவளுடைய கதையில் எமக்கு படிப்பினை களும் உபதே சங்களும் இருக்கின்றன. அதுவே அல்லாஹ் அவளுக்கு பாவமன் னிப்பு வழங்குவதற்கு காரணமாக இருக்கலாம். அல்லாஹ் அவளை நரக நெருப்பிலிருந்து பாதுகாப்பானாக.பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்எனக்கு எங்கிருந்து தொடங்குவதென்று தெரியவில்லை.நான் எனது பேச்சை எங்கு முடிக்க வேண்டுமென்பதையும் அறியவில்லை.நான் மிகக் கசப்பான நிமிடங்களில் வாழ்ந்து கொண்டிருக்கின்றேன். எனது வாழ்க்கையில் மிகவும் கஸ்டமான பருவங்களில் நான் வாழ்ந்துகொண்டிருக் கின்றேன்.எனது கடிதத்தை நீங்கள் வாசித்தால் எனது கஷ்டங்களை அறிந்துகொள்வீர்கள்.பேனையின் மூடியை கழட்டுகின்றேன். எனது அனைத்து சக்திகளையும் எனது கவலைகளை கண்ணீரை எழுதுவதற்காக திரட்டுகின்றேன். உங்களது சஞ்சிகை யில் சவூதி அறேபியாவின் எயிட்ஸும் அதற்கான காரணங்களும் யதார்த்தங் களும்என்ற தலைப்பில் வெளியிட்டிருந்த கட்டுரையை வாசித்தேன்.அந்தத் தலைப்பு என்னை மிகவும் கஷ்டப்படுத்தியது. நீங்கள் என்னை விளங்கி யிருப்பீர்கள் என்று நம்புகின்றேன். நான் அந்த சஞ்சிகையின் நான்கு பிரதிகளை பணம் கொடுத்து ஏன் வாங்கினேன் என்பதை அறியவில்லை. சிலவேளை அந்தத் தலைப்பில் எனது பெயரையும் நான் கண்டது காரணமாக இருக்கு மென்று நம்புகின்றேன். என்னை ஒதுக்கிவிட வேண்டாம். ஆம், உண்மையில் நான் எயிட்ஸ் நோயால் பீடிக்கப்பட்டவள். நான் மரணத்தினை எதிர்பார்த்திருக் கின்றேன்.நான் சாப்பிடுவதில்லை. நான் குடிப்பதில்லை. அல்லாஹ்வின் நெருக்கத்தி னைத் தவிர வேறு எந்த சுவையையும் நான் அறியவில்லை. நான் தொழும் போது உண்மையான உணர்வை உணர்கின்றேன். நான் சுவனத்தில் நுழைய வேண்டுமென்று பிரார்த்திக்கின்றேன். சிலவேளை எனது எஞ்சிய வாழ்க்கையில் நான் தேடுகின்ற சந்தோசத்தை கண்டுகொள்ளலாம்.ஆம், உண்மையில் நான் எயிட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவள். சிலவேளை இது அல்லாஹ்வின் புறத்திலிருந்து வந்த சோதனையாக இருக்கலாம். ஏனெ னில் அதன் மூலம் சரியான பாதைக்கு நான் திரும்பியிருக்கின்றேன். நான் எயிட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டதற்கான காரணத்தை ஒருபோதும் சொல்ல மாட்டேன். நான் அதனைப் பற்றி சொல்வதற்கு வெட்கப்படுகின்றேன்.என்றாலும் இஸ்லாமிய யுவதிகளே உங்கள் இரட்சகனின் பால் மீண்டுவிடுங் கள். எல்லா விடயங்களும் அழிந்துவிடும் என்பதை அறிந்துகொள்ளுங்கள். யுவ திகளே ஹராமான இன்பங்களைவிட்டும் தூரமாகிக் கொள்ளுங்கள். அல்லா ஹுத்தஆலாவிற்கு கட்டுப்படுவதை விட்டுவிடுவதிலிருந்தும் தூரமாகிக் கொள் ளுங்கள். நான் உங்களுக்காக, நீங்கள் உங்கள் மார்க்கத்தின்பால், உங்கள் குடும் பத்தின்பால், உங்கள் கணவனின் பால் திரும்புவதற்காக பிரார்த்திக்கின்றேன். யார் அல்லாஹ்வுக்காக ஒரு செயலை விட்டு விடுகின்றாறோ அல்லாஹுத்த ஆலா அவருக்கு அதனை விட சிறந்ததொன்றைக் கொண்டு ஈடு செய்வான்.இஸ்லாமிய யுவதிகளே விழித்துக் கொள்ளுங்கள். மார்க்கமும் அதனைப் பற் றிப் பிடித்துக் கொள்வதும்தான் உங்கள் வெற்றிக்கான உண்மையான பாதையா கும். எனக்காக பிரார்த்தியுங்கள். எனக்கு அல்லாஹ்வின் அருளும் மன்னிப்பும் கிடைக்க வேண்டுமென்பதற்காக பிரார்த்தியுங்கள்.உங்கள் இஸ்லாமிய சகோதரிமனார்

No comments:

Post a Comment

Govindakudi Mosque

zakat calculator