Friday, June 25, 2010

முஸ்லீம்களுக்கு அரசின் இலவச கல்வி உதவி-தவற விடாதீர்!

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..)


தமிழக அரசின் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தபட்டோருக்கான 2010-2011 ஆண்டிற்கான கல்வி உதவி தொகையை அறிவித்து உள்ளது .
இந்த கல்வி தொகை 3 நிலைகளாக உள்ள மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது

1 - 10 வகுப்பு வரை


தகுதிகள் :

* கடைசியாக எழுதிய இறுதி தேர்வில் குறைந்தது 50% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்
* குடும்ப ஆண்டு வருமானம் 1 லட்சத்திற்கும் குறைவாக இருக்க வேண்டும்
* வேறு எந்த அரசு உதவியும் பெற்றிருக்க கூடாது
* ஒரு குடும்பத்தில் 2 பேருக்கு மேல் விண்ணப்பிக்க கூடாது

பயன்கள் :

* கல்வி கட்டணம் அதிக பட்சமாக வருடத்திற்கு 3500 ரூபாய்
* சேர்கை கட்டணம் அதிகபட்சமாக 500 ரூபாய்
* விடுதி மற்றும் ஊக்க தொகைகள் உண்டு
* கிராமத்திலிருந்து நகரத்திற்கு படிக்க வரும் முஸ்லிம் மாணவிகளுக்கு தங்கும் விடுதி மற்றும் உணவு இலவசம்
* ஒதுக்கப்பட்டுள்ள நிதி தொகை 11.62 கோடி

சமர்பிக்கப்பட வேண்டிய சான்றிதழ்கள் :

* சாதி சான்றிதல் நகல் (xerox)
* பிற்படுத்தப்பட்டோர் என்பதற்கான சான்று (அரசு அலுவலர்களிடமிருந்து பெறப்பட வேண்டும் )
* வருமான சான்றிதல் (அரசு அலுவலர்களிடமிருந்து பெறப்பட வேண்டும் )

சமர்பிக்கப்பட வேண்டிய கடைசி நாள்:
புதிதாக விண்ணப்பிபவர்களுக்கு ஆகஸ்ட் 10
புதுப்பிக்கும் மாணவர்களுக்கு ஜூலை 26

கூடுதல் தகவல்கள் :

* புதிதாக இந்த உதவியை விண்ணப்பிப்பவர்கள் இணைக்கப்பட்டுள்ள (prematric_fresh_appl) மற்றும் (prematric_claim) ஆகிய விண்ணப்பங்களை பூர்த்தி செய்யவும்
* ஏற்கனவே இந்த உதவியை பெற்றுகொண்டிருப்பவர்கள் புதிதாக விண்ணப்பிக்க தேவையில்லை , இணைக்கப்பட்டுள்ள புதுப்பித்தல் விண்ணப்பத்தை (Renewal form) (prematric_renewal_appl) மற்றும் (prematric_claim) ஆகிய விண்ணப்பங்களை பூர்த்தி செய்து உங்கள் சலுகையை புதுப்பித்து கொள்ளலாம்
* பூர்த்தி செய்யப்பட வினப்பதை உங்கள் கல்வி நிலையங்கள் குறிப்பிட்ட நாட்களுக்குள் சமர்பிக்கவும் , தாமதமாக சமர்பிக்கப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்

விண்ணப்பம் டவுன்லோட் செய்ய :




11, 12 , ITI, டிப்ளமோ , ஆசிரியர் பயிற்சி , பட்ட படிப்பு , பட்ட மேற்படிப்பு , ஆராய்ச்சி படிப்பு (Ph.D)

தகுதிகள் :

* கடைசியாக எழுதிய இறுதி தேர்வில் குறைந்தது 50% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்
* குடும்ப ஆண்டு வருமானம் 2 லட்சத்திற்கும் குறைவாக இருக்க வேண்டும்
* வேறு எந்த அரசு உதவியும் பெற்றிருக்க கூடாது

பயன்கள் :

* கல்வி கட்டணம் அதிக பட்சமாக வருடத்திற்கு 3000 முதல் 7000 வரை
* 30% கல்வி உதவி பெண்களுக்கு வழங்கப்படும்
* விடுதி மற்றும் ஊக்க தொகைகள் உண்டு
* கிராமத்திலிருந்து நகரத்திற்கு படிக்க வரும் முஸ்லிம் மாணவிகளுக்கு தங்கும் விடுதி மற்றும் உணவு இலவசம்
* ஒதுக்கப்பட்டுள்ள நிதி தொகை 11.60 கோடி

சமர்பிக்கப்பட வேண்டிய சான்றிதழ்கள் :

* சாதி சான்றிதல்
* பிற்படுத்தப்பட்டோர் என்பதற்கான சான்று (அரசு அலுவலர்களிடமிருந்து பெறப்பட வேண்டும் )
* வருமான சான்றிதல் (அரசு அலுவலர்களிடமிருந்து பெறப்பட வேண்டும் )
* உங்கள் மதிப்பெண் சான்றிதல் (Marksheet) நகல்களை (Xerox) இணைத்து அனுப்புவது சிறந்தது

சமர்பிக்கப்பட வேண்டிய கடைசி நாள்:
புதிதாக விண்ணப்பிபவர்களுக்கு ஆகஸ்ட் 10

புதுப்பிக்கும் மாணவர்களுக்கு ஜூலை 26

கூடுதல் தகவல்கள் :

* புதிதாக இந்த உதவியை விண்ணப்பிப்பவர்கள் இணைக்கப்பட்டுள்ள (prematric_fresh_appl) மற்றும் (prematric_claim) ஆகிய விண்ணப்பங்களை பூர்த்தி செய்யவும்
* ஏற்கனவே இந்த உதவியை பெற்றுகொண்டிருப்பவர்கள் புதிதாக விண்ணப்பிக்க தேவையில்லை , புதுப்பித்தல் விண்ணப்பம் (Renewal form) (prematric_renewal_appl) மற்றும் (prematric_claim) ஆகிய விண்ணப்பங்களை பூர்த்தி செய்து உங்கள் சலுகையை புதுப்பித்து கொள்ளலாம்
* பூர்த்தி செய்யப்பட வினப்பதை உங்கள் கல்வி நிலையங்கள் குறிப்பிட்ட நாட்களுக்குள் சமர்பிக்கவும் , தாமதமாக சமர்பிக்கப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்

விண்ணப்பம் டவுன்லோட் செய்ய :






தொழிற்படிப்புகள் ( Engineering )

தகுதிகள் :
* கடைசியாக எழுதிய இறுதி தேர்வில் குறைந்தது 50% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்

* குடும்ப ஆண்டு வருமானம் 2.5 லட்சத்திற்கும் குறைவாக இருக்க வேண்டும்

* வேறு எந்த அரசு உதவியும் பெற்றிருக்க கூடாது

பயன்கள் :

* கல்வி கட்டணம் அதிக பட்சமாக வருடத்திற்கு 20000 ரூபாய் அல்லது முழு கட்டணம் (இரண்டில் குறைந்தது )
* IIT (சென்னை ), NIT(திருச்சி ) , Indian Institute of Tech and Design managment (காஞ்சிபுரம் ), national Institute of fashion Technology ஆகிய கல்வி கூடங்களில் பயிலும் மாணவர்களுக்கு முழு கல்வி உதவி வழங்கப்படும்

* 30% கல்வி உதவி பெண்களுக்கு வழங்கப்படும்

* விடுதி மற்றும் ஊக்க தொகைகள் வருடத்திற்கு 10000 வரை

* கிராமத்திலிருந்து நகரத்திற்கு படிக்க வரும் முஸ்லிம் மாணவிகளுக்கு தங்கும் விடுதி மற்றும் உணவு இலவசம்

* ஒதுக்கப்பட்டுள்ள நிதி தொகை 8 கோடி


சமர்பிக்கப்பட வேண்டிய சான்றிதழ்கள் :
* சாதி சான்றிதல்

* பிற்படுத்தப்பட்டோர் என்பதற்கான சான்று (அரசு அலுவலர்களிடமிருந்து பெறப்பட வேண்டும் )
* வருமான சான்றிதல் (அரசு அலுவலர்களிடமிருந்து பெறப்பட வேண்டும் )

* உங்கள் மதிப்பெண் சான்றிதல் (Marksheet) நகல்களை (Xerox) இணைத்து அனுப்புவது சிறந்தது

சமர்பிக்கப்பட வேண்டிய கடைசி நாள்:
புதிதாக விண்ணப்பிபவர்களுக்கு ஆகஸ்ட் 10
புதுப்பிக்கும் மாணவர்களுக்கு ஜூலை 26

கூடுதல் தகவல்கள் :
* புதிதாக இந்த உதவியை விண்ணப்பிப்பவர்கள் இணைக்கப்பட்டுள்ள (MCM_Appln_form) விண்ணப்பத்தை பூர்த்தி செய்யவும்
* ஏற்கனவே இந்த உதவியை பெற்றுகொண்டிருப்பவர்கள் புதிதாக விண்ணப்பிக்க தேவையில்லை , புதுப்பித்தல் விண்ணப்பத்தை (mcm_renewal_claim) பூர்த்தி செய்து உங்கள் சலுகையை புதுப்பித்து கொள்ளலாம்
* பூர்த்தி செய்யப்பட விண்ணப்பத்தை உங்கள் கல்வி நிலையங்கள் குறிப்பிட்ட நாட்களுக்குள் சமர்பிக்கவும் , தாமதமாக சமர்பிக்கப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்


விண்ணப்பம் டவுன்லோட் செய்ய :






மேலும் விவரங்களுக்கு இந்த இணையதளத்தை பார்க்கவும் :


Friday, June 18, 2010

அமெரிக்காவின் எண்ணெய் யுத்தம்




2005ஆம் வருடம் ஆகஸ்ட் மாதம். அமெரிக்காவின் லூசியானா (Louisiana) மாநிலத்திலுள்ள நியூ ஆர்லியன்ஸ் (New Orleans) நகரை கேட்ரினா எனும கடும் புயல் தாக்கி சர்வ நாசமொன்றை உண்டாக்கியது. அப்போதைய அதிபர் ஜார்ஜ் புஷ்ஷும் அவருடைய நிர்வாகமும் மீட்புப் பணிகளை சரியான வகையில் கையாள முடியாமல் திணறினர். எதை ஒழுங்காகக் கையாண்டிருக்கிறார்கள் அதைச் செய்வதற்கு? கேட்ரினாவின் மீட்புப் பணிகளில் கிடைத்த அவமானத்தையெல்லாம் புஷ் வழக்கம்போல் துடைத்து, தன் கோட்டுப் பைக்குள் திணித்துக் கொண்டார். அமெரிக்க வரலாற்றிலேயே பெரும் இயற்கை அழிவாய் அது இடம் பெற்றது.
2010, ஏப்ரல் மாதம். ஐந்து வருடங்களுக்குப் பிறகு அதே லூசியானா மாநிலத்தின் கடலில் மற்றொரு பேரழிவு. இம்முறை புயல் இல்லை. கடலுக்கு அடியிலுள்ள எண்ணெய்க் கிணறு ஒன்று பொத்துக் கொண்டது. அதனுடன் ஆஜானுபாகுவான அமெரிக்கா தடுமாறி, அரையடியாகக் குன்றிப்போய் மல்லுக்கட்டிக் கொண்டிருப்பதை, உலகம் கிலியுடன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.

படத்தில் நீங்கள் பார்ப்பது, சினிமாவில் வரும் 3D டயனோஸர் குட்டியல்ல. அமெரிக்காவின் மானத்தைக் கப்பல் ஏற்றிக் கொண்டிருக்கும் கல்ஃப் ஆஃப் மெக்ஸிகோவின் கிணற்று எண்ணெயில் மூழ்கிச் சாகப் போகும் பல்லாயிரக் கணக்கான கடல் பறவைகளில் ஒன்றுதான் அது. கிணறு என்றால் கொல்லைபுறத்தில் வாளியில் கயிறு கட்டி இறக்கி நீரெடுப்பது போலெல்லாம் அல்லாமல், இது பெரிசு. அதன் பிரம்மாண்டத்தைப் புரிந்து கொள்ளச் சில தகவல்கள் பார்த்து விடுவோம்.

ஆழ்கடலில் எண்ணெய்க் கிணறு தோண்ட வடிவமைக்கப்பட்டது டீப்வாட்டர் ஹாரிஸான் (Deepwater Horizon) எனப்படும் கடற்தளம். சுமார் 396 அடி நீளமும் 256 அடி அகலமுமான தளம் அது. கடலில் உள்ள எண்ணெய்க் கிணற்றினைத் தேர்ந்தெடுத்து அதை உறிஞ்சி எடுக்கத் துளையிடும் வேலை நடந்து கொண்டிருந்தது. பிரிட்டிஷ் பெட்ரோலியம் நிறுவனம்(BP)தான் இந்தக் களத்தைக் குத்தகைக்கு எடுத்து, லூசியானா மாநிலத்திற்குத் தென்கிழக்கே 64 கி.மீ. தொலைவில், பணியில் ஈடுபட்டிருந்தார்கள். கல்ஃப் ஆஃப் மெக்ஸிகோ (Gulf of Mexico) கடலுக்கு அடியில் 5000 அடி ஆழத்தில் (சுமார் ஒன்றரை கிலோமீட்டர் தூரம்தான்) துளையிட்டு வேலை நடந்து கொண்டிருந்தது.

ஏப்ரல் மாதம், 20-ந் தேதி, இரவு 9:45 மணி இருக்கும். தளத்தில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. அடுத்து பிரம்மாண்டமாய் வெடித்தது. பணியில் ஈடுபட்டிருந்த 11 பேர் இறந்து விழுந்தார்கள். 98 பேர்வரை தப்பித்து விட்டார்கள். அடுக்கு மாடி கட்டட உயரத்திற்குக் கொழுந்து விட்டு எரிந்தது தீ. காப்பாற்ற விரைந்த படகுகளின் பெயிண்ட்டெல்லாம் அந்தத் தீயின் கொடிய வெப்பத்தில் உருகின. அந்தப் பிரம்மாண்டத் தீயை அணைக்க வாய்ப்பெல்லாம் இல்லாமல் 22ஆம் தேதி தளம் கடலில் முழுவதும் மூழ்கிப் போனது. "அய்யோ பாவமே!" என்று உச்சுக் கொட்டி அனுதாபப்பட்டு, பேருக்கு ஓர் இரங்கல் தெரிவித்துவிட்டு அடுத்த இரண்டாம் நாள் வேறு செய்திக்கு முன்னுரிமை தரமுடியாமல் மாபெரும் தலைவலி ஒன்று அமெரிக்காவை மெதுவாய், மிக மெதுவாய்ச் சூழ ஆரம்பித்தது. ஜுன் மாதம் தொடங்கியும் அது இன்னும் முடிந்த பாடில்லை.

என்ன பிரச்சினை? எண்ணெய்தான் பிரச்சினை; கச்சா எண்ணெய். இந்த விபத்தினால் கடலுக்கு அடியில் எண்ணெய்க் கிணற்றின் வாய் பிளந்து கொண்டு, அது பேரல் பேரலாகக் கச்சா எண்ணெயை கடலுக்குள் பீய்ச்சியடிக்க ஆரம்பித்து விட்டது. அதன் அளவைச் சரியாகக் கூட நிர்ணயிக்க முடியவில்லை. அவ்வளவு எண்ணெய். விண்கோள் படங்களின் உதவியைக் கொண்டு தோராயமாய் 5000 பேரல் எண்ணெய் கடலில் கலப்பதாய்க்க் கணக்கிட்டுள்ளார்கள். அதாவது தினமும் 160,000 லிட்டர். இந்தளவு எண்ணெய் கடலில் கலந்தால் எண்ணாகும்?

ஆரம்பத்தில் BP இதை எளிதாகத்தான் எடுத்துக் கொண்டது. "கடல் அளவைக் கணக்கில் கொண்டால் இதெல்லாம் ஜுஜுபி. அடக்கிடலாம்" என்றார்கள். 700 பணியாட்களும் நான்கு விமானங்களும் 32 படகுகளும் கடலிலிருந்து எண்ணெயை நீக்கி அப்புறப்படுத்த அமர்த்தப்பட்டன. கடல்மேல் மிதக்கும் எண்ணெயைச் சுற்றி மிதவைகளைக் கொண்டு கட்டுப்படுத்தி, அப்படியே கடலில் தொலைவுக்கு இழுத்துச் சென்று கொளுத்தி விடலாம் என்று ஒரு திட்டம் இருந்தது. "அதெல்லாம் முடியாது, நிலைமை ரொம்ப மோசம்" என்பதைப் பிற்பாடுதான் உணர்ந்தார்கள்.

தடுப்பு நடவடிக்கைகள் இல்லாமலா இத்தகைய ராட்சஷப் பணிகளில் ஈடுபடுவார்கள்? எல்லாம் இருந்ததுதான். விபத்து ஏற்பட்டால் தானாகவே இயங்கி, கிணற்றை மூடும் பாதுகாப்புச் சாதனம் இருந்தது. ஆனால், இந்த விபத்தில் அதுவும் பழுதடைந்து, அந்த ஒற்றைத் தடுப்பும் செயலற்றுப் போனது. அதனால், கடலின் அடியிலிருந்து எண்ணெய் நிற்காமல் பொங்கி எழுந்து கலக்க ஆரம்பித்து விட்டது. எண்ணெயில் கலப்படம் செய்வது நமக்குத் தெரியும். இங்கு எண்ணெய் கடலையே கலப்படமாக்க, பிரச்சனையின் பிரம்மாண்டம் BPக்கும் அமெரிக்காவிற்கும் மெதுவாய்ப் புரிய ஆரம்பித்தது.

சரி, கடலுக்கு அடியில் ரிமோட் மூலம் இயங்கக் கூடிய நீர்மூழ்கிப் படகுகளைச் செலுத்தி வால்வுகளை மூடிவிடலாம் என்று யோசித்தார்கள். அதற்காக ஆறு படகுகள் கடலுக்கு அடியில் செலுத்தப்பட்டன. அந்த முயற்சி தோல்வியுற்றது. ஏதாவது செய்து கடலில் கொட்டும் எண்ணெயை அடக்கியே ஆக வேண்டும்.என்ன செய்வது?

யோசித்தார்கள்.

அடுத்து 125 டன் எடையுள்ள பல அடுக்கு உயரமுள்ள கொள்கலம் ஒன்றைக் கடலுக்குள் இறக்கி, கிணற்றின் வாய்ப்பகுதியில் உட்கார வைத்து, அதன் மூலம் எண்ணெயை உறிஞ்சி, அது கடலில் கலக்காமல் கடலுக்கு மேலேயுள்ள கப்பலுக்கு இழுத்து விடலாம் என்று யோசனை சொன்னார்கள் பொறியாளர்கள். இவ்வளவு ஆழத்திலெல்லாம் அந்த செய்முறை இதற்குமுன் சோதித்துப் பார்க்கப்படவில்லை. ஏதாவது செய்துதானே ஆக வேண்டும். அதனால் அதை முயன்றார்கள். கசியும் வாயு கடலின் ஆழத்திலுள்ள கடும் குளிர் நீரில் இணைந்து, உறைந்து, அந்தக் கொள்கலத்தின் மேல்விதானத்தை அடைத்து விட்டது. கடலுக்குள் இறங்கிய அம்மாம் பெரிய கொள்கலம் பயனற்றுப் போனது.அந்த முயற்சியும் தோற்றது.

அடுத்து, டாப்ஹேட் (top hat) எனப் பெயரிடப்பட்ட சிறிய அளவிலான கொள்கலத்தைக் கடலுக்குள் இறக்கினர். கிணற்றிலிருந்து தள்ளி அதை நிறுத்தி, வெளியேறும் எண்ணெயைக் குழாய் மூலம் உறிஞ்சி, அதேபோல் மேலே கப்பலுக்கு அனுப்பும் திட்டம்.

அதுவும் சரிவரவில்லை.

பிறகு வேறொரு திட்டம் யோசித்து, அதற்கு டாப்-கில் (top kill) என்று பெயரிட்டனர். இவ்வளவு நெருக்கடியிலும் அவர்களின் செயல்பாடுகளுக்கெல்லாம் ஒரு பெயர் தேர்ந்தெடுப்பதைக் குறிப்பிட்டே ஆகவேண்டும். திட்டங்களுக்குப் பெயர் வைப்பதற்கே சிலர் ரூம் போட்டு யோசித்து சொல்வார்களோ என்னவோ? இருக்கட்டும். இந்தத் திட்டம் என்னவென்றால் இரண்டு பைப்புகள் மூலம் மிகக் கடினமான திரவங்கள், மண் இவற்றையெல்லாம் செலுத்தி துளையை அடைக்க முயல்வது. அது எண்ணெய் வெளியேறுவதை பெருமளவு தடுத்து விடும். அடுத்து சிமெண்ட்டையும் அந்தத் துளைக்குள் அள்ளிக் கொட்டி நிரந்தரமாக அடைத்துவிடலாம் என்று முயன்றனர். இது வெற்றி பெறவேண்டும் என்று பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. இறுதியில் மே 29ந் தேதி அந்த முயற்சியும் தோல்வியுற்றது.

அடுத்து ரோபோ மெஷின்களின் உதவியுடன் கிணற்றில் முறிந்துள்ள பைப்புகளை வெட்டி நீக்கி அதன் மேல் நிரந்தர மூடி பதித்து அடைத்து விடலாம் என்ற முயற்சி. அது என்னடாவென்றால் முறிந்திருந்த பைப்பை அறுக்கும்போது ரம்பம் சென்று மாட்டிக் கொண்டது. அதுவும் வைரம் பாய்ந்த ரம்பம். மண்டையைப் பிய்த்துக் கொண்டார்கள் உலகமகா மேஸ்த்திரிகள்.

ஒவ்வொரு முயற்சியையும் எளிதாய் வாசித்து விட்டாலும், எல்லாமே கடின முயற்சிகள். குளத்திலோ, ஆற்றிலோ குதித்து செய்யக் கூடியதைப் போன்ற வேலையில்லையே. தரையில் நின்று கொண்டு ஒரு மனிதன் பைப்பை அறுப்பதற்கும், துளையை மூட முயல்வதற்கும் கடலுக்குப் படுகீழே இயந்திரங்களை செலுத்தி ஒவ்வொரு யோசனையாக முயன்று பார்ப்பதற்கும் அளவிட முடியாத வித்தியாசம் உள்ளது.

ஆனால் அதற்காக கிணறோ, கடலோ பரிதாபப்பட்டதாகத் தெரியவில்லை. "என் கடன் எண்ணெய் துப்பிக் கிடப்பதே!" என்று கிணறு ஆக்ரோஷமாய் எண்ணெய் துப்பிக் கொண்டிருந்தது.

ஜுன் மாதம் பிறந்தது. போஸ்டர் அடித்து ஒட்டாத குறையாக 50 நாளும் ஆகிவிட்டது. கடலில் எண்ணெய் கலந்து கொண்டுதான் இருந்தது. BP-யின் பொறியாளர்களும், விக்கிரமாதித்தனாய் முயன்று கொண்டுதான் இருந்தார்கள். அதிகாரிகளோ கடலில் கலந்த எண்ணெய் 5300 சதுர கி.மீ. பரவியுள்ளதாக சொன்னார்கள். லூசியானா மாநிலத்திலிருந்து ஃப்ளோரிடா மாநிலத்துக் கடற்கரைவரை மெதுவாக நகர்ந்து ஏழு மைல் தொலைவிற்கு வந்து விட்டது எண்ணெய்க்கடல் என்று தெரிவித்தார்கள். அடுத்து அது இன்னம் பரவி அட்லாண்டிக் சமுத்திரத்திலும் கலக்க வாய்ப்புள்ளதாகக் கவலைப்பட்டார்கள்.

இறுதியில் 6ஆம் தேதி ஒருவிதமான மூடியை நீர்மூழ்கி ரோபோ இயந்திரங்கள் உதவி கொண்டு உடைந்திருந்த பைப்பின் மேல பொருத்தினர். “அப்பாடா” என்று சற்று ஆசுவாச மூச்சு வெளிப்பட்டது அனைவருக்கும். ஆனால் அது முழு நிம்மதியில்லை. மூடி பொருத்தியதன் பயனாய் நாளொன்றுக்கு 10,000 பேரல் எண்ணெயை கடலில் கலக்காமல் கைப்பற்ற முடிந்தது. அதற்கு முன்தினமும் 19,000 பேரல் எண்ணெய் கலப்பதாக உத்தேசித்திருந்தார்கள். ஆக முழுவதும் பிரச்சனை முடிவிற்கு வராவிட்டாலும் கடலில் கலக்கும் எண்ணெய் அளவைக் கணிசமாய்க் குறைக்க முடிந்துள்ளது. கடலிலேயே, அந்தக் கிணற்றுக்கு சற்றுத் தொலைவில் மற்றொரு கிணறு தோண்டி அதன் மூலம் எண்ணெய் எடுக்க ஆரம்பித்தால்தான் இதனை மூட முடியும் என்பது நிரந்தரத் தீர்வுக்கான ஓர் ஆலோசனை. ஆனால் அதற்குப் பல மாதங்களாகுமாம்.

என்னவோ ஹாலிவுட் படம்போல் பரபரப்பாய்த்தான் செயல்பட்டார்கள். 'அரசாங்கம் மிகவும் கவலை கொண்டுள்ளது, தீவரமாய் நடவடிக்கை எடுத்து வருகிறது', என்பதை வலியுறுத்த இதுவரை மூன்று முறை லூசியானா பறந்தார் ஒபாமா. முதல்முறை பாதிப்படைந்த பகுதிகளை ஹெலிகாப்டரில் பார்வையிட்டவர், "முன்னெப்போதும் இல்லாத வகையில் மிகப் பெரிய அளவில் சுற்றுப்புறச் சூழல் மாசடையும் நிலை ஏற்பட்டுள்ளது" என்று கவலையுடன் எச்சரிக்கை விடுத்துவிட்டு, அதிகாரிகளையெல்லாம் விரட்ட ஆரம்பித்தார்.

"எல்லாம் சமாளித்து விடுவார்கள்", என்பதுபோல் ஒரு சாரார் கவனித்துக் கொண்டிருந்தனர். கடலுக்கு அடியில் நிகழும் சங்கதிகளை BP தனது இணைய தளத்தில் நேரடி ஒளிபரப்பாக பல கேமரா கோணங்களில் காட்டிக் கொண்டிருக்கிறது. பார்ப்பவர்களுக்கு சினிமாவில் பல மானிட்டர்களில் கலர் கலராய் என்னென்னவோ ஓடுவதுபோல் காட்டுவார்களே அதுபோல் பரபரப்பு. மற்றொரு சாரார் அதைத் தாண்டி கவலையுடன் இழப்புகளையும் பிரச்சினைகளையும் பட்டியலிட ஆரம்பித்தனர். "ஒரேயொரு இடத்திலிருந்து அதாவது மெயின் குழாயின் மேல் பகுதியிலிருந்து மட்டுமே எண்ணெய்க் கசிவதாகப் பொய் சொன்னார்கள். மெயின் குழாயின் மேல் பகுதியில் மட்டுமல்லாமல், பக்கவாட்டுப் பகுதிகளிலும் எண்ணெய், பீச்சி அடித்துக் கொண்டிருக்கிறது. ரைஸர் எனப்படும் குழாயின் பல துளைகளிலும் கட்டுப்படுத்த முடியாத கசிவுகள் இருக்கின்றன. அவை எல்லாவற்றையும் அடைப்பது மகாக்கஷ்டம்" என்கிறார் எண்ணெய்க் கசிவின் தன்மையை ஆராய்ந்தவர்களில் ஒருவரான ஆய்வாளர் டாக் ஹாமில்டன்.

கடலில் கலந்து வருவது கச்சா எண்ணெய். தார் வஸ்துவும் கலந்து மிகவும் பிசுபிசுப்பான எண்ணெய்ப் பிசின். எளிதில் ஆவியாகாது. கழுவி சுத்தம் செய்யவும் முடியாது. லேசில் கொளுத்தவும் முடியாது. இத்தகைய சூழ்நிலையை எதிர்கொள்ள வைத்திருக்கும் உபகரணங்களுக்கெல்லாம் இது ஒரு சவால் என்று பொறியியல் வல்லுநர்கள் கவலை கொண்டனர்.

இந்த விபத்தால, 400 வகை கடல்வாழ் உயிரினங்களுக்கும் 34,000 பறவைகளுக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. மே 30ஆம் தேதி வரை 491 பறவைகள், 227 கடல் ஆமைகள், 27 டால்பின்கள் இந்த எண்ணெய்ப் பிசினில் நனைந்து, குடித்து, சுவைத்து இறந்துள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. அப்பகுதியில் மீன்பிடித் தொழில் அப்படியே குலைந்துபோய், அந்த மக்களெல்லாம் கோபமும், விரக்தியும், கவலையுமாய்த் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். தவிரவும், கடலிலுள்ள மீன்களுக்கும் கடும் ஆபத்தான சூழ்நிலை. இந்த பாதிப்பிலிருந்து சுற்றுப்புற மாசு சகஜ நிலைக்குத் திரும்ப பற்பல ஆண்டுகள் ஆகும் என ஜார்ஜியா பல்கலையைச் சேர்ந்த சமந்தா ஜாய் (Samantha Joye) கருத்து தெரிவித்துள்ளார்.

அந்தப் பகுதிகளிலுள்ள பீச்சிற்கு சுற்றுலாப் பயணிகள் வருவது நின்று போக, அது சார்ந்த தொழில்களான ஹோட்டல் இன்ன பிறவும் பாதிப்படைந்துள்ளன. அவர்களுடைய வருமானமும் போச்சு.

அதெல்லாம் சரி. இது உலக ஆயில் ஜாம்பவான் BP, உலகப் போலீஸ் அமெரிக்கா என்ற இரட்டை ஹீரோ பாக்ஸ் ஆஃபீஸ் படம் பம்மாத்துப் படக்கதை. அவர்களுடைய ஜேம்ஸ்பாண்ட் சாகசம் நமக்கு எதற்கு?

அடிநாதமாய் வேறொரு செய்தியொன்று இதில் நமக்கென்று உண்டு. பார்க்கலாம்.

எய்ட்ஸை விடக் கொடிய நோய் ஒன்று உலகம் முழுக்க உண்டு. கைச்சேதம், அதை நாமே உணர்வதில்லை. தொழில் நுட்பத்திலும் விஞ்ஞானத்திலும் முன்னேற்றம் ஏற்பட ஏற்பட, இறை நம்பிக்கை, இறை சக்தி என்பதெல்லாம் இன்று ஏதோ ஒரு புத்தக அத்தியாயம் மட்டுமே என்றாகி விட்டிருக்கிறது. தவிர இந்த மேட்டிமையும் வலிமையும் மனிதனுக்கோ, வல்லரசு நாட்டிற்கோ ஒரு விதமான மமதை, அகங்காரம், கர்வம் ஆகியனவற்றைத் அனிச்சையாகத் தோற்றுவித்து விடுகிறது. அதனால் கண்ணால் காண்பதும், காதால் கேட்பதும் மட்டுமே மெய் என்ற பொய்ஞான நிலையை எட்டி தனது வலிமை, அறிவு, பணம், இதைக் கொண்டு எதையும் சாதித்து விட முடியும் என்ற போலி தன்னம்பிக்கையில்தான் ஆழ்ந்துள்ளது உலகம்.

இறைவன் இயற்கையை இலேசாக இரும வைத்தாலோ, மனித வலிமை இயற்கையைத் தவறாய் உரசினாலோ என்னாகும் என்பதுதான் அவ்வப்போது நிகழும் இத்தகைய உதாரணப் பேரழிவுகள். அதைப் படித்துப் பார்க்க பிரம்மாண்ட விளக்கொளியெல்லாம் தேவையில்லை, உள்ளத்தில் சிறிய ஒளியொன்று - இறையச்சம் - அது இருந்தாலே போதும். காட்சியைச் சரியான பிம்பத்தில் கண்டுகொள்ளலாம்.

நாமென்ன? இதற்கு முன்பும் வாழ்ந்திருந்தார்கள். ஒவ்வொரு கால கட்டத்திலும் அந்தந்த முன்னேற்றத்திற்கு ஏற்ப பிரம்மாண்ட சமூகமெல்லாம் வாழ்ந்திருந்தார்கள். பிரம்மாண்டத்திற்கும் வலிமைக்கும் பேர்போன ஆது சமூகம் இருந்தது. தன்னை, கவுளுக்கும் மேலான கடவுள் என்று சொல்லிக் கொண்ட ஃபிர்அவ்ன் இருந்தான். எல்லாமும், எல்லோரும் இறந்து போன இறந்த காலம். அது ஏன் பெரும்பாலோருக்குச் சரிவரப் புரிவதில்லை? வான் தாண்டி செவ்வாயும், நீர் தாண்டி கடல் தரையும் தொட முடிந்தால், அனைத்தும் தன் முட்டிக்குள் அடங்கிவிட்டதாக மனித சமூகம் நினைக்க ஆரம்பித்தால் அங்குதானே அதன் தோல்வியே ஆரம்பமாகிறது.

இதோ இந்த விபத்து! அமெரிக்காவைப் பொருத்தவரை மற்றொரு சவால். ஜெயித்துக் காட்டுகிறேன் பார் என்றுதான் இதனை அணுகிக் கொண்டிருக்கிறது. BP-யோ திண்று கொழுத்த இலாபத்தின் ஒரு துளியான 20 பில்லியனை இதில் செலவழித்து விட்டு, இயற்கையின் ஒழுங்கு சீர்குலைந்து நாசமானது இருக்கட்டும், இப்படி டாலரெல்லாம் கடலில் கரைத்த பெருங்காயமாகிறதே என்று கலக்கும் ஒவ்வொரு சொட்டையும், காசுபோன துயரத்தில் கண்ணீர் மல்கப் பார்த்துக் கொண்டிருக்கிறது. Materialistic world! டாலரே கடவுள்!

இதுவரை கடல் தாண்டி எண்ணெய்க்காக யுத்தம் புரிந்து கொண்டிருந்ததே அமெரிக்கா. இப்பொழுது அந்த எண்ணெயுடனேயே, தனது கரையிலேயே கடலில் யுத்தம் புரிய நேர்ந்ததை என்ன சொல்வது?

Sunday, June 13, 2010

DETAILS OF PARADISE (JANNAH)

When Mu'min will enter into Jannah, it will be announced  
1.   You will remain healthy forever, disease will never come.
2.   You will remain alive for ever, death will never come.
3.   You will remain in bounties which will never be finished.

 
Jannat is made with

Bricks of Gold and Silver. 
Its cement is of perfumed Musk. 
Its chips are pearls and Yaqoot.  
Its sand is Zafraan.
 
There are eight doors ofJannah. These are eight grades of Jannat 
1.   Jannatul Mava
2.   Darul Maqaam
3.   Darul Salaam
4.   Darul Khuld
5.   Jannat-ul-Adan
6.   Jannat-ul-Naeem
7.   Jannat-ul-Kasif
8.   Jannat-ul-Firdous


Food of Jannah 
They will eat foods and fruits continuously up to 40 years. 
Every bowl will have a new taste.
They will take eructation which will digest the food and there will be perfumed sweating for the digestion of water.

There will be no urine and stool.

Place Name 

There will be gardens in Jannah. 
Every garden will have the length of about 100 year's journey.
The shadow of these gardens will be very dense.
Their plants will be free of thorns.
The size of their leaves will be equal to ears of elephants.
Their fruits will be hanging in rows.

Jannatul Mava is in the lowest, 

Jannat-ul-Adan is the middle &
Jannat-ul- Firdous is on the highest. 
  
Those who love each other for the sake of Allah will get a pillar of Yaqoot, 
On which there will be seventy thousand (70,000) rooms. 
These will shine for the residents of Jannah as the sun shines for the residents of Duniya.

There will be rooms in Jannah in such a way that every room will have seventy thousand (70,000) dinning sheets. 

On every dinning sheet 70,000 types of foods will be served.
For their service 80,000 young boys will be moving around looking like beautiful scattered pearls.

One bunch of dates will be equal to the length of 12 arms.
The size of a date will be equal to the big pitcher.
These will be whiter than milk, sweeter than honey and softer than butter and free
Of seeds.
The stem of these plants will be made up of gold and silver. 

There will also be gardens of grapes. The bunches of grapes will be very big. 
The size of a single grape will be equal to a big pitcher.
 
Someone asked, ya Rasulullah (Sallalahu alaihi wasallam):  
will it be sufficient for me and my family. It was answered, it will be sufficient for you and your whole tribe.

The Dresses of Jannat 
The dress of Jannah will be very beautiful. 
One will wear 70 dresses at a time. 
These will be very fine, delicate, weightless, having different colors.
These dresses will be so fine that the body even the heart will be visible. 
And the waves of love in the hearts will also be visible.
These dresses will never become old, never be dirty and will never tear.
 

There will be four canals in every Jannah. 
 
1  Water
2.   Milk
3.   Honey
4.   Sharabun Tahoora.

There will also be three fountains in  Jannah:
1.   Kafoor 
2
.   Zanjabeel
3.   Tasneem

Qualities of People of Jannah 

In Jannah, height of every Mo 'min, will be equal to the height of

Hazrat Adam (Alaihissalaam) 60 arms (90 feet).
Beauty will be like that of Hazrat Yousuf (Alaihissalaam)
Age of youth will be like that of Hazrat Esa (Alaihissalaam) 30-33 years).
Sweetness of voice will be like that of Hazrat Dawud (Alaihissalaam).
Tolerance will be like that of Hazrat Yaqoob (Alaihissalaam)
Patience will be like that of Hazrat Ayyub (Alaihissalaam.)
Habits will be like that of Sayyaduna Muhammad (Sallalahu alaihi wasallam) 

 

NOTE: 
 
If a person makes PRAY for Jannah three times,
Jannah requests Allah that O, Allah; make his entry into Jannah.
And if a person makes Du'a for safety from Jahannum three times,
The Jahannnum requests Allah that, O, Allah; save him from Jahannum.
 
Please pass on and may Allah grant the entire Ummah of Nabi sallalahu alayhi wasallam Jannat ul Firdous Ameen!
 
Every GOOD ACT is a charity.

JAZAK ALLAHU KHAIR

May Allah Forgive our sins... Aameen
Remember the Prophet PBUH said if u have knowledge pass it on
Even if it is just one verse. So Forward this message and help us in our
Mission to keep the Muslim Youth on the right path, ISLAM.

--
நன்மையிலும் பயபக்தியிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ளுங்கள். பாவத்திலும்பகைமையிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ள வேண்டாம். அல்லாஹ்வுக்கே பயப்படுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் கடுமையாக தண்டிப்பவன். (திருக்குர்ஆன் 5:2)

Wednesday, June 9, 2010

தனியார் பள்ளிகள் கட்டணம்

னியார் பள்ளிகளுக்கான கல்விக்கட்டணத்தை நீதிபதிகள் குழு அறிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகள் மாணவர்களிடம் கூடுதல் கட்டணம் வசூல் செய்வதாக எழுந்த புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க முடிவு செய்த தமிழக அரசு. தனியார் பள்ளிகளின் கல்விக் கட்டணத்தை நீதிபதிகள் தலைமையிலான குழு ஆய்வு செய்து கல்விக்கட்டணத்தை நிர்ணயிக்கும் என்று அறிவித்தது.

இதையடுத்து நீதிபதி கே.கோவிந்தராஜன் தலைமையிலான தலைமையிலான குழு தமிழகம் முழுவதும் உள்ள தனியார் 1950 தனியார் பள்ளிகளின் கல்விக்கட்டணத்தை ஆய்வு செய்தது.

இதில் 1233 பள்ளிகள் தங்களின் கல்விக்கட்டணத்தை நீதிபதிகள்குழுவிற்கு தெரிவித்திருந்தன. 701 பள்ளிகள் தங்களின் கல்விக்கட்டணம் குறித்த விபரங்களை தெரிவிக்கவில்லை. மேலும் தனியார் பள்ளிகளின் கட்டமைப்பு, கல்வித்தரத்தை நிர்ணயிக்க 200 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது.

இதையடுத்து தனியார் பள்ளிகள் மாணவர்களிடம் வசூலித்து கொள்ள வேண்டிய கல்விக் கட்டணத்தை நீதிபதி கோவிந்தராஜன் அறிவித்தார். அதில்...''அதிகபட்சமாக நர்சரி மற்றும் தொடக்கப் பள்ளிகள் (எல்.கே.ஜி. முதல் 5 ஆம் வகுப்பு வரை ) ரு 3,500 எனவும், நடுநிலைப்பள்ளிக்கு
( 1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை ) ரூ 5,000 எனவும்,

உயர்நிலைப்பள்ளிக்கு தொடக்கப்பள்ளிகளுக்கு (6 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்புவரை) ரூ 8,000 எனவும், மேல்நிலைப்பள்ளிக்கு ( 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை) ரூ 11,000 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எல்லாப் பள்ளிகளுக்கும் ஒரே விதமான கல்விக்கட்டணம் நிர்ணயிக்கப்படவில்லை. அதனால் அவற்றுக்கு அதிக பட்ச கட்டணம் பொருந்தாது.

பள்ளிக்குப் பள்ளி கட்டணத்தில் மாற்றம் இருக்கும். கட்டண நிர்ணயம் தொடர்பான ஆணைகள் அனைத்து பள்ளிகளுக்கும் விரைவில் அனுப்பப்படவுள்ளன. இடைப்பட்ட காலத்தில் கட்டணத்தை உயர்த்தி வசூல் செய்யக் கூடாது. அப்படி வசூலித்தால், அதிகமாக வசூலித்த கட்டணத்தை, பள்ளிகள் மாணவர்களுக்கு திருப்பி அளிக்க வேண்டும்.

தவிர ஒவ்வொரு பள்ளிக்குமான கல்விக் கட்டண விபரம் பள்ளிக் கல்வித் துறையின் இணையத்தளத்தில் வெளியிடப்படும். இந்த கல்விக்கட்டணம் 3 ஆண்டுக்கு செயல்பாட்டில் இருக்கும்.

நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் கேட்பதாக பள்ளிகள் மீது புகார் வந்தால் அந்த பள்ளியின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும். "என்று நீதிபதி கோவிந்தராஜன் தெரிவித்தார். பள்ளிக்கல்வித்துறை செயலர் குற்றாலிங்கம். இயக்குநர் பெருமாள்சாமி, மெட்ரிக் பள்ளி இயக்குநர் மணி, தொடக்கப் பள்ளி இயக்குநர் தேவராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.


Monday, June 7, 2010

மக்கள் தொகை கணக்கெடுப்பு

அஸ்ஸலாமு அலைக்கும்.

வெளிநாட்டில் இருக்கும் சகோதர சகோதரிகள் சம்பந்தப் பட்டவர்களுக்கு உடனே தெரியப் படுத்தவும்.

""மக்கள் தொகை கணக்கெடுப்பு முடிந்த பின், 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயது கொண்ட அனைவருக்கும், புகைப்பட அடையாள அட்டை வழங்கப்படும். கணக்கெடுப் பாளர்கள் போர்வையில், திருடர்கள் வீடுகளில் நுழைந்து விடும் அபாயமிருப்பதால், அடையாள அட்டை இல்லாதவர்களிடம் கணக்கெடுப்பு குறித்த விவரத்தை, பொதுமக்கள் தெரிவிக்க வேண்டாம்,'' என மக்கள் தொகை கணக்கெடுப்பு இயக்குனர் கோபாலகிருஷ்ணன் தெரிவித்தார்.சென்னை, பெசன்ட் நகரிலுள்ள ராஜாஜி பவனில், கோபாலகிருஷ்ணன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தமிழகம் முழுவதும் அடுத்த மாதம் 15ம் தேதி வரை, வீட்டு பட்டியல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்பு, தேசிய மக்கள் தொகை பதிவேட்டிற்கான விவரங்கள் சேகரிக்கும் பணிகள் நடைபெறும். இப்பணியில், 1 லட்சத்து 50 ஆயிரம் களப் பணியாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர். அதில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் இடம் பெற்றுள்ளனர். இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் கட்டமாக வீட்டு பட்டியல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்பு, இரண்டாவது கட்டமாக, 2011ம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெறவுள்ளது.வீட்டு பட்டியல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்பின் போது, வீடு அமைப்பு விவரம் மற்றும் குடிநீர் வசதி, கழிவுநீர் வசதி, "டிவி,' கம்ப்யூட்டர் போன்ற பொருட்கள் உள்ளதா என்ற விவரம் சேகரிக்கப்படும். தேசிய மக்கள் தொகை பதிவேட்டின் விவரங்களில், தனி நபர் பெயர், அவர் படித்த ஊர், பிறந்த தேதி, பெற்றோர் பெயர் உள்ளிட்ட விவரமும் பெறப்படும். அதன்பின் ஒப்புகை சீட்டு வழங்கப்படும். பதினைந்து வயது மற்றும் அதற்கு மேற்பட்ட அனைத்து நபர்களின் புகைப்படங்கள் மற்றும் கைரேகை பதிவுகளை சேகரிக்கும் பணியும் நடைபெறும். அடுத்த ஆண்டில் புகைப்பட அடையாள அட்டை வழங்கப்படும். அதோடு, பிரத்யேக அடையாள எண்களும் வழங்கப்படும்.கணக்கெடுப்பாளர்கள் வீடுகளுக்கு கணக்கெடுக்க வரும்போது, வாடகை வீட்டில் வசிப்பவர்கள் அல்லது வீட்டின் உரிமையாளர்கள் வெளியே சென்றிருந்தால், தாசில்தார், நகராட்சி, மாநகராட்சி அலுவலகங்களில் தகவல் கொடுத்தால், மற்றொரு நாளில் கணக்கெடுப்பாளர்கள் கணக்கெடுக்க வருவர். வீடுகளில் கணக்கெடுப்பு முடிந்தவுடன், அந்த வீட்டில் ஸ்டிக்கர் ஒட்டப்படும். வெளிநாட்டு இந்தியர்கள் கணக்கெடுப்பில் இடம் பெற மாட்டார்கள். அவர்கள் மீண்டும் இந்தியாவில் குடியேறிவிட்டால், மக்கள் கணக்கெடுப்பில் விண்ணப்பித்து, தங்களது பெயரை இணைத்து கொள்ளலாம்.கணக்கெடுப்பில் இலங்கை, பர்மா அகதிகள் இடம் பெறுவர். கணக்கெடுப்பாளர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. கணக்கெடுப்பாளர்கள் போர்வையில், திருடர்கள் வீடுகளில் நுழைந்து விடும் அபாயமிருப்பதால், அடையாள அட்டை இல்லாதவர்களிடம் கணக்கெடுப்பு குறித்த விவரத்தை, பொதுமக்கள் தெரிவிக்க வேண்டாம். இவ்வாறு கோபாலகிருஷ்ணன் கூறினார்.

Sunday, June 6, 2010

வீட்டுக்கே வரும் " மொபைல் பள்ளி "






திருப்பூர் : குழந்தைகளுக்கு நல்ல கல்வியை தர வேண்டும் என்பதில் பெரும்பாலான பெற்றோர் அதிக ஆர்வமாக உள்ளனர். இதனால், ஒரு வயது நிரம்பிய குழந்தைகளுக்கு "கிரீச்' என்று துவங்கி, "பிளே ஸ்கூல்', "கின்டர் கார்டன்' என ஐந்து வயது நிரம்பும் முன்பே குழந்தைகள் கல்வி கற்க துவங்கி விடுகின்றனர்.

திருப்பூரில், குழந்தைகளுக்கான "மொபைல் பள்ளி' ஒன்று செயல்பட்டு வருகிறது. பிரத்யேகமாக வடிவமைக்கப் பட்டுள்ள ஒரு பஸ்சில் இந்த மொபைல் பள்ளி இயங்குகிறது. பஸ்சிற்குள் கரும்பலகை, புத்தகங்கள் என வகுப்பறையில் உள்ள அத்தனை வசதிகளும் உண்டு. பாடத்துடன் நடனம், விளையாட்டு ஆகியவையும் கற்றுத் தரப்படுகின்றன. மொபைல் பள்ளியில், குழந்தைகளுக்கான பாடப் புத்தகங்கள், சிலேட், பென்சில் என அனைத்தும் இலவசம். தினமும் முட்டை, பயறு, வாழைப்பழம் ஆகியவையும் வழங்கப்படுகின்றன. தனியார் நிறுவனம் ஒன்று நடத்தும் அறக்கட்டளை சார்பில் இந்த மொபைல் பள்ளி நடத்தப்படுகிறது. ஆதரவற்ற குழந்தைகள், பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த மற்றும் கிராமப்புற குழந்தைகள் மட்டுமே இப்பள்ளியில் சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர். சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த ஒரு நிறுவனத்துடன் இணைந்து செயல் படுத்தப்படும் இந்த மொபைல் பள்ளியில் இருந்து இதுவரை ஆயிரம் குழந்தைகள் படித்து, முடித்து வெளியேறியுள்ளனர். புத்தக மூட்டைகளை தூக்கிக் கொண்டு, மூச்சிறைக்க பள்ளி செல்ல வேண்டிய அவசியம் இல்லாமல், ஏழை, எளிய குழந்தை களைத் தேடி ஓடி வரும் மொபைல் பள்ளியின் சேவை பாராட்டுக்கு உரியது.

Friday, June 4, 2010

மொபைல் பயன்படுத்தினால் ஆபத்து வருமா?


கடந்த 2009ம் ஆண்டு முடிவில் உலகம் முழுவதும், 46 லட்சம் மொபைல் போன்கள் பயன்பாட்டில் இருந்ததாக சர்வதேச தகவல் தொடர்பு ஆணையம் கூறியுள்ளது. இந்த எண்ணிக்தை தற்போது பன்மடங்கு அதிகரித்திருக்கிறது. அதே போன்று இதை பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பொதுவாக மொபைலை அதிகளவில் பயன்படுத்தும் பெண்களுக்கு மாதவிலக்கு தொடர்பான கோளாறுகளும், ஆண்களுக்கு உயிர் அணு உற்பத்தி குறைபாடுகளும் ஏற்படும் என்று மருத்துவ விஞ்ஞானிகள் எச்சரித்து வருகின்றனர். மேலும், புற்றுநோய் போன்ற கொடிய நோய்களும் ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளதாக கூறி வருகின்றனர். இது தொடர்பான ஆய்வுகள் கடந்த 10 ஆண்டுகளாக அதிகளவில் சர்வதேச அளவில் நடந்து வருகின்றன. இந்த ஆய்வுகள் அனைத்திலுமே எதிர்மறையான முடிவுகளே கிடைத்திருக்கின்றன. பத்தாண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து மொபைல் போன் பயன்படுத்துபவர்களுக்கு இரண்டுவிதமான புற்று நோய் வர வாய்ப்புள்ளதாக சர்வதேச புற்றுநோய் ஆய்வுக்கழகம் தெரிவித்துள்ளது. இதில், மூளைப்பகுதியில் ஏற்படும், "மெனிஞ்சியோமா' புற்றுநோய்க் கட்டிக்கு வாய்ப்பு என்று கூறப்பட்டது. அதிலும் மோசமான புற்று நோய்க்கட்டி ஏற்படும் என்று எச்சரித்ததும் உண்டு.

பார்சிலோனாவைச் சேர்ந்த மருத்துவ விஞ்ஞானி எலிசபெத் கார்டிஸ் கூறுகையில், "மொபைல் பயன்படுத்துவதால், வாழ்க்கைக்கு வளம் சேர்க்கலாம். ஆனால், உடல் நலத்திற்கு தீங்கு ஏற்படுவதை தவிர்க்க முடியாது. குறைந்த அளவில் பயன்படுத்தினாலும், பாதிப்பு ஏற்படாது என்று உறுதியாக கூற முடியாது' என்று தெரிவித்துள்ளார். மொபைல் பாதிப்பு தொடர்பாக, கடந்த மாதம் 13 நாடுகளைச் சேர்ந்த 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

தற்போது வரும் மொபைல் போன்களில் எப்.எம்., ரேடியோ மற்றும் "டிவி'யும் உள்ளது. இதற்கு ஆன்டெனாவாக பயன்படுபவை அதில் உள்ள, "இயர் போன்' தான். ரேடியோ மற்றும் "டிவி'யில் இருந்து வரும் வானொலி அலைகள் மிகக்குறைந்த திறன் கொண்டதாயினும், அவை மனித உடலுக்கு தீங்கு இழைக்கக் கூடியதாகும். இத்தகைய ஆன்டெனாக்கள் மனித உடலிலிருந்து குறைந்தபட்சம் 40 செ.மீ., தூரத்திலாவது இருக்க வேண்டும். ஆனால், மொபைல் போன் எப்.எம்., கேட்கும் ஒருவர் "இயர் போனை' காதில் வைத்தவாறு கேட்கிறார். நாளடைவில், அது அவருக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று உலக சுகாதார ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. இவை மட்டுமல்லாது, மொபைல் போன்களை விமானம் மற்றும் மருத்துவமனைகளிலும் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. காரணம், அதிலிருந்து வரும் மின் காந்த அலைகள் விமானத்தில் உள்ள நுண்ணிய இயந்திரங்களையும் பழுதாக்கிவிடும் தன்மை கொண்டதாகும். மருத்துவமனைகளிலும், அங்குள்ள மருத்துவ சாதனங்களுக்கு இடைஞ்சல் ஏற்படுத்தக்கூடியதாகும். ஆனால் இவைகளுக்கு ஆதாரமாக பத்தாண்டுகள் அல்லது அதேமாதிரி தொடர்ந்து சோதனைகள் செய்து உறுதிப்படுத்த முடியவில்லை என்பதை விஞ்ஞானிகள் ஒப்புக் கொள்கின்றனர்.

Wednesday, June 2, 2010

உலகப் பொருளாதார வீழ்ச்சிக்கு உரிய மாற்று - இஸ்லாமிய வங்கி


உலகப் பொருளாதார வீழ்ச்சிக்கு உரிய மாற்று - இஸ்லாமிய வங்கி!

செய்திகள் - தமிழகச் செய்திகள்

மக்களின் சுபிட்சமான உலக வாழ்வுக்குப் பொருளாதாரம் முக்கியமான பங்கு வகிக்கின்றது. கல்வி, தொழில் துவங்கி அடிப்படை தேவைகள் அனைத்துக்கும் பொருளாதாரம் அடிப்படை ஆதாரமாகும். அத்தகைய பொருளாதாரத்தின் வளர்ச்சி, நேர்மையான-நியாயமான வழிமுறைகளின் அடிப்படையில் இல்லாத போது, அதுவே எதிர்மறை விளைவுகளையும் தோற்றுவித்து விடுகிறது.



இன்று உலகப் பொருளாதாரம் முழுமையும் நேர்மை-நியாயமற்ற "வட்டி"யின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டு விட்டது. இதனால் எழுந்த எதிர்மறை விளைவு, செல்வம் படைத்தவர்களை மேலும் செல்வந்தர்களாகவும் ஏழைகளைப் பஞ்சப் பரதேசிகளாகவும் ஆக்கி விட்டது. ஏழை மக்கள் பாதிக்கப்படுவதால் என்றுமே அதிகார, துஷ்பிரயோக அரசுகள் அசைந்து கொடுத்ததாக வரலாறு இல்லை. ஆனால், இந்தக் கொடும் வட்டி, சமீப காலத்தில் அதிகார, பணபல வர்க்கத்தையே தலைகீழாகப் புரட்டிப் போட்டது.

அதன் பின்னரே, வட்டியினால் விளையும் தீமையினைக் குறித்தும் வட்டியில்லாத ஒரு மாற்று
பொருளாதார கட்டமைப்பினைக் குறித்தும் அதிகார, பணபல வர்க்கங்கள் சிறிதாக சிந்திக்கத் துவங்கியுள்ளன.

உலக மக்களின் சுபிட்சமான வாழ்வுக்குரிய வழிமுறைகளை வாழ்வியல் நெறியாக கொண்ட சத்தியமார்க்கமாம் இஸ்லாம், உலகின் அமைதி வாழ்வுக்கு நேர்மை-நியாயமற்ற கொடும் வட்டியைப் புறக்கணித்து
வட்டியற்ற கொடுக்கல், வாங்கல்களில் ஏற்பட கட்டளையிடுகிறது.

இஸ்லாத்தின் இந்த உயரிய கோட்பாட்டைக் கடைபிடித்து, வட்டியற்ற முறையிலான பொருளாதாரத்தைக் கட்டமைத்திருந்த ஒரு சில விரல் விட்டு எண்ணக் கூடிய நாடுகள், சமீபத்திய கடும் பொருளாதார வீழ்ச்சியில் சிக்காமல் தலைநிமிர்ந்து நின்றதை உலகம் கண்டு கொண்டது.


இந்தியாவில் முதன் முறையாக கேரள அரசே வட்டியில்லா முறையிலான "இஸ்லாமிய கூட்டு வங்கி" ஒன்றை உருவாக்கியிருப்பினும் இஸ்லாத்தின் மீதான காழ்ப்பால் சுப்பிரமணிய சுவாமி அந்த வங்கியின் செயல்பாட்டுக்கு எதிராக தடையுத்தரவு வாங்கி முடக்கினார்.

"நல்லவைகளை நல்லவர்களே வரவேற்பர்!". அத்தகைய நல்லோர் பலருக்கு இன்னமும் வட்டியில்லா பொருளாதாரம் மூலம் ஏற்படும் நன்மைகள் குறித்தும் அதனுடைய அவசியம் குறித்தும் விரிவாக விளக்கப்படவில்லை. அவர்கள் அதன் நன்மைகளை அறிந்து கொண்டால், "இஸ்லாமிய வங்கிகள்" மூலம் இந்த உலகமே ஒரு பொருளாதார புரட்சியைச் சந்திக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

ஆகவே, வட்டியில்லா முறையிலான "இஸ்லாமிய பொருளாதார திட்டங்கள்" குறித்து வெளிப்படையான கலந்தாய்வுகள், விளக்கங்கள், பிரச்சாரங்கள் மிக ஆழ்ந்த திட்ட வரைவுகளோடு முன்னெடுக்கப்பட வேண்டியது இன்றைய காலத்தின் கட்டாயமாகும். இதனைச் செய்ய வேண்டிய பாரிய பொறுப்பு, இறை மார்க்கத்தைத் தங்கள் வாழ்வியல் நெறியாக ஏற்றுள்ள முஸ்லிம்களுக்கு உண்டு.

அவ்வரிசையில், வட்டியின் தீமைகளையும், வட்டியில்லா முறையிலான இஸ்லாமிய வங்கியின் செயல்பாடுகளையும் விளக்கும் விதமாக, "உயிர்க்கொல்லி" என்ற பெயரில் குறும்படம் ஒன்றை சகோதரர் ரஃபீக் ரோமன் மற்றும் ஆர். நைனார் முஹம்மது ஆகியோர் இணைந்து உருவாக்கியுள்ளனர்.

வட்டி அடிப்படையிலான பொருளாதார கட்டமைப்பினால் விளையும் தீமைகளைப் பாமரர்கள் முதல் அரசுகள் வரை இன்று கண்முன்னால் கண்டுக் கையைச் சுட்டுத் தத்தளித்துக் கொண்டிருக்கும் இந்நேரத்தில், உலகின் சுபிட்ச வாழ்வுக்கு உத்தரவாதம் வழங்கும் வட்டியில்லா முறையான இஸ்லாமிய வங்கியியல் குறித்து விளக்கங்கள் கொடுக்க எடுக்கப்படும் இது போன்ற முயற்சிகள் வரவேற்கப்பட வேண்டியவைகளாகும்.

மேலும் இது போன்ற முயற்சிகளை மிக ஆழமான ஆய்வுத் திட்டங்களுடன் முன்னெடுப்போம்; இவ்வுலகை வட்டி என்ற கோர அரக்கனின் பிடியிலிருந்து காப்போம்!



Tuesday, June 1, 2010

கைசேதப்படுவதற்கு முன் விழித்துக் கொள்வோம்


ஒரு தொலைபேசி அழைப்பு, புதியதொரு இலக்கம். அவள் பதிலளிக்க வில்லை. மீண்டும் அதே இலக்கத்திலிருந்து அழைப்பு வருகின்றது. அவள் பதிலளிக்கவில்லை. இவ்வாறு பல தடவைகள் அதே இலக்கத்திலிருந்து அழைப்புகள் வந்து கொண்டிருந்தன. ஆனால் அவள் பதிலளிக்கவில்லை. அழைப்பை மேற்கொண்டவன் சலிப்படையவில்லை. அவளோடு பேச வேண்டு மென்பதில் அவன் உறுதியாக இருந்தான். அவளுக் குப் பின்னால் அழைந்து திரிந்தான். இறுதியாக அவள் ஒருநாள் அவனு டன் பேசுவதற்காக நின்றாள். அவன் தனது ஏக்கங்களை, கவலைகளை சொன்னான். அவன் அவளை மிக வும் அதிகமாக விரும்பினான். அவ னது உள்ளம் முழுவதும் அவளே நிறைந்தி ருந்தாள். அவன் பேசுவதை அவன் கேட்காவிட்டால் தன்னை அழித்துக் கொள் வதாக அவன் சொன்னான்.அவளுக்கு அவன்மீது இரக்கம் ஏற்பட்டது. அவனுடைய பேச்சைக் கேட்டாள். எவ்வளவு இரக்கம் கொண்டவனாக அவன் இருக்கின் றான் என்பதை அவள் அறிந்து கொண்டாள். கொஞ்சம் கொஞ்ச மாக ஷைத்தான் அவளை ஆக்கிர மித்தான். அந்த இளைஞனுடன் அவள் தொலைபேசியில் உரையா டலானாள். பின்னர் இருவரும் பாதைகளிலும் சந்தித்துக் கொண் டனர். அவர்களுக்கிடை யில் காதல் ஏற்பட்டது. அதன் பின்னர் பாவங் கள் நிகழ்ந்தன. பிறகு அவன் அவளை விட்டுவிட்டு வேறொரு இரையைத் தேடிச் சென்றுவிட்டான்.2. இன்னொரு இளைஞன் ஒரு யுவதியைப் பார்க்கின்றான். அவ ளோடு நட்பாகவும் அன்பாகவும் பேசுகின்றான். அவளும் உரையா டலில் கலந்துகொள் கின்றாள். காலம் செல்கின்றது. அவர்களு டைய நட்பு திருமணம் போன்று மாறிவிட்டது. ஆனால், அவர்கள் திருமணம் முடிக்கவில்லை. அவ ளுடைய உடலிலே உணர்ச்சியின் நெருப்பு பற்றியெரிந்தது. முடிவு எப்போதும்போல இழிவானதும் அவமானமானதுமாக அமைந்தது.அவன் அவளைவிட்டுவிட்டுச் சென்றுவிட்டான். பொறுப்பாள ரின் அனுமதி யின்றி அவனது கைப்பட எழுதிய திருமண ஒப்பந் தத்தை மறைத்துவிட்டான். அவள் ஒரு தந்தையில்லாத குழந்தைக்கு தாயாகின்றாள். பின்னர் எதிர்காலம் சூனியமானநிலையில் அவள் தனது காலத்தை கழிக்கின்றாள்.3. குடும்ப சந்திப்புகளின் போது இரண்டு குடும்ப அங்கத்தவர்களும் பரஸ்பரம் நல்ல முறையில் உரை யாடிக் கொள்கின்றனர். இரு குடும் பத்தவர்களினதும் பிள்ளைகளும் சகோதர சகோதரிகளாக பழகிக் கொள்கின்றனர். அவர்களில் ஒரு இளைஞனுக்கும் யுவதிக்குமிடையில் நெருக்கம் அதிகரிக்கின்றது. பின்னர் தொலைபேசி ஊடாகவும் தொடர்புகள் நீடிக்கின்றன. அதன் பின்னர் அவளுக்கு துயரங்களும் வேதனைகளும்தான் எஞ்சியிருக்கின்றன.4. இரண்டு நண்பர்கள் இருந் தார்கள். அவர்களது குடும்பங்கள் அடிக்கடி சந்தித் துக் கொள்ளும். அவன் அவளது கணவனுக்கு சகோ தரன் போலாவான். அவள் அவனது மனைவிக்கு சகோதரி போலாவாள். அவர்களுக்கிடையில் நட்பு ஏற்பட் டது. அவள் கணவனை விட்டுவிட்டாள். வளரும் பருவத்திலிருந்த பிள்ளை களை விட்டுவிட்டாள். தனது உள்ளத்தை கணவனின் நண் பனிடம் இழந்து விட்டாள். கணவ னிடம் விவாகரத்துக் கோரினாள்.மேற்கூறிய சம்பவங்கள் எமது சமூகத்தில் நிகழ்ந்துகொண்டுதானி ருக்கின்றன. இந்த அழுக்குகளை விட்டும் எமது சமூகத்தை பாது காக்க வேண்டியிருக் கின்றது.அன்பிற்குரியவர்களே அல்லா ஹுத்தஆலா முஸ்லிம் பெண்ணிற்கு ஒரு தங்க கிரீடத்தை ஏற்படுத்தியி ருக்கின்றான். அவள் அதன்மூலம் தன்னைப் பாதுகாத் துக் கொள்வ தோடு ஏனையவர்களையும் பாது காக்கின்றாள். அந்த கிரீடம்தான் ஹிஜாப் ஆகும். அது அவளது தூய் மையையும் அவளது கற்பையும் அவளது பார்வையையும் ஏனையவர்களின் பார்வை அவள்மீது விழுவதையும் தடுக்கின் றது.இந்த கிரீடத்தின் கருத்து இஸ்லாம் பெண்ணுக்களித்துள்ள கண் ணியமும் பாதுகாப்புமாகும். சில மேற்கத்தேய வாதிகளும் மனித உரிமை செயற்பாட் டாளர்களும் சொல்வது போல ஹிஜாப் அவளுக்கு ஒரு சிறையல்ல. அவளு டைய உரிமைகளை அது குழிதோண்டிப் புதைக்கவில்லை. மாற்றமாக அது தான் அவளது சுதந்திரத்தின் இரத்தினமாக இருக்கின்றது. அதனால் தான் அவள் சமூகத்தில் கண்ணியத்துடன் நடமாடுகின்றாள்.அல்லாஹ்மீது ஆணையாக மேற்கத்தேயவாதிகளே! உங்களு டைய முயற்சி யின் மூலம் பெண்களுக்கு உரிமைகளைப் பெற்றுக் கொடுத்துள்ளீர்களா? அல் லது அவர்களை நிர்வாணப்படுத்தியுள் ளீர்களா? பெண்களை நிர்வாணப் படுத்தி அவர்களுக்கு பல சமூக நோய்களை ஏற்படுத்தியுள்ளீர்கள். மேற்கத்தேய பெண் ஒரு வியாபாரப் பொருளாக மாற்றப்பட்டிருக்கிறாள். அவர்களுடைய பார்வைக ளும் கரங்களும் உடல்களும் அவளை இம்சிக்கின்றன. இதனால் தான் இன்று மனித சமூகம் எதிர் நோக்கியுள்ள மிகப் பெரிய அழிவுகளுக்கு தீர்வுகளை தேட வேண்டிய நிலைமை மேற்கிற்கு ஏற்பட்டுள்ளது.ஆனால், இஸ்லாமிய சமூகம் அதன் ஹிஜாபுடன் இருக்கும் காலம் வரை பாது காப்பாக இருக்கும். அது குடும்பத்தின் பாதுகாப்பிற்கும் குழந்தை வளர்ப்பிற்கும் கணவனின் பெறுமதிக்கும் உதவி செய்கின்றது.நாம் ஷரீஆவின் வரையறைகளை மீறி ஆண், பெண் கலப்பதன் மூலம் பல பிரச்சினைகள் ஏற்படுகின்றன. எங்களுடைய குழந்தைகளுக்கு ஆபத்தான மரணத்தை நாம் ஏற் படுத்தி விடுகின்றோம். எங்களு டைய யுவதிகள் தமது கற்பையும் வெட்கத்தையும் இழந்துவிடுகின்றனர். எங்களுடைய இளைஞர்கள் தமது இளமையையும் ஆண்மையையும் இழந்து விடுகின்றனர். எனவே, எமது சமூகம் அதிகமான சக்திகளை இழந்துவிடுகின்றது.கற்பும் தூய்மையும், வழிகேடான பித்னாவை ஏற்படுத்துகின்ற இடங்களிலி ருந்து விலகி நிற்பதும் அல்லாஹுத்தஆலாவின் ஷரீஆவை இறுக்கமாகப் பற்றிப் பிடித்துக் கொள்வதும் இந்த சமூகத்தை அபி விருத்தியடைந்த நாகரிக முள்ள சமூகமாக மாற்றும்.அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்; நபியே நீர் முஃமினான ஆண்களுக்குக் கூறு வீராக, அவர்கள் தமது பார்வைகளை தாழ்த்திக் கொள்ளட்டும். தமது மர்மஸ் தானங்களைப் பாதுகாத்துக் கொள்ளட்டும். அது அவர்களுக்கு மிகவும் சிறந்த தாகும். நிச்சயமாக அல்லாஹுத்த ஆலா அவர்கள் செய்பவற்றை நன்கறிந்த வனாக இருக்கின்றான். நபியே நீர் முஃமினான பெண்களுக்குக் கூறுவீராக, அவர்கள் தமது பார்வைகளை தாழ்த்திக் கொள்ளட்டும்.தங்கள் மர்மஸ்தானங்களை பாதுகாத்துக் கொள்ளட்டும். அவர் கள் தமது அழகி லிருந்து இயல்பாக வெளிப்படுபவற்றைத் தவிர ஏனையவற்றை மறைத்துக் கொள்ளட்டும். தமது மேற்சட்டைகளின் மீது முந்தானைகளை போட்டுக் கொள் ளட்டும். அவர்கள் தமது அலங்காரத்தை தம் கணவர்கள், அல்லது தம் தந்தை யர் அல்லது தம் கணவர்களின் தந்தையர் அல்லது தம் பிள்ளைகள் அல்லது தம் கணவர்களின் பிள்ளைகள் அல்லது தம் சகோதரர்கள் அல்லது தம் சகோத ரர்களின் பிள்ளைகள் அல்லது சகோதரிகளின் பிள்ளைகள் அல்லது தங்களு டைய பெண்கள் அல்லதுதம் வலது கரம் சொந்தமாக் கிக் கொண்டவர்கள் அல்லது பெண்கள் மீது விருப்பற்ற பணியாளர்கள் அல்லது பெண்களின் மறை வான உறுப்புகளை தெரிந்து கொள்ளாத சிறுபராயத்தையுடைய சிறுவர்கள் ஆகியோரைத் தவிர வேறெவருக்கும் வெளிப்படுத்த வேண்டாம். மேலும் தம் அலங்காரத்திலிருந்து தாம் மறைத்திருப்பதை அறியப்படுவ தற்காக தம்மு டைய கால்களை (நிலத்தில்) அடிக்கவேண்டாம். விசுவாசிகளே நீங்கள் வெற்றி பெறுவதற்காக அல்லாஹ்வின் பக்கம் மீண்டும் தௌபாச் செய்யுங்கள்.இந்தக் கட்டுரையை ஒரு சகோதரி ஒரு சஞ்சிகை ஒன்றிற்காக கண்ணீருடனும் கைசேதத்துடனும் எழுதிய கடிதத்துடன் முடித்துக் கொள்ள விரும்புகின்றேன். அல்லாஹ் அவளுடைய பாவங்களை அவளுடைய தௌபாவிற்காக மன் னிக்க வேண்டுமென்று பிரார்த்திப்போம். அவளுடைய கதையில் எமக்கு படிப்பினை களும் உபதே சங்களும் இருக்கின்றன. அதுவே அல்லாஹ் அவளுக்கு பாவமன் னிப்பு வழங்குவதற்கு காரணமாக இருக்கலாம். அல்லாஹ் அவளை நரக நெருப்பிலிருந்து பாதுகாப்பானாக.பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்எனக்கு எங்கிருந்து தொடங்குவதென்று தெரியவில்லை.நான் எனது பேச்சை எங்கு முடிக்க வேண்டுமென்பதையும் அறியவில்லை.நான் மிகக் கசப்பான நிமிடங்களில் வாழ்ந்து கொண்டிருக்கின்றேன். எனது வாழ்க்கையில் மிகவும் கஸ்டமான பருவங்களில் நான் வாழ்ந்துகொண்டிருக் கின்றேன்.எனது கடிதத்தை நீங்கள் வாசித்தால் எனது கஷ்டங்களை அறிந்துகொள்வீர்கள்.பேனையின் மூடியை கழட்டுகின்றேன். எனது அனைத்து சக்திகளையும் எனது கவலைகளை கண்ணீரை எழுதுவதற்காக திரட்டுகின்றேன். உங்களது சஞ்சிகை யில் சவூதி அறேபியாவின் எயிட்ஸும் அதற்கான காரணங்களும் யதார்த்தங் களும்என்ற தலைப்பில் வெளியிட்டிருந்த கட்டுரையை வாசித்தேன்.அந்தத் தலைப்பு என்னை மிகவும் கஷ்டப்படுத்தியது. நீங்கள் என்னை விளங்கி யிருப்பீர்கள் என்று நம்புகின்றேன். நான் அந்த சஞ்சிகையின் நான்கு பிரதிகளை பணம் கொடுத்து ஏன் வாங்கினேன் என்பதை அறியவில்லை. சிலவேளை அந்தத் தலைப்பில் எனது பெயரையும் நான் கண்டது காரணமாக இருக்கு மென்று நம்புகின்றேன். என்னை ஒதுக்கிவிட வேண்டாம். ஆம், உண்மையில் நான் எயிட்ஸ் நோயால் பீடிக்கப்பட்டவள். நான் மரணத்தினை எதிர்பார்த்திருக் கின்றேன்.நான் சாப்பிடுவதில்லை. நான் குடிப்பதில்லை. அல்லாஹ்வின் நெருக்கத்தி னைத் தவிர வேறு எந்த சுவையையும் நான் அறியவில்லை. நான் தொழும் போது உண்மையான உணர்வை உணர்கின்றேன். நான் சுவனத்தில் நுழைய வேண்டுமென்று பிரார்த்திக்கின்றேன். சிலவேளை எனது எஞ்சிய வாழ்க்கையில் நான் தேடுகின்ற சந்தோசத்தை கண்டுகொள்ளலாம்.ஆம், உண்மையில் நான் எயிட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவள். சிலவேளை இது அல்லாஹ்வின் புறத்திலிருந்து வந்த சோதனையாக இருக்கலாம். ஏனெ னில் அதன் மூலம் சரியான பாதைக்கு நான் திரும்பியிருக்கின்றேன். நான் எயிட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டதற்கான காரணத்தை ஒருபோதும் சொல்ல மாட்டேன். நான் அதனைப் பற்றி சொல்வதற்கு வெட்கப்படுகின்றேன்.என்றாலும் இஸ்லாமிய யுவதிகளே உங்கள் இரட்சகனின் பால் மீண்டுவிடுங் கள். எல்லா விடயங்களும் அழிந்துவிடும் என்பதை அறிந்துகொள்ளுங்கள். யுவ திகளே ஹராமான இன்பங்களைவிட்டும் தூரமாகிக் கொள்ளுங்கள். அல்லா ஹுத்தஆலாவிற்கு கட்டுப்படுவதை விட்டுவிடுவதிலிருந்தும் தூரமாகிக் கொள் ளுங்கள். நான் உங்களுக்காக, நீங்கள் உங்கள் மார்க்கத்தின்பால், உங்கள் குடும் பத்தின்பால், உங்கள் கணவனின் பால் திரும்புவதற்காக பிரார்த்திக்கின்றேன். யார் அல்லாஹ்வுக்காக ஒரு செயலை விட்டு விடுகின்றாறோ அல்லாஹுத்த ஆலா அவருக்கு அதனை விட சிறந்ததொன்றைக் கொண்டு ஈடு செய்வான்.இஸ்லாமிய யுவதிகளே விழித்துக் கொள்ளுங்கள். மார்க்கமும் அதனைப் பற் றிப் பிடித்துக் கொள்வதும்தான் உங்கள் வெற்றிக்கான உண்மையான பாதையா கும். எனக்காக பிரார்த்தியுங்கள். எனக்கு அல்லாஹ்வின் அருளும் மன்னிப்பும் கிடைக்க வேண்டுமென்பதற்காக பிரார்த்தியுங்கள்.உங்கள் இஸ்லாமிய சகோதரிமனார்

Govindakudi Mosque

zakat calculator