Monday, September 27, 2010

Benefits of Lemon Water for Health

1. Good for stomach


Lemon can help relieve many digestion problems when mixed with hot water. These include nausea, heartburn and parasites. Due to the digestive qualities of lemon juice, symptoms of indigestion such as heartburn, bloating and belching are relieved. By drinking lemon juice regularly, the bowels are aided in eliminating waste more efficiently. Lemon acts as a blood purifier and as a cleansing agent. The intake of lemon juice can cure constipation. It is even known to help relieve hiccups when consumed as a juice. Lemon juice acts as a liver tonic and helps you digest your food by helping your liver produce more bile. It decreases the amount of phlegm produced by your body. It is also thought to help dissolve gallstones.

2. Aids in Dental Care

Lemon water is used in dental care also. If fresh lemon juice is applied on the areas of toothache, it can assist in getting rid of the pain. The massages of lemon juice on gums can stop gum bleeding. It gives relief from bad smell and other problems related to gums.

3. Cures Throat Infections

Lemon is an excellent fruit that aids in fighting problems related to throat infections, sore throat and tonsillitis as it has an antibacterial property. For sore throat, dilute one-half lemon juice with one-half water and gargle frequently.

4. Good for Weight Loss

One of the major health benefits of drinking lemon water is that it paves way for losing weight faster, thus acting as a great weight loss remedy. If a person takes lemon juice mixed with lukewarm water and honey, it can reduce the body weight as well.

5. Controls High Blood Pressure

Lemon water works wonders for people having heart problem, owing to its high potassium content. It controls high blood pressure, dizziness, nausea as well as provides relaxation to mind and body. It also reduces mental stress and depression.

6. Assist in curing Respiratory Disorders

Lemon water assists in curing respiratory problems, along with breathing problems and revives a person suffering from asthma.

7. Good for treating Rheumatism

Lemon is also a diuretic and hence lemon water can treat rheumatism and arthritis. It helps to flush out bacteria and toxins out of the body.

8. Reduces Fever

Lemon water can treat a person who is suffering from cold, flu or fever. It helps to break fever by increasing perspiration.

9. Acts as a blood purifier

The diseases like cholera or malaria can be treated with lemon water as it can act as a blood purifier.

Sunday, September 19, 2010

வட்டி 'சமுதாயத்தின் சாபக்கேடு'

சமீபத்தில் எத்தனையோ நாடுகள் பொருளாதாரத்தில் மாபெரும் வீழ்ச்சியைக் கண்டன. அவற்றுக்கு மூலகாரணம் வட்டியை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரக் கொள்கையேயாகும். உலகின் மிகப்பிரபல்யமான சர்வதேச வர்த்தக நிறுவனங்கள் சின்னஞ்சிறிய அதிர்வுகளைக்கூட தாக்குப்பிடிக்க முடியாமல் முழுவதும் முடங்கிப்போயின, இதற்கு காரணம் வட்டி அடிப்படையிலான வர்த்தகமேயாகும். பல குடும்பங்கள் அழிந்து போனதற்கும் வட்டியே முதற்க் காரணமாகும். இஸ்லாம் வட்டியை முற்றாக தடை செய்கிறது. அவற்றை தெரிந்து கொண்டு நமது வாழ்வில் கடைபிடிப்பது அவசியமாகும்.
1. வட்டி என்றால் என்ன?:

அசலுக்கு அதிகமாக வாங்கும் தொகையே வட்டி எனப்படும். இதை கீழ்காணும் குர்ஆன் வசனம் விளக்குகிறது.

'...ஆயினும் நீங்கள் (வட்டி வாங்கியதைப் பற்றி) மனம் திருந்தி மீண்டு விட்டால், உங்கள் பொருளின் அசல் தொகை உங்களுக்கு உண்டு...' (அல்குர்ஆன் 2:279)

இரட்டித்து அதிகரிப்பது வட்டியின் குணம். இதை அல்லாஹ் தனது திருமறையில் சொல்கிறான்.
'ஈமான் கொண்டோரே! இரட்டித்துக் கொண்டே அதிகரித்த நிலையில் வட்டி (வாங்கித்) தின்னாதீர்கள்...' (அல்குர்ஆன் 3:130)

2. வட்டிக்கும் வியாபாரத்திற்கும் இடையே உள்ள வேறுபாடு:

வட்டியும் வியாபாரமும் வேறு வேறு என்பதை திருக்குர்ஆன் ஆணித்தரமாக கூறுகிறது.

'வட்டியை உண்போர் (மறுமை நாளில்) ஷைத்தான் தீண்டியவனைப் போல் பைத்தியமாகவே எழுவார்கள். 'வியாபாரம் வட்டியைப் போன்றதே' என்று அவர்கள் கூறியதே காரணம்...' (அல்குர்ஆன் 2:275)

வட்டிக்கும் வியாபாரத்திற்கும் மிக முக்கியமான வேறுபாடுகள் உள்ளன.

1. வியாபாரத்தில் பொருள்கள் கைமாறும் அதற்குரிய விலையும் கைமாறும். ஆனால் வட்டியில் பொருள்கள் கைமாறாது.

2. வியாபாரத்தில் பொருளும் விலையும் கைமாறியவுடன் அப்போதே அது முடிவுக்கு வந்து விடும். ஆனால் வட்டியில் குறிப்பிட்ட தவணைக்கு பிறகே முடிவுக்கு வரும்.

3. வியாபாரத்தில் பொருளுக்குரிய விலை கைமாறும், கூறுதல் தொகை கொடுக்கப்பட மாட்டாது. ஆனால் வட்டியில் அசலை விட கூடுதல் தொகை கொடுக்கப்படும்.

3. வட்டி ஒரு பெரும் பாவம் :

'ஏழு பெரும் பாவங்களை விட்டும் தவிர்ந்து கொள்ளுங்கள்' என்று நபி (ஸல்) அவர்கள் சொன்ன போது, 'சொல்லுங்கள் அல்லாஹ்வின் தூதரே!' என்று அவர்களது தோழர்கள் கூறினார்கள். அப்போது, '1.அல்லாஹ்வுக்கு இணை வைப்பது. 2.சூனியம். 3.கொலை 4.வட்டி உண்பது 5.அனாதைகளின் சொத்தை உண்பது 6.போரில் புறமுதுகு காட்டுவது 7.அபலைப் பெண் மீது அவதூறு சொல்வது' என்று கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்கள்: புகாரி, முஸ்லிம்)

4. வட்டி ஒரு கொடிய குற்றம் :

'ஒரு திர்ஹம் வட்டி என்பது அல்லாஹ்விடத்தில் முப்பத்து ஆறு முறை விபச்சாரம் செய்த குற்றத்தை விட கொடியதாகும்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் ஹன்ழலா (ரலி), நூல்: தாரகுத்னீ)

மற்றொரு அறிவிப்பில்,

'வட்டிக்கு 99 வாயில்கள் உள்ளன, அதில் மிகவும் தாழ்ந்தது (சிறியது), ஒருவன் தன் தாயோடு (ஜினா செய்ய) போவதைப் போன்றது' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

ஒரு செயல் எந்த அளவுக்கு பாவமானது என்பதை தெரிந்து கொள்ள அதற்கு அளிக்கப்படும் தண்டனையை வைத்தே தெரிந்து கொள்ள முடியும். விபச்சாரம் செய்பவர்களுக்கு மரணதண்டனை வழங்குமாறு இஸ்லாம் கூறுகிறது. விபச்சாரம் செய்யும் ஆண்களும் பெண்களும் நரகில் நிர்வாணமாக நெருப்பு மூட்டப்பட்ட, எளிதில் வெளிவர முடியாத அடுப்புக்குள் கிடப்பார்கள். வட்டி வாங்குவது விபச்சாரம் செய்வதை விட கொடியது என்றால் அதற்கான தண்டனை எத்தனை மடங்கு அதிகமாக இருக்க வேண்டும் என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

விபச்சாரம் செய்பவனை சமுதாயம் இழிவாக பார்ப்பதைப் போன்று அல்லது அதை விட இழிவாக வட்டி வாங்குபவன் பார்க்கப்பட தகுதியானவன்.

5. அல்லாஹ்வால் சபிக்கப்பட்டவர்கள் :

'வட்டி உண்பவனையும், வட்டி கொடுப்பவனையும், அதற்காக கணக்கு எழுதுபவனையும், அதற்கு சாட்சியம் கூறும் இருவரையும் அல்லாஹ் சபிக்கிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: ஜாபிர் (ரலி), நூல்: முஸ்லிம்)

6. வட்டி வாங்கியோருக்கு தண்டனை:

1. நிரந்தர நரகம்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இன்றிரவு (கனவில்) இரண்டு மனிதர்களைக் கண்டேன். அவர்கள் என்னிடம் வந்து தூய்மையான ஒரு நிலப்பகுதிக்கு என்னை அழைத்துச் சென்றனர். நாங்கள் நடந்து வந்தபோது இரத்த ஆறு ஒன்றை அடைந்தோம். ஆற்றில் ஒருவர் நின்றுகொண்டிருந்தார். ஆற்றின் நடுவில் மற்றொருவர் தமக்கு முன்னே கற்களை வைத்துக்கொண்டு நின்றுகொண்டிருந்தார். ஆற்றில் உள்ளவர் வெளியேற முனையும்பொது அவர் வாயில் (ஆற்றின் நடுவில்) நின்றுகொண்டிருந்தவர் கல்லை எறிந்து அவர் முன்பு நின்ற இடத்திலேயே அவரைக் கொண்டுபோய் நிறுத்தினார். அவர் வெளியேற வரும்போதெல்லாம் இவர் அவரது வாயில் கல்லை எறிய, அதனால் அவர் முன்பிருந்த இடத்திற்கே திரும்பிச் சென்று கொண்டிருந்தார். 'அவர் யார்,' என்று (என்னை அழைத்துச் சென்றவர்களிடம்) நான் கேட்டேன், அதற்கவர்கள் 'ஆற்றில் நீர் பார்த்தவர் வட்டி உண்பவராவார்.' எனக் கூறினார்கள். இதை சமுரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூல்: புகாரி 2085)

நிரந்தர நரகத்திற்குச் செல்பவர்கள் பட்டியலில் மூன்று பேர் இடம் பெறுகிறார்கள். 1.கொலையாளி, 2.காபிர்கள் 3.வட்டி உண்பவர்.

ஏனைய பாவங்களை அல்லாஹ் நாடினால் குறிப்பிட்ட காலம் தண்டனைக்குப் பிறகு நரகவாசிகளை மன்னித்து சொர்க்கத்தில் சேர்ப்பான்.

7. போர்ப் பிரகடணம்:

வட்டி என்பது ஹராம் என்பதை ஒரு இஸ்லாமியன் தெரிந்து கொண்ட பின்பும் வட்டி வாங்குவதை விட வில்லையானால் அல்லாஹ்வும் அவனது தூதரும் அவனுக்கு எதிராக போர் பிரகடணம் செய்கிறார்கள் என்பதை அல்லாஹ் திருமறையில் சொல்கிறான்.

'ஈமான் கொண்டவர்களே! நீங்கள் முஃமின்களாக இருந்தால் அல்லாஹ்வுக்கு பயந்து எஞ்சியுள்ள வட்டியை வாங்காது விட்டு விடுங்கள். அவ்வாறு நீங்கள் செய்யவில்லையானால் அல்லாஹ்விடமிருந்தும் அவனது தூதரிடமிருந்தும் போர் அறிவிக்கப்பட்டு விட்டது (என்பதை அறிந்து கொள்ளுங்கள்)' (அல்குர்ஆன் 2:279)

அல்லாஹ்வும் அவனது தூதரும் வட்டி வாங்குவோருக்கு எதிராக போர் செய்கிறார்கள் என்றால் அவனது நிலை இம்மையிலும் மறுமையிலும் மிக மோசமானதாக ஆகி விடும் என்பது பொருள். இன்னும் தெளிவாக சொல்வதானால் இம்மையிலும் மறுமையிலும் அவன் நாசமாகி விடுவான் என்பது பொருள்.

8. வட்டி வாங்குவோரின் அவல நிலை :

1. மறுமையில் பைத்தியக்காரனாக எழுப்பப்படுவான்.

'வட்டியை உண்போர் (மறுமை நாளில்) ஷைத்தான் தீண்டியவனைப் போல் பைத்தியமாகவே எழுவார்கள்...' (அல்குர்ஆன் 2:275)

2. நபி (ஸல்) அவர்களின் சாபம்.

'மேலும், வட்டி (வாங்கி) உண்பவனையும் வட்டி உண்ணக் கொடுப்பவனையும் நபி (ஸல்) அவர்கள் சபித்தார்கள்' (நூல்: புகாரி 5962)

3. அல்லாஹ்வின் சாபம்.

'வட்டி உண்பவனையும், வட்டி கொடுப்பவனையும், அதற்காக கணக்கு எழுதுபவனையும், அதற்கு சாட்சியம் கூறும் இருவரையும் அல்லாஹ் சபிக்கிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: ஜாபிர் (ரலி), நூல்: முஸ்லிம்)

4. போர் பிரகடணம்.

'ஈமான் கொண்டவர்களே! நீங்கள் முஃமின்களாக இருந்தால் அல்லாஹ்வுக்கு பயந்து எஞ்சியுள்ள வட்டியை வாங்காது விட்டு விடுங்கள். அவ்வாறு நீங்கள் செய்யவில்லையானால் அல்லாஹ்விடமிருந்தும் அவனது தூதரிடமிருந்தும் போர் அறிவிக்கப்பட்டு விட்டது (என்பதை அறிந்து கொள்ளுங்கள்)' (அல்குர்ஆன் 2:279)

9. அடமானம்:

அடமானம் இரண்டு வகைப்படும். அதில் ஒன்று, கடன் கொடுப்பவர் பெருமானமுள்ள பொருளை அதற்கு ஈடாக பெற்று கடன் கொடுப்பார். இரண்டாவது, பெருமானமுள்ள பொருளை பெற்றுக் கொண்டு கடன் கொடுப்பவர் வட்டியும் வாங்குவார்.

இரண்டாவது வகைதான் இப்போது நடைமுறையில் இருக்கும் முறையாகும். வங்கிகள், தனியார் நிதிநிறுவனங்கள் இம்முறையைத் தான் பின்பற்றுகின்றன.

முதல் முறை அடமானம் அனுமதிக்கப்பட்ட முறையாகும். இதற்கு கீழ்வரும் குர்ஆன் வசனமும் ஹதீஸும் ஆதாரமாகும்.

நீங்கள் பயணத்திலிருந்து (கடன் கொடுக்கல் வாங்கலில் ஈடுபட வேண்டிய அவசியம் ஏற்பட்டு) எழுத்தாளனையும் (தோதையும்) பெறாவிட்டால் (கடன் பத்திரத்திற்குப் பதிலாக) நீங்கள் அடமானத்தைக் கைப்பற்றிக் (கொண்டு கடன் கொடுத்துக்) கொள்ளுங்கள்' (அல்குர்ஆன்)

நபி (ஸல்) அவர்கள் மதீனாவில் ஒரு யூதனிடம் தம் உருக்குச் சட்டையை அடமானமாக கொடுத்து உணவுப் பொருட்களைக் கடனாகப் பெற்றார்கள். (நூல்கள்: புகாரி, முஸ்லிம்)

வட்டி பெறப்படும் இரண்டாவது முறையான அடமானம் அனுமதிக்கப்படாத தடுக்கப்பட்ட முறையாகும். அடமானமாக அல்லது ஈடாக பெறப்பட்ட பொருளை உபயோகிப்பது கூட அனுமதிக்கப்பட வில்லை. அதற்கு செலவு செய்வதைப் பொருத்து உபயோகித்துக் கொள்ள சிலவற்றிற்கு அனுமதியுண்டு, என்கிற போது, கொடுத்த கடனுக்கு அடமானப் பொருளையும் அதே கடனுக்கு வட்டியும் வாங்குவது மனிதாபமானமற்ற கொடுஞ் செயலாகும்.

'சவாரிக்குரிய கால்நடை அடமானம் வைக்கப்பட்டால், அதன் (தீவனம் போன்ற) செலவுகளுக்குத் தக்கவாறு (அதன் மீது) சவாரி செய்யலாம். பால் கறக்கும் கால்நடை அடமானம் வைக்கப்பட்டால், அதன் செலவுக்குத் தக்கவாறு அதன் பாலை அருந்தலாம். பால் அருந்துபவரையே தான் செலவு சார்ந்திருக்கும்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்கள்: புகாரி, முஸ்லிம்)

10. ஒத்தி வட்டியா?:

ஒத்தி என்பது ஒருவர் ஒரு குறிப்பிட்ட தொகையை குறிப்பிட்ட காலத்திற்காக வீட்டுச் சொந்தக்காரரிடம் கொடுத்து விட்டு, அவரது வீட்டில் இவர் குடியிருப்பார் அல்லது மற்றவருக்கு வாடகைக்கு விட்டு விடுவார். நிர்ணயிக்கப்பட்ட காலம் முடிந்ததும் பணம் திருப்பிச் செலுத்தப்படும், வீடும் வீட்டுச் சொந்தக்காரரிடம் ஒப்படைக்கப்படும்.

ஒத்தியில் ஈடாக கொடுக்கப்படும் வீட்டையோ கடையையோ, ஒத்தி வாங்கியவர் குடியிருக்கவோ வாடகைக்கு விடவோ முடியாது. அவ்வாறு செய்தால் அது வட்டியாகும் என்பதை இந்த ஹதீஸ் விளக்குகிறது.

'சவாரிக்குரிய கால்நடை அடமானம் வைக்கப்பட்டால், அதன் (தீவனம் போன்ற) செலவுகளுக்குத் தக்கவாறு (அதன் மீது) சவாரி செய்யலாம். பால் கறக்கும் கால்நடை அடமானம் வைக்கப்பட்டால், அதன் செலவுக்குத் தக்கவாறு அதன் பாலை அருந்தலாம். பால் அருந்துபவரையே தான் செலவு சார்ந்திருக்கும்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்கள்: புகாரி, முஸ்லிம்)

Friday, September 17, 2010

ஆன்-லைனில் வேலைவாய்ப்புக்கு பதிவு

தமிழகத்தில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு அலுவலகங்களையும் இணையதளம் மூலம் ஒருங்கிணைத்து, வேலைவாய்ப்பு பதிவுகளை ஆன்-லைன் மூலம் செய்யும் வசதியையும், "எம்பவர்' என்ற புதிய இணையதளத்தையும் துணை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்.


தமிழகத்தில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகங்களை கணினிமயமாக்கல் பணி, 1988ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. படிப்படியாக அனைத்து அலுவலகங்களும் கணினிமயமாக்கப்பட்டன. வேலைவாய்ப்பகத்தின் சேவைகளை ஒளிவுமறைவற்ற வகையில் அளிக்க, அனைத்து வேலைவாய்ப்பு அலுவலகங்களையும் இணையதளம் மூலம் ஒருங்கிணைக்க, தமிழக அரசு 5.02 கோடி ரூபாயை ஒதுக்கியது. இப்பணிகள், "எல்காட்' நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டு, அதன் மூலம், "எம்ஜீஸ்' நிறுவனத்திடம் புதிய மென்பொருள் தயாரிக்கும் பணி வழங்கப்பட்டது. இப்பணி, "புராஜக்ட் எம்பவர்' என பெயரிடப்பட்டு, வேலைவாய்ப்பு அலுவலகங்களுக்கான புதிய மென்பொருளும், இணையதளமும் உருவாக்கப்பட்டுள்ளது. http://www.tnvelaivaaippu.gov.in/   என்ற இந்த புதிய இணையதளத்தை, துணை முதல்வர் ஸ்டாலின் நேற்று துவக்கி வைத்தார்.

இந்த புதிய இணையதளத்தின் மூலம் முதற்கட்டமாக பதிவுதாரர்கள் அனைவரும் ஆன்-லைன் மூலம் நேரடியாக பகிர்ந்து கொள்ளலாம். இனி புதிதாக பதிவு செய்ய வேலைவாய்ப்பு அலுவலகங்களை நேரில் அணுக தேவையில்லை. மேலும், பதிவு மட்டுமன்றி ஆன்-லைன் மூலம் தங்களது பதிவை புதுப்பித்துக் கொள்ளலாம். இதன் மூலம் வேலைவாய்ப்பு அலுவலகங்களுக்கு நேரில் வருவதால் ஏற்படும் போக்குவரத்துச் செலவு மற்றும் இதர செலவுகள் தவிர்க்கப்படும். இணையதளத்தில் 65 லட்சம் வேலைவாய்ப்பக பதிவுதாரர்களின் விவரங்கள் அளிக்கப்படும். இதை பார்வையிட்டு தங்களது பதிவு விவரங்களை சரிபார்த்துக் கொள்ள வேண்டும். இணையதளத்தில் பதிவுதாரர்களின் விவரங்களில் மாறுபாடு இருந்தால், உரிய சான்றிதழுடன் வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரில் அணுகி சரி செய்து கொள்ளலாம்.

இவ்வாறு பதிவு விவரங்களை சரி பார்ப்பதற்காக, பதிவுதாரர்களுக்கு இம்மாதம் 15 (நேற்று) முதல் ஜனவரி 14ம் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்படுகிறது. இதையடுத்து, இரண்டாம் கட்டமாக, வேலையளிப்பவர்களுக்கு பட்டியல் அனுப்பும் பணி, 2011 ஜனவரி 15ம் தேதிக்கு பிறகு மேற்கொள்ளப்படும். பதிவுதாரர்கள் தனியார் துறையில் பணியமர்த்தம் பெற உதவியாக, பதிவுதாரர்களின் விவரங்களை பார்வையிடும் வகையில் இணையதளம் அமைக்கப்பட்டுள்ளது.

Sunday, September 5, 2010

சுவனத்திற்கு செல்லும் எளிய வழிகள்!

நீங்கள் சுவர்க்கத்தை கேட்பதாக இருந்தால் அல்லாஹ்விடத்தில் ஃபிர்தெளஸ் எனும் சுவனத்தை கேளுங்கள் என நபி[ஸல்லலாஹு அலைஹி வஸல்லம் நமக்கு அறிவுறுத்தியுள்ளார்கள்.

யா அல்லாஹ் முஸ்லிம்களாகிய எங்களுக்கு எங்களின் அமல்களின் குறைகளை  மன்னித்து ஃபிர்தெளஸ் எனும் சுவனத்தை தந்தருள்வாயாக!

கல்வி கற்க புறப்பட்டால் சுவனத்தின் பாதை எளிதாகும்!

யார் கல்வியைத் தேடி பயணமாகின்றானோ அவனுக்கு சுவனத்தின் பாதையை அல்லாஹ் எளிதாக்கிவிடுகிறான். (முஸ்லிம்)
சுவனத்தில் மாளிகை வேண்டுமா? பள்ளியைக் கட்டுங்கள்!
எவனொருவன் அல்லாஹ்வுக்காக பள்ளியொன்றை கட்டுகிறானோ, அவனுக்கு அதே போலொரு வீட்டை அல்லாஹ் கட்டுகிறான்என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)
சுவனத்தில் அநாதைகளை ஆதரிப்போரின் உன்னத நிலை!
நானும் அநாதையின் காப்பாளரும் சொர்க்கத்தில் இப்படி இருப்போம்என்று கூறியபடி நபி (ஸல்) அவர்கள் தங்களின் சுட்டு விரலாலும் நபி (ஸல்) விரலாலும் (சற்றே இடைவெளிவிட்ட) சைகை செய்தார்கள். (புகாரி)
நோய் விசாரிக்கச் சென்றால் சுவனத்தில் ஒரு தோட்டம்!
ஒரு முஸ்லிம் நோயுற்ற முஸ்லிமை விசாரிக்கக் காலையில் சென்றால் அவருக்காக ஏழாயிரம் வானவர்கள் மாலை வரை அல்லாஹ்விடம் பிரார்த்திக்கிறார்கள். அவ்வாறே மாலையில் நோய்விசாரிக்கச் சென்றால் மறுநாள் காலை வரை ஏழாயிரம் வானவர்கள் அவருக்காகப் பிரார்த்திக்கிறார்கள். அவருக்கு சுவனத்தில் ஒரு தோட்டம் இருக்கும். (திர்மிதீ)
நரகம் ஹராமாக்கப்பட வேண்டுமா?
எவர் லா இலாஹ இல்லல்லாஹ்என்பதை அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடி கூறுவாரோ அவருக்கு நரகம் ஹராமாக்கப்பட்டு விடும்என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி,முஸ்லிம்)
மக்களை அதிகமாக சுவனத்தில் சேர்ப்பவைகள்!
மக்களை சுவனத்தில் சேர்ப்பதில் அதிகக் காரணமாக விளங்குவது எது? என நபி (ஸல்) அவர்களிடம் வினவப்பட்டபோது இறையச்சமும் நற்குணமும் தான்எனக் கூறினார்கள்’ (திர்மிதீ)
உண்மை பேசுவது சுவனத்திற்கு வழிகோலும்!
உண்மை, நிச்சயமாக நன்மைக்கு வழிகாட்டும், நன்மையானது நிச்சயம் சொர்க்கத்திற்கு வழிகாட்டும்.(புகாரி)
கோபத்தை அடக்கினால் சுவனத்து கண்ணழகிகளில் விரும்பியவரை மணக்கலாம்!
யார் கோபத்தை வெளிப்படுத்தும் சக்தியுள்ள நிலையில் அதை அடக்குகின்றாரோ அவரை அல்லாஹ் மறுமையில் அனைத்துப் படைப்பினங்களுக்கும் மத்தியில் அழைத்து ஹூருல் ஈன்களில் சுவர்க்கத்து கண்ணழகிகளில் தாம் விரும்பியவரை அனுபவித்துக்கொள்ளக்கூடிய உரிமையை வழங்குவான் (திர்மிதீ)
பெற்றோரைப் பேணுவதால் சுவனம் கிடைக்கும்!
அவன் கேவலப்பட வேண்டும்என நபி (ஸல்) அவர்கள் மும்முறை கூறிய போது தோழர்கள், அல்லாஹ்வின் தூதரே! அவன் யார்? எனக் கேட்டனர். அதற்கவர்கள், ‘தமது பெற்றோரில் ஒருவரோ அல்லது இருவருமோ வயோதிகமடைந்திருக்கும் நிலையில் அவர்களையடைந்து (அவர்களுக்காக பணிவிடை செய்யாமல்  அதனால்) சுவனத்தில் நுழையும் வாய்ப்பை இழந்தவன்எனக் கூறினார்கள். (முஸ்லிம்)
இரண்டைப் பேணுவதன் மூலம் நபி (ஸல்) அவர்கள் நமக்கு சுவர்க்கத்திற்கு பொறுப்பேற்பார்கள்!
எவர் தன் நாவையும், மருமஸ்தானத்தையும் பாதுகாப்பதாக எனக்கு வாக்களிக்கின்றாரோ அவருக்கு நான் சுவனத்தைப் பொறுப்பேற்றுக் கொள்கிறேன்என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)
நபி (ஸல்) அவர்களுடன் சுவனத்தில்!
நானும் அனாதைக்கு அபயமளிப்பவரும் சுவனத்தில் இவ்வாறு இருப்போம் என நபிகள் (ஸல்) அவர்கள் சுட்டு விரலையும், நடு விரலையும் இணைத்துக் காட்டினார்கள்” (புகாரி)
நான்கு விசயங்கள் ஒரே நாளில் ஒருவர் செய்தால் அவர் சுவனம் சென்று விட்டார்!
எவர் காலையில் நோன்பாளியாக, இன்னும் ஒரு நோயாளியை தரிசித்து, ஒரு ஜனாஸாவில் கலந்து, ஒரு ஏழைக்கும் உணவளித்தால் (ஒரே நாளில் இவைகள் அமைந்து விடுமானால்) அவர் சுவர்க்கம் நுழைந்து விட்டார்.
விரும்பிய வாயிலின் வழியாக சுவனம் செல்ல!
எவர் ஒழுச் செய்ததன் பின் அஷ்ஹது அல்லா இலாஹ இல்ல ல்லாஹு வஹ்தஹு லா ஷரீக லஹு வஅஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வரஸுலுஹுஅவருக்கு சுவனத்தின் எட்டு வாயில்களும் திறக்கப்படும் அவர் விரும்பிய வாயில் ஊடாக சுவர்க்கம் நுழைவார்.
ஏற்றுக்கொள்ளப்பட்ட ஹஜ்ஜிற்கு சுவனத்தைத் தவிர வேறு கூலியில்லை!
ஓர் உம்ரா செய்வது அடுத்த உம்ரா செய்யும் வரையிலான பவத்திற்குப் பரிகாரமாகும். ஏற்றுக்கொள்ளப்பட்ட ஹஜ்ஜிற்கு சொர்க்கத்தைத் தவிர வேறு கூலியில்லை. (முஸ்லிம்)
சுன்னத்தான தொழுகைகளைப் பேணினால் சுவனத்தில் மாளிகை!
ஒரு நாளைக்கு 12 ரக்அத்துகள் நஃபிலாக (உபரியாக) யார் தொழுது வருகிறாரோ அவருக்கு சுவனத்தில் ஒரு மாளிகை எழுப்பப்படும்”.

Thursday, September 2, 2010

THE ROLE MODEL PROPHET MUHAMMED (PBUH)

• When becoming humiliated, remember the Prophet [PBUH] in Ta'if. 
 • When being starved, remember the Prophet [PBUH] tying two stones to his stomach in the battle of Khandaq. 
 • When becoming angry, remember the Prophet [PBUH]'s control of anger on the martyrdom of his beloved Uncle Hamza. 
 • When losing a tooth, remember the Prophet [PBUH]'s tooth in the battle of Uhud. 
• When bleeding from any part of the body, remember the Prophet [PBUH]'s body covered in blood on his return from Ta'if. 
 • When feeling lonely, remember the Prophet [PBUH]'s seclusion in Mount Hira . 
 • When feeling tired in Salaat, remember the Prophet [PBUH]'s blessed feet in Tahajjud. 
• When being prickled with thorns, remember the Prophet [PBUH]'s pain from Abu Lahab's wife. 
 • When being troubled by neighbours, remember the old woman who would empty rubbish on the Prophet [PBUH]. 
 • When losing a child, remember the Prophet [PBUH]'s son, Ibrahim. 
 • When beginning a long journey, remember the Prophet [PBUH]'s long journey to Madinah. 
 • When going against a Sunnah, remember the Prophet [PBUH]'s intercession, (Ummati, Ummati, Ummati) (My Ummah). 
 • When sacrificing an animal, remember the Prophet [PBUH]'s sacrifice of 63 animals for his Ummah. 
 • Before shaving your beard, remember the Prophet [PBUH]'s face rejecting the two beardless Iranians. 
• When falling into an argument with your wife, remember the Prophet [PBUH]'s encounter with Aisha and Hafsa. 
 • When experiencing less food in the house, remember the Prophet [PBUH]'s days of poverty. 
 • When experiencing poverty, remember the Prophet [PBUH]'s advice to Ashaab-e-Suffa (People of Suffa). 
 • When losing a family member, remember the Prophet [PBUH]'s departure from this world. 
 • When becoming an orphan, remember the Prophet [PBUH]'s age at six. 
 • When sponsoring an orphan, remember the Prophet [PBUH]'s sponsor for Zaid ibn Haritha. 
 • When fearing an enemy, remember the Prophet [PBUH]'s saying to Abu Bakr in Mount Thour . 
 • Whatever situation you may find yourself in, remember your role model, the best of creation: Prophet [PBUH] Muhammad.

Wednesday, September 1, 2010

சிரித்து வாழ வேண்டும்

டென்ஷன் என்னும் மனஇறுக்கம்மனித முகங்களில் இருந்து புன்னகையை அப்புறப்படுத்தி பல காலமாகி விட்டது."என் பணியில் டென்ஷன்என்று சொல்லிக்கொள்வதை சிலர் பெருமையாகவும்நாகரீகமாகவும் கூட கருதுகின்றனர். "லாபோதெரபிஎன்ற வைத்திய முறை கூட மனிதர்களைச் சிரிக்க வைக்க வந்திருக்கிறதாம்! இது சரியான போக்கல்ல! நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் "இன்முகம் காட்டுவது ஒரு தர்மம்என்று போதித்திருக்கிறார்கள். ஒருநாள் ஒரு மூதாட்டி நபிகளாரைத் தேடி வந்தார். அவரை வரவேற்ற நாயகம்(ஸல்) அவர்கள், "அம்மா! தங்கள் தேவை என்ன?'' என்றார்கள். ""இறைத்தூதரே! என்னிடம் ஒட்டகமோகோவேறு கழுதையோ இல்லை. நெடுந்தூர பயணம் செய்யும் சமயங்களில் மிகவும் சிரமப் படுகிறேன்,''என்றார். அந்த மூதாட்டியின் வேண்டுகோளைக் கேட்டு புன்னகைத்த நாயகம், ""சரி...ஒரு ஒட்டகக்குட்டியை வரவழைத்துத் தருகிறேன்,'' என்றார்கள். அந்தப் பெண்மணி, ""ஒட்டகக்குட்டி என்னுடைய தேவையை நிறைவு செய்யாதே! என்னுடைய சுமைகளைச் சுமந்து செல்ல  அதனால் இயலாதே. அதை வைத்துக்கொண்டு என்ன செய்வேன்?'' என்றார்.  ""இல்லைஇல்லை...ஒரு ஒட்டகக்குட்டியைத் தான் உங்களுக்கு என்னால் தர முடியும். அதில் தான் நீங்கள் பயணிக்க வேண்டும்,'' என்ற நாயகம்(ஸல்) அவர்கள்ஒரு பணியாளரிடம் கண்ஜாடை காட்டினார்கள். சற்றுநேரத்தில்பணியாளர் ஒரு பெரிய ஒட்டகத்துடன் வந்து நின்றார்.  ""அண்ணலாரே! தாங்கள் ஒட்டகக்குட்டியைத் தருவதாகத் தானே சொன்னீர்கள். இப்போது பெரிய ஒட்டகத்தை வரவழைத்திருக்கிறீர்களே,''என்றதும்நாயகம் புன்னகைத்தபடியே,  ""அம்மையாரே! ஒவ்வொரு ஒட்டகமும் அதன் தாய்க்கு குட்டியாகத்தானே இருந்திருக்கும்,''என்றார்கள்.இதைக்கேட்டு அந்த அம்மையார் வாய்விட்டு சிரித்தார். நாமும் சிரிக்க வேண்டும்நம்மால் பிறரும் சிரிக்க வேண்டும் என்பதே இன்றைய ரமலான் சிந்தனை.

Govindakudi Mosque

zakat calculator