Tuesday, August 30, 2016

பிளஸ் 1 மாணவிகளுக்கு 12 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை

மவுலான ஆசாத் நேஷனல் ஸ்காலர்ஷிப் திட்டம்

இந்தியாவில் உள்ள சிறுபான்மை மாணவிகள் பொருளாதார வசதியின்மையால் தங்களது படிப்பை தொடரமுடியாமல் பாதியிலேயே கைவிடும் நிலைக்கு ஆளாகின்றனர். இதனையடுத்து இவர்கள் தொடர்ந்து படிப்பதற்காக உருவாக்கப்பட்டது தான் மவுலான ஆசாத் நேஷனல் ஸ்காலர்ஷிப் திட்டம். இது மத்திய சிறுபான்மை அமைச்சகத்தின் கீழ் 1989ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
சிறுபான்மை மாணவிகள்

இந்தியாவின் முதல் கல்வி அமைச்சரான மவுலானா ஆசாத் பெயரில் துவக்கப்பட்ட இந்த திட்டத்தின் படி, நாட்டில் உள்ள முஸ்லிம், கிறிஸ்துவம், சீக்கியம், புத்தம் போன்ற சிறுபான்மை சமூகத்தில் உள்ள மாணவிகள் மட்டும் இத்திட்டத்தில் பயன்பெற முடியும்.
கல்வித்தகுதி

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 55 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்று, தற்போது பிளஸ் 1 படிக்கும் மாணவிகள் மட்டும் இந்த உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம். குடும்ப வருமானம் ஆண்டுக்கு ஒரு லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். வேறு எதாவது ஒரு கல்வி உதவித் தொகை பெறுபவர்கள் இதற்கு விண்ணப்பிக்க இயலாது.
உதவித்தொகை

இத்திட்டத்தின் படி விண்ணப்பிக்கும் தகுதியுள்ள மாணவிகளுக்கு 12 ஆயிரம் ரூபாய் உதவித்தொகையாக வழங்கப்படுகிறது. இத்தொகை பிளஸ் 1 படிக்கும் போது 6 ஆயிரம் ரூபாயும், பிளஸ் 2 படிக்கும் போது 6 ஆயிரம் ரூபாயும் என இருதவணையாக வழங்கப்படும்.  இத்தொகை மாணவிகளின் பள்ளிக் கட்டணம், புத்தகம், எழுதுபொருள், விடுதிக்கட்டணம் போன்றவற்றுக்காக வழங்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை

விண்ணப்பங்களை www.maef.nic.in என்ற இணையதளத்திலிருந்து டவுன்லோட் செய்து கொள்ளலாம். விண்ணப்பக்கட்டணம் எதுவுமில்லை. மாணவிகள் தாங்கள் படிக்கும் பள்ளி முதல்வரிடம் சான்று பெற்று விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும். விண்ணப்பங்களை கீழ் உள்ள முகவரிக்கு 2010, ஆக., 31ம் தேதிக்குள் வந்து சேருமாறு அனுப்ப வேண்டும்.

முகவரி

MAULANA AZAD EDUCATION FOUNDATION,
(Ministry of Minority Affairs,
Govt. of India)
Social Justice Service Centre,
Chelmsford Road,
New Delhi –110055.
மேலும் விபரங்களுக்கு 011 – 23583788, 23583789 என்ற தொலைபேசி எண்களையும், www.maef.nic.in என்ற இணையதளத்தையும் பார்க்கவும்.

குழந்தைகளுக்கு தடுப்பூசி போட SMS



குழந்தைகளுக்கு தடுப்புசி போடுவத்றகு SMS மூலம் நினைவூட்டும் திட்டம் கடந்த ஜனவரி மாதம் முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. ஆனால் அது குறித்த போதிய விழிப்புணர்வு நம்மிடையே இல்லை. செல்போன் மூலம் பதிவு செய்தால் போதும், தடுப்பூசி போடுவதற்கு 3 நாட்களுக்கு முன்பே எஸ்.எம்.எஸ் மூலம் நினைவூட்டப்படும். இதற்கு national vaccine reminder என்று பெயர்.

எப்படி பதிவு செய்வது?

உங்களுடைய செல்போனின் மெசேஜ் பாக்ஸில் Immunize என்று டைப் செய்து ஓர் இடைவெளி விட்டு உங்கள் குழந்தையின் பெயரை டைப் பெய்து விட்டு, ஒரு ஸ்பேஸ் விட வேண்டும். பின்னர் உங்கள் குழந்தையின் பிறந்த தேதியை டைப் செய்து 566778 என்ற எண்ணிற்கு எஸ்.எம்.எஸ். அனுப்ப வேண்டும். உதாரணத்திற்கு, Immunize Harish 10-09-2015 என்று டைப் செய்து அனுப்பினால், உடனே குழந்தையின் பெயர் பதிவு செய்யப்பட்டுவிட்டது என்று முதல்கட்ட தகவல் வரும். அடுத்து, உங்கள் குழந்தைக்கு எந்தத் தடுப்பூசி, எந்தத் தேதியில் போட வேண்டும் என்ற தகவல் எஸ்.எம்.எஸ். மூலம் உங்கள் செல்போனுக்கு வந்து சேரும். ஒவ்வொரு முறையும் இரண்டு நாட்கள் இடைவெளியில் மூன்று முறை தடுப்பூசி போடுவது குறித்து நினைவூட்டப்படும்.

தடுப்பூசி போடுவதற்கான அட்டவணை
வயது
தடுப்பூசியின் பெயர்
குழந்தை பிறந்தவுடன்
பிசிஜி போலியோ சொட்டு மருந்து ஹெப் - B
6 வாரங்கள்
DPT 1 போலியோ சொட்டு மருந்து – ஹெப் B 2வது
10 வாரங்கள்
DPT 2 போலியோ சொட்டு மருந்து
14 வாரங்கள்
DPT 3 போலியோ சொட்டு மருந்து
6 – 9 மாதங்கள்
போலியோ சொட்டு மருந்து ஹெப் – B 3வது
9 மாதங்கள்
மீஸல்ஸ் தடுப்பூசி (அம்மை)
15 – 18 மாதங்கள்
MMR (Measles, Mumps, Rubella) 1வது பூஸ்டர் போலியோ சொட்டு மருந்து
5 வயது
DPT 2வது பூஸ்டர் போலியோ சொட்டு மருந்து
10 வயது
TT (டெட்டனஸ்) 3வது பூஸ்டர் ஹெப் - B - பூஸ்டர்
15 – 16 வயது
TT (டெட்டனஸ்) 4வது பூஸ்டர்
ஆதாரம்: ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை

HEART ATTACK AND FIRST AIDS


ஹார்ட் அட்டாக்கும் முதல் உதவிகளும்.
டாக்டர் A. ஷேக் அலாவுதீன் MD., (Chin.Med), A.T.C.M (CHINA)
Zhejiang University, Hangzhou, (China)
(Chinese Traditional Medicine).


ஹார்ட் அட்டாக் இந்த வார்த்தையே பயத்தை உண்டாக்கும், இதனால் ஏற்படும் பதட்டமோ பிரச்சனையை அதிகமாக்கும். நிதானமாக இக்கட்டுரையில் இருப்பது போல் செயல்பட்டால் ஹார்ட் அட்டாக்கிலிருந்து மிகவும் எளிதாக விடுபடலாம். (இன்ஷா அல்லாஹ்).
இதயம் இதன் அழகிய துடிப்புகளின் ஏற்ற இறக்கமே நோய்களின் விளக்கம். துடிப்புகளின் மவுனம் அதுதான் மரணம். இறைவன் நம்உடல் இயக்கத்திற்காக அளித்த ஓர் அற்புத தொழிற்சாலை. இதயம் அது தானாக இயங்குவதில்லை உடல் உறுப்புகள் பாதிப்பு அடையும் போது அவை தன் நிலையை மூளைக்கு தெரிவிக்க மூளை இதயத்திற்கு உத்திரவிடுகின்றது. இதயம் இரத்த ஓட்டம் மூலம் பாதிக்கப்பட்ட உறுப்புக்கு சக்திஅளித்து அதன் சக்தியை சமநிலைப்படுத்தி உறுப்பை சீராக இயங்க வைக்கின்றது. பாதிப்படைந்த உறுப்பு அனுப்பும் தகவல் இதயத்திற்கு கிடைக்காமல் போனாலோ, இதயத்திற்கு தகவல் கிடைத்து இரத்தத்தை (சக்தியை) அனுப்பும்போது தடங்கல் ஏற்பட்டாலோ (இரத்த குழாய் அடைப்பு போன்ற காரணங்களால்) பல உறுப்புகள் பாதிப்படைந்த நிலையில் குறிப்பிட்ட ஒரு உறுப்புக்க போதுமான இரத்தத்தை அனுப்ப முடியாமல் போனாலே ஹார்ட் அட்டாக் ஏற்படுகிறது.
ஆனால் நவீன மருத்துவத்தில் இதயம் தானாகவே இயங்குவதாக நினைத்து அதன் வேகத்தைக் குறைக்க மருந்து, மாத்திரைகள் கொடுத்து நன்றாக இருக்கும் இதயத்தை அநியாயமாக கெடுத்துவிடுகின்றனர்.
நுரையீரல், பெருங்குடல், வயிறு, மண்ணீரல், இதயம், சிறுகுடல், சிறுநீரகம் (கிட்னி), சிறுநீர் பை, பித்தப்பை மற்றும் கல்லீரல் போன்றவைகள் மிக மிக முக்கியமான உடல் உறுப்புகள். மற்றவை அனைத்தும் இந்த உறுப்புகளை சார்ந்தவையே. இந்த உறுப்புகள் எவ்வாறு இதயத்தோடு சம்பந்தப்படுகிறது என்பதையும் எந்தெந்த உறுப்பு பாதிப்படைந்தால் எந்தெந்த நேரத்தில் ஹார்ட் அட்டாக் வரும், எந்த சூழ்நிலைகள் மற்றும் சந்தற்பங்களில் வரும் இதற்கான முதல் உதவி முறைகள் என்ன? எப்படி செய்வது என்பதை இன்ஷா அல்லாஹ் இத்தொடரில் நாம் தெரிந்துகொள்வோம்.
http://naturecuredr.com/articles/images/heartAttack.jpg
http://naturecuredr.com/articles/images/heartAttack1.gif

கல்லீரல் (Liver) பித்தப்பை (Gall Bladder) சம்பந்தப்பட்ட ஹார்ட் அட்டாக்:
ஆரம்ப கால அறிகுறிகள்:
பித்தப்பை :
அதிகமாகக் கோபம் வரும், ஒரு பக்கத்தலைவலி, கண்களில் எரிச்சல், பித்தப்பையில் கல், வாய்ப்புண், வாந்தி, வாய் நாற்றம், காதுவலி, அடிக்கடி ஏற்படும் ஜுரம், தொடையில் வெளிப்பக்கத்தில் ஆரம்பித்து கால் சுண்டு விரல் வரை வரும் வலி அதனால் நடக்க இயலாமை, வாயில் கசப்புச் சுவை, கிறுகிறுப்பு, காது அடைத்தல், மசலா அதிகம் சாப்பிடுபவர்களுக்கு பித்தப்பை பாதிப்பு அதிகம் ஏற்பட வாய்புண்டு, உடம்பில் ஏற்படும் எரிச்சலோடு கூடிய வலி, துணி உடம்பில் பட்டால் கூட எரிச்சல் உண்டாகும். கால் கைகளை படுக்கைக்கு வெளியே நீட்டி விட்டுக் கொண்டு தூங்குவார்கள்.
கல்லீரல் :
கண் நோய்கள், பசியின்மை, தலைவலி, கோபம், மஞ்சள் காமாலை, வயிற்றுவலி, மலச்சிக்கல், குழந்தைகளின் வளர்ச்சி பாதித்தல், வாந்தி, மன அழுத்தம், முதுகுவலி, சிறுநீர் பிரியாமை, ஹெரனியா, அடிவயிற்று வலி, இரவு 1 மணிக்கு தூக்கத்திலிருந்து விழித்துக் கொண்டு பிறகு 3 மணிக்கு மீண்டும் தூங்க ஆரம்பித்தல், தூக்கத்தில் ஏற்படும் அரிப்பு, அலர்ஜி.
வரும் நேரம்
: இரவு 11 மணியிலிருந்து 3 வரை.
மற்ற சூழ்நிலைகள்
: குடிகாரர்களுக்கும், விடிய விடிய கண்விழிப்பவர்களுக்கும், ஓய்வில்லாமல் செயல்படுபவர்களுக்கும், மேற்குறிப்பிட்ட நேரம் இல்லாமல் மற்ற நேரத்திலும் வரும்.
அவசர சிகிச்சை அளிக்க வேண்டிய இடம்
: கை சுண்டு விரல் (small finger) நகத்தின் மேற்புறத்தில் உள் பக்க ஓரத்தில் ஆட்காட்டி விரலால் அழுத்தி லேசாக மசாஜ் செய்ய வேண்டும்

இதயம் (Heart) சிறுகுடல் (Small Intestine) இதய மேல்உறை (Pericardium) உடல் வெப்பம் (மூவெப்ப மண்டலம் -Triple Warmer) சம்பந்தப்பட்ட ஹார்ட் அட்டாக்
ஆரம்ப கால அறிகுறிகள்:
இதயம்:
நெஞ்சுவலி, இதயத்திற்கு மேல் பகுதி தோள்பட்டை பகுதியில் ஏற்படும் வலி, போலியோ, அதிகமாக தாகம் எடுத்தல், சிறுநீர் மஞ்சள் நிறம், கை சுண்டு விரலில் உள்பக்க சைடில் ஆரம்பித்து அக்குள் வரை செல்லும் வலி, மஞ்சள் காமாலை, உள்ளங் கையில் சூடு அதிகமாகுதல், மனதில் பயம், நாக்கின் மேல் பகுதி சிகப்பு நிறமாகுதல், ஞாபக சக்தி குறைவு, மார்பு பகுதியில் தோன்றும் புண், மூச்சுவிட சிரமம், திடீர் வியர்வை, தூக்கமின்மை படபடப்பு, மணிக்கட்டு வலி, விரைவாகக் களைப்புத் தோன்றுதல், தூக்கத்தில் தொடர் கனவுகள், தூங்க ஆரம்பித்தவுடன் கனவும் ஆரம்பித்து விடும், நெருப்பு சம்பந்தப்பட்ட கனவுகள் தான் அதிகம் வரும்.
இதயமேல் உறை:
இதயத்தில் மேல்உறை பாதிப்புக்கு உள்ளாகும் போது நெஞ்சுவலி, படபடப்பு, மார்பு நெஞ்சுப் பகுதி அடைத்தது போலிருத்தல், மன அமைதியின்மை, முழங்கையில் ஏற்படும் வலி, உள்ளங்கையில் சூடு பரவுதல், கைகளில் ஏற்படும் தசைவலி, கடுமையான நெஞ்சுவலி, (இதயத் தசைகளில் இரத்தக் கசிவினால் ஏற்படும் நெஞ்சுவலி வலது முழங்கை வரை கடுமையாக இருக்கும்.) தலைவலி, தூங்கும் போது நெஞ்சு பாரமாக இருப்பது போல் உணர்வு, யாரோ அமுக்குவது போன்று உணர்வு இதனால் தூக்கத்தில் எழுந்து விடுதல்.
உடல் வெப்பம் (மூவெப்ப மண்டலம்):
உடம்பில் சில பகுதிகள் சூடாகவும் சில பகுதிகள் குளிர்ச்சியாகவும் இருப்பதற்கு இது தான் காரணம். உடம்பு முழுவதும் வெப்பத்தை சீர்படுத்தும். இது பாதிப்படைந்தால், காது மந்தம், காது செவிடு, காது இரைச்சல், கண்ணத்தில் வீக்கம், காதுகளில் வலி, முழங்கை வலி, தொண்டை வறட்சி, உள்ளங்கை உள்ளங்கால் அதிக வியர்வை அல்லது அதிக சூடு அல்லது அதிக குளிர்ச்சி ஏற்படுதல், தலை மிகவும் சூடாக இருப்பது. ஆடை மூடிய பகுதிகள் சூடாக இருப்பது, வயிறு உப்புதல், காற்று அடைத்தது போல் தசைகளில் வீக்கம், (விரல் கொண்டு அழுத்தினால் பள்ளம் ஏற்படும்), சிறுநீரை அடக்க முடியாமை, தூக்கத்தில் சிறுநீர் கழித்தல், நீர் கடுப்பு, வெளிச்சத்தில் தூங்க இவர்களுக்கு மிகவும் பிடிக்கும், சிறு வெளிச்சம் இவர்களுக்குத் தேவை.
சிறுகுடல்:
அடிவயிற்று வலி, காது பிரச்னைகள், கன்னம் வீக்கம், தொண்டைப் புண், மலச்சிக்கல், மலத்துடன் இரத்தம், கழுத்தில் சுளுக்கு, வயிறு உப்புசம், வாய்வுத் தொந்தரவு, அடிக்கடி ஏப்பம், வயிறு மந்தம், நெஞ்செரிச்சல், வாயில் புண்கள், வயிறு பெறுத்தல், சிறு குடலில் ஏற்படும் அஜீரணமே கெட்ட வாய்வுக்கு மூலகாரணம். மதியம் சாப்பிட்டவுடன் தூங்க நினைப்பவர்கள், சிறிது நேரமாவது மதியம் சாப்பிட்டவுடன் தூங்கியே ஆக வேண்டும் என்று நினைப்பவர்கள் அனைவரும் சிறுகுடல் பாதிக்கப்பட்டவர்களே. அக்குள், அக்குள் மடிப்புகளிலும் மார்புப் பக்கவாட்டிலும் இவர்களுக்கு சதை விழும்.
வரும் நேரம்
:காலை 11 மணியிலிருந்து மதியம் 1 மணி வரை
மற்ற சூழ்நிலைகள்
: இதயம், இதயமேல் உறை, சிறுகுடல், உடல் வெப்பம் இவையெல்லாம் வெப்பம் எனும் அடிப்படையை சார்ந்தவை இவைகளில் எவை பாதிக்கப்பட்டாலும் கீழ் குறிப்பிட்ட இடத்தில் சிகிச்சை அளித்தாலே போதும் இன்ஷா அல்லாஹ். சிறுகுடல் பாதிப்பால் வரும் ஹார்ட் அட்டாக் மதியம் 1 மணியிலிருந்து 3 மணிக்குள் வரும். இதயத்தால் பாதிப்பு ஏற்பட்டால் காலை 11 முதல் மதியம் 1 மணிக்குள் வரும். இதய மேல் உறையால் பாதிப்பு ஏற்பட்டால் இரவு 7 முதல் 9 மணிக்குள் வரும், உடல் வெப்பத்தால் (Triple Warmer) பாதிப்பு ஏற்பட்டால் இரவு 9 மணியிலிருந்து இரவு 11 மணிக்குள் வரும். இவற்றை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
அவசர சிகிச்சை அளிக்க வேண்டிய இடம்
: சுண்டு விரலையும் மோதிர விரலையும் உள்ளங்கை பக்கம் மடக்குங்கள் உள்ளங்கையில் விரல்களுக்கு அருகிலிருக்கும் ரேகைக்கு ம் நடுரேகைக்கும் இரண்டு விரல்களுக்கும் இரண்டு ரேகைக்கும் இடைப்பட்ட இடத்தில் இருக்கும் சிறிய இடத்தில் அழுத்தம் கொடுத்து ஆட்காட்டி விரலால் கசக்கி விடுங்கள்.
வயிறு (Stomach) மண்ணீரல் (Spleen) சம்பந்தப்பட்ட ஹார்ட் அட்டாக்:
ஆரம்ப கால அறிகுறிகள்:
வயிறு:
அல்சர், வாய்வுத் தொல்லை, நாக்கு மஞ்சளாக மாறும், பற்களில் இரத்தக் கசிவு, கால் வலி, வாந்தி, முகவாதம், தொண்டை வறட்சி, இரத்தக் கசிவு நோய், கண் கீழ் இமை துடிப்பு, முகத்தில் தோன்றும் நரம்புவலி, வயிற்றுப் பொறுமல், பசியின்மை, கெட்ட கனவுகள், உணவிருந்தும் சாப்பிட முடியாமல் போவது போலவும் கனவுகள் உண்டாகும்.
மண்ணீரல்:
உடம்பில் அதிக எடை கூடுதல், அடிவயிற்று வலி, நாக்கில் ஏற்படும் விறைப்பு, மற்றும் வலி, வாய்வுகளால் ஏற்படும் வலி, மஞ்சள் காமாலை, வாந்தி, உடல் பலவீனம், உடல் பாரமாகத் தெரிதல், கால் பகுதிகளில் ஏற்படும் வீக்கம், வலி, காலை 10 மணிக்கு தூக்கம் வந்து அசத்தும், சாப்பிட்டவுடன் தூங்கச் சொல்லும் சோம்பேறித்தனத்தைக் கொடுக்கும், தூக்கத்தில் இருமல் வந்து தூக்கத்தைக் கெடுக்கும், இடுப்பில் பக்க வாட்டில் மடிப்புகளுடன் சதை உண்டாகும்.
வரும் நேரம்
: காலை 7 மணியிலிருந்து 11 மணி வரை
மற்ற சூழ்நிலைகள்
: சாப்பிடும் போது, அளவுக்கதிகமான மனவேதனையின் போது
அவசர சிகிச்சை அளிக்க வேண்டிய இடம்
: கை மணிகட்டு ரேகை சுண்டு விரல் பக்கம் முடியும் இடத்தின் அருகே ஆட்காட்டி விரலால் அழுத்தி மசாஜ் செய்ய வேண்டும். (உள் எலும்பின் பக்கம்).
நுரையீரல் (Lungs) பெருங்குடல் (Large Intestine) சம்பந்தப்பட்ட ஹார்ட் அட்டாக்:
ஆரம்ப கால அறிகுறிகள்:
நுரையீரல் :
மூச்சுத் திணறல், இருமல், சளி, ஆஸ்துமா, கைகளில் கட்டை விரல் ஆரம்பித்து மார்பு மேல் முடியும் வலி, Frozen Shoulder என்னும் கைகளை அசைக்க முடியாத நிலை (பெண்களுக்கு அதிகம் வரும்), உடம்பில் உள்ள முடி கொட்டுதல் (தாடி, மீசை, புருவம் உள் உறுப்புக்கள்) மார்பகம் அடைத்தது போல் பாரமாக இருப்பது, தொண்டை காய்ந்து போதல், பேச முடியாத நிலை, டான்சில் கோளாறுகள், தோள்பட்டை வலிகள், தோல் வியாதிகள், அலர்ஜி, அக்குள், கழுத்து, தொடை பகுதிகளில் வியர்வை, 3 மணிக்கு விழிப்பு வந்து விடும், தூக்கத்தில் நெஞ்சை அடைப்பது போன்று மூச்சு முட்டுவது போல் இருக்கும், உட்கார்ந்து சாய்ந்தபடி தூங்குவார்கள், கைகளை அகற்றி வைத்து குப்புறப்படுத்துக் கொண்டு தூங்குதல்.
பெருங்குடல்:
அடிவயிற்றுவலி, மலச்சிக்கல், வயிற்றுப் பொறுமல், பல்வலி, வயிற்றுப் போக்கு, உதடு வறட்சி, நாக்கு வறட்சி, மூச்சுவிடச் சிரமம், தொப்புளைச் சுற்றிலும் வலி, தோல் வியாதிகள், இருமல், மூக்கு வழியாக இரத்தம் கசிதல், முகவாதம், தோள்பட்டை வலி, இடுப்புவலி, சைனஸ், நெஞ்சு எரிச்சல், புட்டமும் இடுப்பும் சேருமிடத்தில் சதை ஏற்படும்.
வரும் நேரம்
: காலை 3 மணியிலிருந்து 7 மணி வரை
மற்ற சூழ்நிலைகள்
: வேகமாக சிரிக்கும் போதும் மற்றும் ஓடும் போது
அவசர சிகிச்சை அளிக்க வேண்டிய இடம்
: கை மணிகட்டு ரேகை ஓரத்திலிருந்து (சுண்டு விரல் பக்கத்திலிருந்து கீழ் நோக்கி மணிகட்டு பக்கம்) கீழ்நோக்கி 1½ இன்ஞ்சில் (பாதிக்கப்பட்டவரின் விரலில் அளவு எடுக்கவேண்டும்) ஆட்காட்டி விரலால் அழுத்தி லேசாக மசாஜ் செய்ய வேண்டும்.
சிறுநீரகம் (Kidney) சிறுநீர் பை (Urinary Bladder) சம்பந்தப்பட்ட ஹார்ட் அட்டாக்:
ஆரம்ப கால அறிகுறிகள்:
சிறுநீரகம்:
பயம், சிறுநீரகக் கல், மூட்டு வலி, கால்களில் வீக்கம், முகத்தில் வீக்கம், முகம் கருப்பாக மாறுதல், பிறப்பு உறுப்பில் வலி, பல் வலி, கால் பாதங்கள் சூடாக இருப்பது, முதுகு வலி, நாக்கு உலர்ந்து விடுதல், தொண்டைப் புண், வீக்கம், மலச்சிக்கல், மூச்சுத் திணறல், தசைகள் சுருங்குதல், சிறுநீரகங்களில் ஏற்படும் வலி, தலைமுடி கொட்டுதல், மாதவிடாய்ப் பிரச்னைகள், ஆண்மைக் குறைவு, மனநோய், இரவில் வியர்த்தல், விதைகளில் ஏற்படும் வலி மற்றும் வீக்கம், கர்ப்பப்பை இறங்குதல், டான்சில், மார்பக அழற்சி, கழுத்தில் முன்புறம் சதை போடுதல், மாலை நேரத்தில் 5 மணிக்கு மேல் உடல் சோர்ந்து விடுதல், உடல் மிகவும் பலவீனமாய் மாறுதல், கைகள் நடுக்கம், இவர்கள் குப்புறப்படுத்துத் தான் தூங்குவார்கள். அப்போது தான் இவர்களுக்கு தூக்கம் வரும்.
சிறுநீர் பை:
சிறுநீர் பிரியாமை, சிறுநீர் அடக்க முடியாமை, இரு கண்களுக்கு நேர்மேல் பக்கமாக ஏற்பட்டு பின்னால் போகும் தலைவலிகள், கண் நோய்கள், இடுப்புவலி, முதுகுவலி, கழுத்துவலி, சிறுநீர்ப் பையில் கல், முழங்கை வலி, குதிகால் வலி, உடம்பு அசதி, பய உணர்ச்சி, இரண்டு புட்டங்களிலும் அதிகமான சதை போடுதல், தொடைகளின் பின்புறம் அதிக சதை போடுதல், அடிக்கடி மலம் கழித்தல், தூக்கத்தில் மாறி மாறி புரண்டு கொண்டிருத்தல், இவர்களின் கழுத்துக்குப் பின்புறம்சதை போடும்
வரும் நேரம்
: காலை 3 மணியிலிருந்து 7 மணி வரை
மற்ற சூழ்நிலைகள்
: உணவை மென்று சுவைத்து சாப்பிடாமல் மிக வேகமாக அப்படியே விழுங்குபவர்கள். மருந்து மாத்திரைகள் அதிகம் சாப்பிடுபவர்கள்.
அவசர சிகிச்சை அளிக்க வேண்டிய இடம்
: கையை செங்குத்தாக (90 டிகிரி) மடக்கும் போது முழங்கைக்கு மேலே சுண்டு விரலிருந்து நேர் கீழே முழங்கைக்கு மேற்புறத்திலிருந்து வரும் கோடு முடியும் இடம்.

ஹார்ட் அட்டாக் தடுப்பது எப்படி?

இதய நோய்கள்

ரத்தக்குழாய் அடைப்பு
நெஞ்சுவலி
பரிசோதனைகள் / சிகிச்சைகள்
மாரடைப்புக்குக் காரணங்கள்
ரத்த அழுத்தம் சரியாக இருக்கட்டும்!
உடற்பயிற்சி செய்யுங்கள்!
உறக்கம் முக்கியம்!
மன அமைதி தேவை!

இதயம்... நம் உயிர் காக்கும் உறுப்பு. சராசரியாக 300 கிராம் எடையுள்ள இதயம் நாளொன்றுக்கு லட்சம் முறைக்கு மேல் துடிக்கிறது. ஒரு வருடத்தில் 31 லட்சத்து 59 ஆயிரம் லிட்டர் ரத்தத்தை உடலுக்குள் பம்ப் செய்கிறது. நாம் உறங்கினாலும், விழித்திருந்தாலும், சும்மா இருந்தாலும், சுறுசுறுப்பாக வேலை செய்தாலும் இடைவிடாது துடிப்பது இதயம் மட்டுமே.

இதய நோய்கள்

இதய நோய்களைப் பிறவியிலேயே ஏற்படும் நோய்கள், பிற்காலத்தில் ஏற்படும் நோய்கள் என்று இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். பிறவியில் வருகின்ற இதய நோய்கள் குழந்தைகளைப் பாதிக்கின்றன.
இவை பெரும்பாலும் இதயவால்வு கோளாறுகள் மற்றும் இதயத்தின் இடைச்சுவர்க் கோளாறுகளால் வருபவை. இவற்றுக்கு அறுவை சிகிச்சைதான் தீர்வு தரும். பிற்காலத்தில் வருகின்ற இதயத் துடிப்பு நோய், கரோனரி ரத்தக்குழாய் நோய் மற்றும் இதயச் செயலிழப்பு உள்ளிட்ட இதயத்தசை நோய்கள் பெரியவர்களைப் பாதிக்கின்றன. இதயத்துடிப்புக் கோளாறுக்கு மாத்திரை மற்றும் பேஸ்மேக்கர் கருவி உதவும். இதயச் செயலிழப்புக்கு மருத்துவ சிகிச்சை பலன் தரும்.

ரத்தக்குழாய் அடைப்பு

உடல் முழுவதும் ரத்தத்தைப் பாய்ச்சும் அதிமுக்கிய வேலையைச் செய்வது இதயம். அந்த இதயம் இயங்கவும் ரத்தம் தேவை! அந்த ரத்தத்தை வழங்குவது கரோனரி ரத்தக்குழாய்கள். இவற்றில் கொழுப்பு அடைத்துக்கொள்வதாலோ, ரத்தம் உறைந்து போவதாலோ அடைப்பு ஏற்படலாம்.
இதனால், ரத்த ஓட்டம் குறைந்து இதயத் தசைகளுக்குத் தேவையான ஆக்ஸிஜன் மற்றும் உணவுச்சத்துகள் கிடைப்பது தடைபடும். அப்போது இதயம் துடிப்பதற்குச் சிரமப்படும். இதுதான் மாரடைப்பு.

நெஞ்சுவலி

மாரடைப்பில் மூன்று வகை உண்டு. இதயத் தசைகளுக்கு ரத்தம் கிடைப்பது குறையத் தொடங்கிவிட்டாலே இதயம் நமக்கு அதைக் காட்டிக்கொடுத்துவிடும். உதாரணமாக, மாடிப் படிகளில் ஏறும்போதும், வேகமாக நடக்கும்போதும் இதயத்தின் வேலைப்பளு அதிகரிக்கும். அப்போது இதயத்துக்கு ரத்தமும் ஆக்ஸிஜனும் தேவையான அளவுக்குக் கிடைப்பதில்லை.
எனவே, இதயம் துடிக்கச் சிரமப்படும். இதன் விளைவால், நடு நெஞ்சில் பாரம் வைத்து அழுத்துவதுபோல் வலிக்கும். நடப்பதை நிறுத்திவிட்டு ஓய்வெடுத்துக்கொண்டால், நெஞ்சுவலி குறைந்துவிடும். இந்த ‘அலார’ அறிகுறியைக் கவனித்து சிகிச்சை பெற்றுக் கொண்டால், மீண்டும் நெஞ்சுவலி வராது. இதற்கு ‘ஆஞ்சைனா பெக்டோரிஸ்’ (Angina pectoris) என்று பெயர்.
எது மாரடைப்பு?
சிலருக்கு திடீரென்று நெஞ்சு முழுவதும் கயிறு கட்டி அழுத்துவதுபோல் கடுமையாக வலிக்கும். இந்த வலி கழுத்து, தாடை, இடது தோள், இடது கைவிரல்களுக்குப் பரவும். உடல் அதிகமாக வியர்த்து ‘ஜில்’லென்று ஆகிவிடும். ஓய்வெடுத்தாலும் நெஞ்சுவலி குறையாது. நேரம் ஆக ஆக வலி கூடிக்கொண்டே போகும்.
மயக்கம் வரும். மரணத்தின் அறிகுறிகள் எட்டிப் பார்க்கும். இதுதான் உண்மையான மாரடைப்பு. அதாவது, ‘மயோகார்டியல் இன்ஃபார்க்ஷன் ‘(Myocardial infarction). இந்த மாதிரி பாதிக்கப்பட்டவரை எவ்வளவு சீக்கிரம் சிகிச்சைக்குக் கொண்டு செல்கிறோமோ அந்த அளவுக்கு மரணத்தின் பிடியிலிருந்து காப்பாற்றிவிடலாம்.

பரிசோதனைகள் / சிகிச்சைகள்

இ.சி.ஜி., மார்பு எக்ஸ்ரே, எக்கோ கார்டியோகிராபி, சி.டி.ஸ்கேன், சிறப்பு ரத்தப் பரிசோதனைகள், ட்ரெட்மில், ஆஞ்சியோகிராம் போன்ற பல பரிசோதனைகள் மாரடைப்பை உறுதி செய்ய உதவும்.
இதைத் தொடர்ந்து கரோனரி ரத்தக்குழாயை அடைத்துக் கொண்டிருக்கும் ரத்த உறைவுக்கட்டியைக் கரைக்க ஸ்ட்ரெப்டோகைனேஸ் (Streptokinase), டினெக்டெபிளேஸ் (Tenecteplase) போன்ற மருந்துகளைக் கொடுப்பது வழக்கம். அல்லது அடைத்துக் கொண்ட கரோனரி ரத்தக் குழாய்களில் ‘பலூன் ஸ்டென்ட்’ வைத்து அல்லது ‘பைபாஸ்’ அறுவைச் சிகிச்சை செய்து, இதயத் தசைகளுக்கு தங்கு தடையின்றி ரத்தம் செல்ல வழி செய்யப்படு கிறது. இதனால் மரணம் தவிர்க்கப்படுகிறது.
உடனடி மாரடைப்பு
‘நெஞ்சைப் பிடிச்சுட்டு வலிக்குதுன்னு சொன்னார். அடுத்த நிமிஷமே மயங்கி விழுந்துட்டார். பேச்சும் மூச்சும் நின்னு போச்சு!’ மாரடைப்பால் மரணமடைந்தவர்களின் வீடுகளில் இப்படிச் சொல்லக் கேள்விப்பட்டிருப்பீர்கள். ‘கார்டியோஜெனிக் ஷாக்’ (Cardiogenic shock) எனும் உடனடி மாரடைப்பு இது. சிகிச்சை பெறுவதற்கு நேரம் தராது.
நெஞ்சுவலி வந்ததுமே இறப்பும் வந்துவிடும். அதிர்ஷ்டவசமாக மருத்துவமனையில் இருக்கும்போது ஒருவருக்கு இது ஏற்படுமானால் உயிர் பிழைக்க வாய்ப்புண்டு. இல்லாவிட்டால், மரணத்திலிருந்து தப்பிப்பது சிரமம். தற்போது மாறிவிட்ட வாழ்க்கை முறைகளால் இப்படியொரு கொடுமையான மாரடைப்பு வருவது இந்தியாவில் அதிகரித்து வருகிறது. அதிலும் ‘டீன்ஏஜி’ல் உள்ளவர்களை இது தாக்குகிறது என்பதுதான் கவலைக்குரிய விஷயம்.

மாரடைப்புக்குக் காரணங்கள்

  • புகைப்பழக்கம்.
  • உயர் ரத்த அழுத்தம்.
  • சர்க்கரை நோய்
  • ரத்தத்தில் கொழுப்பு மிகுதல்
  • உடற்பருமன்
  • மன அழுத்தம்
  • மதுப்பழக்கம்
  • உடற்பயிற்சியின்மை.
  • சோம்பல்தனமான வாழ்க்கைமுறை.
  • பரம்பரை.
இதயம் காக்க எளிய வழிகள் நம் வாழ்க்கை முறையில் சில மாற்றங்களைச் செய்து கொண்டால் போதும். மாரடைப்பு வாய்ப்பை 95 சதவீதம் குறைத்துவிடலாம். அதற்குத்தான் இந்த யோசனைகள்.

ரத்த அழுத்தம் சரியாக இருக்கட்டும்!

மாரடைப்பு ஏற்படுவதற்கு உயர் ரத்த அழுத்தம் ஒரு முக்கியக் காரணம். சாதாரணமானவர்கள் ஆண்டுக்கு ஒருமுறையாவது ரத்த அழுத்தத்தைப் பரிசோதித்துக்கொள்வது நல்லது. ரத்த அழுத்தம், 120/80 என்பதுதான் நார்மல். இது 140/90 என்ற அளவைத் தாண்டக்கூடாது. அதேநேரம் 90/60 என்ற அளவுக்குக் கீழேயும் இறங்கி விடக்கூடாது.
ரத்த அழுத்தம் அதிகமாக உள்ளவர்கள் உணவில் உப்பைக் குறைப்பது, புகைப்பழக்கத்தைக்கைவிடுவது, ஊறுகாய், கருவாடு, உப்புக்கண்டம், அப்பளம், வடாம், சிப்ஸ் போன்ற உப்பு நிறைந்த உணவுகளைக் குறைத்துக்கொள்வது என்று வாழ்க்கைமுறைகளைச் சரி செய்துகொண்டால் ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும். இவர்கள் மாதம் ஒருமுறை ரத்த அழுத்தத்தைப் பரிசோதித்துக்கொள்ள வேண்டியது முக்கியம்.
சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்துங்கள்!
ரத்தத்தில் சர்க்கரை அளவு வெறும் வயிற்றில் 80-100 மி.கி. / டெ.லி. சாப்பிட்டு 2 மணி நேரம் கழித்து 120-140 மி.கி. /டெ.லி. என்று இருக்க வேண்டும். இந்த அளவுகள் மிகுந்தால், சர்க்கரை நோய் கட்டுப்பாட்டில் இல்லை என்று பொருள். மற்றவர்களைவிட சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு மாரடைப்பு வருவதற்கான வாய்ப்பு 2 மடங்கு அதிகரிக்கிறது. ஆகவே, சரியான உணவுப்பழக்கத்தைப் பின்பற்றியும், தேவையான மாத்திரை, இன்சுலின் போன்ற சிகிச்சைகளை எடுத்துக்கொண்டும் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த வேண்டியது முக்கியம். கொழுப்பு கவனம்!
மாரடைப்புக்கு வாய்ப்புள்ளவர்கள் வருடத்துக்கு ஒருமுறை ரத்தக் கொழுப்பு அளவுகளைப் பரிசோதித்துக் கொள்ள வேண்டும். ஒருவருக்கு மொத்தக் கொழுப்பு (Total cholesterol ) 200 மி.கி. / டெ.லி.க்குக் குறைவாகவும், டிரைகிளிசரைட் கொழுப்பு 150 மி.கி. / டெ.லி.க்குக் குறைவாகவும், எல்.டி.எல். எனும் கெட்ட கொழுப்பு 100 மி.கி. / டெ.லி.க்குக் குறைவாகவும், ஹெச்.டி.எல். எனும் நல்ல கொழுப்பு 40 மி.கி./ டெ.லி.க்கு அதிகமாகவும் இருக்க வேண்டும்.
ஆரோக்கியமான உணவு பழக்கம் :
அரிசி, கோதுமை, கம்பு, கேழ்வரகு மற்றும் முழுத் தானியங்கள், நார்ச்சத்து மிகுந்த பயறு வகைகள், ஓட்ஸ், துவரை, பட்டாணி, அவித்த கொண்டைக்கடலை, வெண்ணெய் நீக்கப்பட்ட பால், மோர், கீரைகள், பச்சைக் காய்கறிகள், பழங்கள். தக்காளி, அவரை, வெண்டைக்காய், வெள்ளைப்பூண்டு, முருங்கை, புடலங்காய், கொத்தவரங்காய், கத்தரிக்காய், வாழைத்தண்டு, வாழைப்பூ, பூசணிக்காய், முட்டைக்கோஸ், காளிஃபிளவர், புரோக்கோலி ஆகியவை இதயம் காக்கின்ற உணவுகள். அசைவம் சாப்பிடுபவர்கள் தோல் நீக்கப்பட்ட கோழி இறைச்சியைச் சாப்பிடலாம். ஒமேகா 3 கொழுப்பு அமிலம் இதயத்துக்குப் பாதுகாப்பு தரும் ஒரு சத்துப்பொருள். இது மீனில் உள்ளது. மீனையும் கோழி இறைச்சியையும் எண்ணெயில் பொரிக்காமல் வேகவைத்து குழம்பாக்கிச் சாப்பிடுவது நல்லது.
பழங்களில் ஆரஞ்சு, திராட்சை, ஆப்பிள், கொய்யா, மாதுளை, அன்னாசி நல்லது. காபிக்குப் பதிலாக க்ரீன் டீ குடிக்கலாம். இந்த உணவுகளில் கொழுப்பு குறைவு. கலோரிகளும் அதிகரிக்காது. ஆகவே, இவற்றை ‘இதயத்துக்கு இதம் தரும் உணவுகள்’ என்கிறோம்.இவற்றுக்கு ‘நோ’ சொல்லுங்கள்!
பாமாயில், தேங்காய் எண்ணெய், வனஸ்பதி (டால்டா), முட்டையின் மஞ்சள் கரு, ஆட்டுக்கறி, மாட்டுக்கறி, பன்றிக்கறி. தயிர், வெண்ணெய், பாலாடை மற்றும் பாலில் தயாரிக்கப்பட்ட உணவுகள், தேங்காய், முந்திரிப் பருப்பு, பாதாம் பருப்பு, அப்பளம், வடை, பஜ்ஜி, போண்டா, பூரி, சிப்ஸ், சீவல், சமோசா, எண்ணெயில் ஊறிய, வறுத்த, பொரித்த உணவுகளை ஓரங்கட்டுங்கள்.
செயற்கை இனிப்புகள், நொறுக்குத் தீனிகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், விரைவு உணவுகள் ஆகியவற்றை ஒதுக்கிவிடுங்கள். எண்ணெயை மீண்டும் மீண்டும் சூடாக்கிப் பயன்படுத்துவதைத் தவிருங்கள். மதுவுக்கும் ‘நோ’ சொல்லுங்கள். 40 வயதுக்குப் பிறகு உப்பு, இனிப்பு, கொழுப்பு இந்த மூன்றையும் குறைத்துக் கொள்வது மிக நல்லது.
நல்ல சமையல் எண்ணெய் எது?
ஒரு சிறந்த சமையல் எண்ணெயில் செறிவுற்ற கொழுப்பு அமிலம்(Saturated fatty acid), ஒற்றைச் செறிவற்ற கொழுப்பு அமிலம் (MUFA), பலவகை செறிவற்ற கொழுப்பு அமிலம் (PUFA) ஆகிய மூன்றும் 1 : 1 : 1 என்ற அளவில்தான் இருக்க வேண்டும்.
ஆனால், இப்போது நாம் பயன்படுத்தும் எண்ணெய்களில் இந்த விகிதத்தில் எந்த எண்ணெயும் இல்லை. இந்த விகிதத்தில் கொழுப்பு அமிலங்கள் கிடைப்பதற்கு பலவித எண்ணெய்களைத் தேர்ந்தெடுத்து, அளவோடு பயன்படுத்தலாம்.
சூரியகாந்தி எண்ணெய், வறுப்பதற்குக் கடலை எண்ணெய், தாளிக்க நல்லெண்ணெய் என்று வாரம் ஒருமுறை சுழற்சி முறையில் பயன்படுத்தினால் கொழுப்பு அமிலங்கள் மிகாது. இதயத்துக்கும் நல்லது.
ஒரே எண்ணெயைப் பயன்படுத்த விரும்பினால் சூரியகாந்தி எண்ணெய், அரிசித் தவிட்டு எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெயைப் பயன்படுத்தலாம். சாதாரணமானவர்களுக்கு நாளொன்றுக்கு 30 மி.லி. எண்ணெய் தேவை. இதய நோயுள்ளவர்களுக்கு இந்த அளவு நாளொன்றுக்கு 15 மி.லி.க்கு மிகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
உடல் எடையைக் கண்காணியுங்கள்!
நமக்கு உடல் எடை சரியாக இருக்கிறது என்று சர்டிஃபிகேட் தருவது ‘பாடி மாஸ் இன்டெக்ஸ்’ (Body Mass Index. சுருக்கமாக BMI.) இது 19 - 24 இருந்தால், உடல் எடை சரி. 25 - 29 இருந்தால் அதிக உடல் எடை; 30 - 35 உடற்பருமனைக் குறிக்கும். 36 - 39 மோசமான உடற்பருமன். இது 40ஐக் கடந்துவிட்டால் ஆபத்தான உடற்பருமன். பெரும்பாலோருக்குச் சரியான உணவுமுறை மற்றும் முறையான உடற்பயிற்சிகள் மூலமே உடல் எடையை சீராக வைத்துக்கொள்ள முடியும்.

உடற்பயிற்சி செய்யுங்கள்!

ஒரு நாளில் உள்ள 24 மணி நேரத்தில் 45 நிமிடங்கள் இதயத்துக்காக ஒதுக்க வேண்டியது நமது கடமை. நடைப்பயிற்சி, மெல்லோட்டம், நீச்சல் பயிற்சி, சைக்கிள் ஓட்டுதல், டென்னிஸ், கைப்பந்து, கூடைப் பந்து, இறகுப் பந்து போன்ற ஏரோபிக் பயிற்சிகள் இதயத்துக்கு நல்ல பாதுகாப்பைத் தரும். இது இயலாதவர்கள், வீட்டிலேயே பயிற்சி செய்வதற்கு உதவுகின்ற ‘ட்ரெட்மில்’ போன்ற கருவிகளைப் பயன்படுத்தலாம். வீட்டு வேலை, தோட்டப் பராமரிப்பு, லிஃப்டை பயன்படுத்தாமல் மாடிப்படிகளில் ஏறி இறங்குவது போன்றவற்றைச் செய்வதும் இதயத்துக்கு இதம் தருகின்ற பயிற்சிகள்தான். இவை எதுவும் முடியாதவர்கள் வாரத்துக்கு 120 நிமிடங்கள் வேகமாக நடப்பது என்பதைக் கடைப்பிடியுங்கள்.
புகை பிடிக்காதீர்கள்!
புகை பிடிப்பது, புகையிலைப் பொருட்களைப் பயன்படுத்துவது போன்றவற்றை உடனடியாக நிறுத்துங்கள். புகையிலையில் உள்ள நிகோடின் நச்சு ரத்தக்குழாய்களைச் சுருக்கி, ரத்த அழுத்தத்தை அதிகரித்து, இதயத்துக்குக் கூடுதலாக சுமை தருகிறது. புகைபிடிப்பவர் வெளியிடும் புகையை அவருக்கு அருகில் உள்ளவர்கள் சுவாசித்தால், அவர்களுக்கும் இந்தக் கெடுதல் ஏற்படும்.

உறக்கம் முக்கியம்!

போதுமான உறக்கமின்மை, மன அழுத்தம், ரத்த அழுத்தம் போன்றவற்றை அதிகரிக்கச் செய்து இதயத்தைப் பாதிக்கிறது. ஆகவே, தினமும் குறைந்தது 6 மணிநேரமாவது நிம்மதியாக உறங்குங்கள்.

மன அமைதி தேவை!

மன அழுத்தம்தான் மாரடைப்புக்கு முக்கியக் காரணமாகிறது. மன அழுத்தம் குறைய மாத்திரை மருந்துகளை மட்டும் நம்புவதைவிட, தியானம் செய்வதும், மூச்சுப் பயிற்சி உள்ளிட்ட யோகப் பயிற்சிகளை முறையாகப் பயின்று பின்பற்றுவதும்தான் மிகவும் நல்லது.தொடர் கவனிப்பு முக்கியம்!வயது மற்றும் உடல்நிலைக்கு ஏற்ப தொடர் மருத்துவப் பரிசோதனைகள் அவசியம். மருத்துவர் பரிந்துரைக்கும் சிகிச்சை முறைகளைத் தொடர வேண்டியதும் முக்கியம். குறிப்பாக உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், ரத்தத்தில் கொழுப்பு, மாரடைப்பு போன்றவற்றுக்கு மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்து களை நீங்களாகவே நிறுத்திக்கொள்வதும் அதிகப்படுத்திக்கொள்வதும் தவறு. உடலிலோ, மருந்திலோ எந்த ஒரு பிரச்னையாக இருந்தாலும் அதைத் தள்ளிப்போடாமல், உடனடியாக மருத்துவரிடம் கலந்தாலோசித்து தேவையான மாற்றங்களை செய்து முறையான சிகிச்சைகளைப் பெற்று வந்தால், இதயம் உங்களுக்கு நீண்ட ஆயுளைத் தரும். ‘கார்டியோஜெனிக் ஷாக்’ எனும் உடனடி மாரடைப்பு, சிகிச்சை பெறுவதற்கு நேரம் தராது. நெஞ்சுவலி வந்ததுமே இறப்பும் வந்துவிடும்.
புகையிலையில் உள்ள நிகோடின் நச்சு ரத்தக்குழாய்களைச் சுருக்கி, ரத்த அழுத்தத்தை அதிகரித்து, இதயத்துக்குக் கூடுதலாக சுமை தருகிறது. புகைபிடிப்பவர் வெளியிடும் புகையை அவருக்கு அருகில் உள்ளவர்கள் சுவாசித்தால், அவர்களுக்கும் இந்தக் கெடுதல் ஏற்படும்.

Monday, August 29, 2016

அனஸ்தீசியா(மயக்க மருந்து) - என்ன செய்ய வேண்டும்?



காயம், அறுவைசிகிச்சை என்றால் வலிநிவாரணிகள், மயக்க மருந்துகள் அளிக்கப்படுகின்றன. மயக்க மருந்து இல்லை என்றால், நம் நிலை என்ன என்று யோசித்துப்பார்த்தாலே பயம் வரும். அந்தக் காலத்தில், நம் பாரம்பரிய மருத்துவங்களில் வலி நிவாரணியாக அபின், கஞ்சா போன்ற போதைவஸ்துக்கள் பயன்படுத்தப்பட்டன. 

டாக்டர் வில்லியம் தாமஸ் கிரீன் மார்ட்டன் முதன்முதலில் ஈதர் என்ற மயக்க மருந்தை நோயாளிக்கு அளித்தார். அதன் மூலம், நோயாளிக்குக் கழுத்தில் இருந்த கட்டி, வலி இன்றி அகற்றப்பட்டது. இன்று, பல் பிடுங்குவதில் இருந்து சிசேரியன் வரை எந்த அறுவைசிகிச்சையாக இருந்தாலும், மயக்க மருந்து இல்லாமல் செய்யப்படுவது இல்லை.

அனைவராலும் மயக்க மருந்தை எளிதில் கொடுத்துவிட முடியாது. சிறிது அதிகமானாலும், உயிரிழப்புகூட ஏற்படும் என்பதால், இதற்கு எனப் பிரத்யேகப் பயிற்சி பெற்ற மருத்துவர்கள் மட்டும்தான் மயக்க மருந்தைக் கொடுக்க முடியும். இதற்கு, அனஸ்தீசியா என்ற பிரத்யேக மருத்துவப் பிரிவே உள்ளது.

அனஸ்தீசியா

நோயாளிக்கு உடல் முழுவதையுமோ அல்லது குறிப்பிட்ட பகுதியையோஉணர்வற்றதாக, வலியற்றதாக மாற்ற, மருந்து அளிப்பதை அனஸ்தீசியா என்கிறோம். மொபைலில் சைலன்ட் மோடு இருப்பது போல, முழு உடல் அல்லது குறிப்பிட்ட பகுதியைத் தற்காலிகமாக ஸ்லீப் மோடுக்கு மாற்றுவதுதான் அனஸ்தீசியா. இதன் மூலம், வலி என்ற விஷயமே நோயாளிக்குத் தெரியாது.

யாருக்கு, என்ன அளவு, என்ன மாதிரியான மயக்க மருந்து என்பதை முடிவுசெய்யும் திறன் பெற்றவரை ‘மயக்க மருந்தியல் நிபுணர்’ என்கிறோம். ஒருவருக்கு ஏற்பட்ட பிரச்னை மற்றும் செய்யப்படும் அறுவைசிகிச்சை ஆகியவற்றைப் பொறுத்து, எந்த வகை மயக்க மருந்தைச் செலுத்துவது என்பதை மருத்துவர் தீர்மானிப்பார். எந்த வகையாக இருந்தாலும், அதைத் தேர்ந்த மருத்துவர் மட்டுமே அளிக்க வேண்டும். பொது மருத்துவர், செவிலியர் என்று யார் வேண்டுமானாலும் மயக்க மருந்தைக் கொடுக்க முடியாது.

 லோக்கல் அனஸ்தீசியா

உடலில் ஒரு சிறு இடத்தை மட்டும் மரத்துப்போகச் செய்வதற்காக லோக்கல் அனஸ்தீசியா பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக, பற்களில் செய்யப்படும் அறுவைசிகிச்சைகளுக்கு லோக்கல் அனஸ்தீசியா அளிக்கப்படும். குறிப்பிட்ட பகுதியைச் சுற்றிலும் தேவைப்படும் அளவுக்கு ஊசி மூலம் மயக்க மருந்து செலுத்தப்படும். இதனால், அந்தப் பகுதி மட்டும் மரத்துப்போகும். ஆனால், அறுவைசிகிச்சை செய்யப்படும்போது, நோயாளி சுயநினைவுடன் இருப்பார்.

ரீஜனல் அனஸ்தீசியா

உடலின் ஏதாவது ஒரு பகுதியில் பாதிப்பு என்றால், அந்தப் பகுதி முழுவதுமே உணர்வு நீக்கம் செய்ய மருந்து அளிப்பதை ‘ரீஜினல் அனஸ்தீசியா’ என்பார்கள். உதாரணமாக, கை மூட்டு அறுவைசிகிச்சை செய்ய வேண்டும் எனில், ஒரு பக்க கை, கால் மரத்துப்போக மயக்க மருந்து தரப்படும். ஊசி மூலமாகவே இந்த வகை மயக்க மருந்துகள் செலுத்தப்படும். ரீஜினல் அனஸ்தீசியாவில் இரண்டு வகை இருக்கின்றன.

அடிவயிறு, இடுப்பு, மலக்குடல், கால் மூட்டு  போன்ற இடுப்புக்குக் கீழே இருக்கும்  இடங்களில் அறுவைசிகிச்சை செய்ய வேண்டியதாக இருந்தால், முதுகுத்தண்டுக்கு கீழே குறிப்பிட்ட இடத்தில் ஒரே ஒரு ஊசி மட்டும் போடுவார்கள். இதனால், இடுப்புக்குக் கீழ் உள்ள பகுதிகள் மட்டும் முற்றிலும் மரத்துப்போகும். இதை, ‘ஸ்பைனல் அனஸ்தீசியா’ என்பார்கள்.

சிசேரியன் முதலான அறுவைசிகிச்சைகளுக்கு ‘எபிடியூரல் அனஸ்தீசியா’ என்ற முறை கையாளப்படுகிறது. சில அறுவைசிகிச்சைகளில், வலி மிக அதிகமாக இருக்கும் என்பதால், அதைக்  கட்டுப்படுத்த இந்த முறை கடைப்பிடிக்கப்படுகிறது. முதுகுத்தண்டுக்குக் கீழே ஊசி மூலம் கதீடர் எனும் குழாய்  இணைக்கப்பட்டு, அதன் வழியே தொடர்ச்சியாக மயக்க மருந்துகள் செலுத்தப்படும். மார்பு மற்றும் வயிற்றுப் பகுதிகளில் செய்யப்படும்  அறுவைசிகிச்சைகளுக்கு இந்த முறையில் மயக்க மருந்துகள் செலுத்தப்படும்.

ஜெனரல் அனஸ்தீசியா 

‘புரொப்பஃபால்’ (Propofol) முதலான மயக்க மருந்துகள் ‘ஜெனரல் அனஸ்தீசியா’ வகையைச் சேர்ந்தவை. ஒரு சில அறுவைசிகிச்சையின்போது நோயாளியைத் தற்காலிகமாக சுயநினைவை இழக்கச்செய்ய  ஜெனெரல் அனஸ்தீசியா முறை நடைமுறையில் உள்ளது. இந்த முறையில் நோயாளி முற்றிலும் சுயநினைவு இன்றி இருப்பார். செயற்கை ஆக்சிஜன் கொடுக்கப்படும். மயக்க மருந்துகள் டிரிப்ஸ் வழியாகச் செலுத்தப்படும். 

இதில் கொடுக்கப்படும் மயக்க மருந்துகளால், தசைகள் செயற்கையாகச் செயல் இழக்க வைக்கப்பட்டு அறுவைசிகிச்சைக்குத் தயாராக்கப்படும். இந்தத் தசைகளை மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டுவர தனி மருந்துகள் தந்து, படிப்படியாக நோயாளியை மீட்டு, இயல்புநிலைக்குக் கொண்டுவருவார்கள். அதுவரை, மயக்கவியல் நிபுணர், செவிலியர்கள் உடன் இருந்து கண்காணிப்பர்.

யாருக்கு, என்ன அளவு தர வேண்டும்?

நோயாளியின் எடையைப் பொறுத்தே மயக்க மருந்தின் அளவு தீர்மானிக்கப்படும். ஒரு கிலோவுக்கு குறிப்பிட்ட அளவில் கொடுக்கப்படுகின்றன. ரிஸ்க் என்பது எல்லாவற்றிலும் உள்ளதுபோல, இதிலும் இருக்கிறது. மது, சிகரெட் போன்ற கெட்ட பழக்கம் இல்லாத, இயல்பான ஆரோக்கியமான நபருக்குப் பாதிப்பு மிகமிகக் குறைவாக இருக்கும். 

பல் அறுவைசிகிச்சைகளில் லிக்னோகைன் எனும் லோக்கல் அனஸ்தீசியா கொடுக்கப்படும். இது, 30 நிமிடங்கள் முதல் இரண்டு மணி நேரம் வரை வாயை மரத்துப்போகச்செய்யும். இது போல, ஒவ்வொரு மயக்க மருந்துக்கும் கால அளவு இருக்கிறது. இதனை, மருத்துவர்கள் அனுமதி இன்றி எந்தக் காரணம் கொண்டும் யாரும் பயன்படுத்தக் கூடாது. 

ஒரு நோயாளி, அறுவைசிகிச்சை செய்துகொள்ளும் முன்பு, பிரீமெடிகேஷன்  கொடுப்பது, தொடர்ந்து அறுவைசிகிச்சையின் போது உடல்நலனில் ஏற்படும் மாற்றங்களைக் கண்காணிப்பது, அதற்கு ஏற்ப உடனடியாக மருந்துகள் தர வேண்டியது, அறுவைசிகிச்சை முடிந்து மீண்டும் நலம் பெற்றுத் திரும்பும் வரை கண்காணிக்க வேண்டியது மயக்க மருந்தியல் மருத்துவரின் கடமை.

ஏன் மயக்க மருந்தியல் மருத்துவர் ஆலோசனை தேவை?

எல்லா பிரச்னைகளையும் கண்டறிய பரிசோதனைகள் பயன்படாது. சிகிச்சை வரலாறு தெரிந்தாலேபோதும். ஒரு நோயாளியின் கடந்த காலத்தில் ஏற்பட்ட மருத்துவப் பிரச்னைகளை சிகிச்சை அளிக்கும் மருத்துவரிடம் மட்டும் அல்லாமல் மயக்க மருந்தியல் மருத்துவரிடம் தவறாமல் சொல்ல வேண்டும்.   சிலருக்கு, சாதாரண குரோசின் முதலான வலி நிவாரணி மாத்திரைகளேகூட அலர்ஜியாக இருக்கும். எனவே, எந்தப் பொருள் அலர்ஜி என்பதை மறைக்கக் கூடாது. பெற்றோர்களுக்கு என்னென்ன நோய்கள் இருந்தன என்பதைச் சொல்ல வேண்டும். ஏற்கெனவே அறுவைசிகிச்சை செய்திருந்தால், அதுபற்றி தெரிவித்து, ரிப்போர்ட் இருந்தால் எடுத்து வர வேண்டும். ஏனெனில், எந்த மயக்க மருந்து எப்படி வேலை செய்தது என்பதை அப்போதுதான் கண்டுபிடிக்க முடியும். 

புகைப்பழக்கம், மதுப்பழக்கம் இருந்தால், கண்டிப்பாகச் சொல்ல வேண்டும். இல்லை எனில் நுரையீரல், கல்லீரல் போன்றவற்றில் சிகிச்சையளிக்கும்போது பாதிப்புகள் ஏற்படலாம். ஆஸ்துமா, வலிப்பு நோய், மஞ்சள் காமாலை, டெங்கு  காய்ச்சல், சர்க்கரை நோய், நெஞ்சு வலி போன்றவை ஏற்கெனவே வந்திருந்தால், மறைக்காமல் தெரிவிக்க வேண்டும்.

சந்தேகங்கள் கேட்கத் தயங்கக் கூடாது. அறுவைசிகிச்சை முடிந்து நலமான பிறகு அறுவைசிகிசசையின்போது, எந்தெந்த சமயங்களில் என்னென்ன மயக்க மருந்துகள் கொடுக்கப்பட்டன, அதற்கு உங்கள் உடல் என்ன எதிர்வினை செய்தது என்பதை எழுத்துப்பூர்வமாக கேட்டுப் பெறுவதும்கூட நோயாளியின் உரிமை.

 பரிசோதனை அவசியம்!

மயக்க மருந்தால் உடலின் எந்தப் பகுதியில் வேண்டுமானாலும் பக்கவிளைவு ஏற்படும் என்பதால், பல பரிசோதனைகள் செய்த பிறகே ஒருவருக்கு என்ன மயக்க  மருந்து தர வேண்டும் என்பதை மருத்துவர் தீர்மானிக்க முடியும். உதாரணமாக, ஒருவருக்கு ரத்தம் வெளியேறும் பிரச்னை இருந்தால், அவருக்கு அறுவைசிகிச்சை மேற்கொள்வது எளிதான விஷயம் இல்லை. அதேபோல, கல்லீரல் செயல்பாடுகள் சரியாக இல்லை என்றால், மயக்க மருந்தால் வளர்சிதை மாற்றம் பாதிக்கப்பட்டு, பக்கவிளைவுகள் ஏற்படும் வாய்ப்பு உண்டு. எனவே, அறுவைசிகிச்சை செய்துகொள்ளப்போகும் நபருக்கு ஹீமோகுளோபின் பரிசோதனை, யூரியா கிரியாட்டின் பரிசோதனை, குளுக்கோஸ் அளவுகள், ஈ.சி.ஜி, எக்கோ, எக்ஸ்ரே, நுரையீரல் பரிசோதனை மற்றும் நேரடிப் பரிசோதனை போன்றவற்றை மேற்கொண்ட பிறகுதான், ஒருவருக்கு எந்த வகையான மயக்க மருந்து தருவது என முடிவுசெய்யப்படும்.

நிபுணரிடம் பேசுங்கள்!

பெரும்பாலானவர்கள், அறுவைசிகிச்சை  செய்யும் சமயத்தில் தனக்கு என்ன மருந்து செலுத்தப்பட்டது, அதன் இயல்பு என்ன என்பதைக்கூட தெரிந்து வைத்துக் கொள்வது கிடையாது.ஒரு நோயாளி அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவருடன் மட்டும் அல்லாமல், மயக்க மருந்தியல் நிபுணரிடமும் கலந்து ஆலோசிக்க வேண்டியதும் முழுத் தொடர்பில் இருக்க வேண்டியதும் மிகவும் அவசியம்.

Govindakudi Mosque

zakat calculator