Saturday, July 30, 2016

விமானம் ரத்தானால் அல்லது பயணம் தாமதமானால்


விமானம் ரத்தானால் அல்லது பயணம் தாமதமானால் குறிப்பிட்ட விமான சேவை நிறுவனம் இழப்பீடு வழங்கும் முறை வரும் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் அமலாகிறது. சமீபத்தில் விமான நிறுவனங்களுக்கு உள்நாட்டு விமான போக்குவரத்து கழகம் சில வழிமுறைகளை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி விமானம் தாமதம் ஆனாலோ அல்லது ரத்து செய்யப்பட்டாலோ குறிப்பிட்ட விமான நிறுவனம் பயணிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். விமானம் புறப்படுவதற்கு 2 மணி நேரத்திற்கு முன் ரத்தாகும் அல்லது தாமதமாகும் விமானங்களுக்கு ரூ.10 ஆயிரம் வரை இழப்பீடு வழங்க வேண்டும். 

இந்த புதிய வழிமுறை ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது. இது போன்று தாமதமாகும் பல விமான சேவைகளுக்கும் தனித்தனியாக இழப்பீடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால் இனி விமானங்கள் ரத்தானாலோ, அல்லது தாமதமானாலோ விமான நிறுவனம் இதிக அளவிலான இழப்பீடு வழங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 

No comments:

Post a Comment

Govindakudi Mosque

zakat calculator