Saturday, January 1, 2011

தொழுகையை விட்டவர் அல்லாஹ்வின் அருட்கொடையை தவற விட்டவராவார்...

ஏகஇறைவனின் திருப்பெயரால்....

2:45. பொறுமை, மற்றும் தொழுகையின் மூலம் உதவி தேடுங்கள்! பணிவுடையோரைத் தவிர (மற்றவர்களுக்கு) இது பாரமாகவே இருக்கும்


وَاسْتَعِينُواْ بِالصَّبْرِ وَالصَّلاَةِ وَإِنَّهَا لَكَبِيرَةٌ إِلاَّ عَلَى الْخَاشِعِينَ {45} 

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

கடந்த கட்டுரைகளில் தொழுகை சம்மந்தமான தகவல்களை அகிலம் அனைத்திற்கும் பொதுமறையான அருள்மறைக்குர்ஆனிலும், அகிலத்தார் அனைவருக்கும் அழகிய முன்மாதிரியாகிய அண்ணல் நபி(ஸல்) அவர்களின் அறிவுரைகளிலும் சிறிதைப் பார்த்தோம்.

பாங்கு சொல்வதற்கு பதில் அளிப்பது தொடங்கி தொழுகையை முடித்து பள்ளிவாசலை விட்டு வெளியேறும் வரை அவற்றில் ஓதப்படுகின்ற வாசகங்களில் அதிகமானவைகள் அல்லாஹ்வைப் புகழ்வதை விட தொழுவோரின் உலக - மறுமைத் தேவைகளுக்கான, பாவமன்னிப்புக்கான வாசகங்களே அடங்கி இருப்பதைப் பட்டியலிட்டோம். பாவமன்னிப்பு, மற்றும் உலக- மறுமை தேவைகளை அல்லாஹ்விடம் கோரிக்கை வைப்பதற்கு தொழுகை தான் சிறந்த தருனமாக அமைகிறது என்பதையும் பார்த்தோம்.

தொழுகையை விட்டவர் அல்லாஹ்வின் அருட்கொடையை தவற விட்டவராவார்.

தொழுகைக்கு வெளியில்(தொழாதவர்கள்) வைக்கும் கோரிக்கை இறைவனிடம் அறவே ஏற்றுக்கொள்ளப் படமாட்டாது என்பதை பெருமானார்(ஸல்) அவர்கள் திட்டவட்டமாகக் கூறிவிட்டார்கள். யார் ஒருவர் வேண்டுமென்றே தொழுகையை விட்டு விடுகிறாரோ அவர் அல்லாஹ்விடத்திலே  எதையும் அடைய இயலாது (இப்னுமாஜா)

ஒருவர் தன்னை ஈன்றெடுத்த தனது தந்தையுடன் கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறிப்போய் பொருளாதார உதவியை மட்டும் பிறர் மூலம் அவரிடம் கேட்டனுப்பினால் ? அவர் கூறும் பதில் முதலில் அவனை வீட்டுக்கு வரச்சொல்லுங்கள் என்பதாகத்தான் இருக்கும். இருக்க வேண்டும்.

மனம் வருந்தி மகன் தன் வீட்டுக்குள் வந்து விட்டால் அவனுக்குத் தேவையான அனைத்தையும் தந்தை செய்து கொடுப்பார், மறுக்க மாட்டார். மறுக்கக் கூடாது. 

மகனின் தேவை நிறைவேற்றப்பட வேண்டுமென்றால் மகன் வீட்டுக்குள் இருக்க வேண்டும் என்று  தந்தை விரும்புவது போல் இறைவன் தன்னுடைய அடியார்களில் தொழாதவர்களை, தொழுகையை விட்டவர்களை மீண்டும் தொழுகையின் மூலம் இஸ்லாத்திற்குள் அழைக்கிறான்.

மனம் வருந்தி மீண்டும் தொழுகையை ஆரம்பித்து அதில் பாவமன்னிப்புக் கோரி, உலக- மறுமைத் தேவைகளைக் கேட்டால் குறைவின்றி வழங்குவதாக இறைவன் வாக்களிக்கிறான்.

19:59. அவர்களுக்குப் பின்னர் வழித் தோன்றல்கள் வந்தனர். அவர்கள் தொழுகையைப் பாழாக்கினர். மனோ இச்சைகளைப் பின்பற்றினர். அவர்கள் நஷ்டத்தைச் சந்திப்பார்கள்.

19:60. திருந்தி நம்பிக்கை கொண்டு நல்லறம் செய்தவரைத் தவிர. அவர்கள் சொர்க்கத்தில் நுழைவார்கள். சிறிதளவும் அவர்கள் அநீதி இழைக்கப்பட மாட்டார்கள்.

இறைவனிடம் ஒப்புக்கொள்ளப்பட்ட மார்க்;கம் இஸ்லாம் தான் என்பதை நாம் அனைவரும் அறிந்து வைத்திருக்கிறோம் ளூpஓôல®Pஅ ருôழனடுஅ குரவுÕ டீஎஓôúரு.... 3:19. இறைவனிடம் ஒப்புக்கொள்ளப்பட்ட மார்க்;கமாகிய இஸ்லாத்தில் இருந்து கொண்டுதான் இறையருளை எதிர்பார்க்க வேண்டும்.

இஸ்லாமியராக இருக்க வேண்டுமென்றால் தொழுகையாளியாக இருக்க வேண்டும், தொழவில்லை என்றால் இஸ்லாத்திலிருந்து தாமாக வெளியேறக் கூடிய அபாயம் உருவாகும்.

30: 31, 32. அவனை நோக்கியே திரும்புங்கள்! அவனை அஞ்சுங்கள்! தொழுகையை நிலை நாட்டுங்கள்! தங்களது மார்க்கத்தைப் பிரித்து பல பிரிவுகளாகி விட்ட இணை கற்பித்தோரில் ஆகி விடாதீர்கள்! ஒவ்வொரு கூட்டத்தினரும் தம்மிடம் உள்ளதில் மகிழ்ச்சியடைகின்றனர்.

இணை வைத்தல் மற்றும் இறை மறுப்புக்கும் (முஸ்லிமான) அடியானுக்கும் இடையில் உள்ள வேறுபாடு தொழுகையை விடுவதாகும்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி) நூல்: முஸ்லிம் 116

தொழுகையை அலச்சியம் செய்துவிட்டு கோடி, கோடியாய் தர்மம் செய்வபர்களும் இஸ்லாத்திலிருந்து தாமாக வெளியNறி விடுவார்கள்.   

காரணம் கோடி, கோடியாக கொட்டிக் கொடுத்தாலும் அவைகள் இறைவனுக்கு சிரம் பணிவதற்கு நிகராகாது.   

ஏன் என்றால் ?

அவர் கொட்டும் கோடிகள் அவருக்கு இறைவன் வழங்கிய கோடான கோடிகளில் சில கோடிகள் தான். அவனுக்கு சிரம் பணியாமல் அவன் கொடுத்ததிலிருந்து சிறிதை, சிலதை எடுத்து வழங்கிவிட்டு தொழாமல் இருந்து விடுவதால் அவனது அருட்கொடையையும், பாவமன்னிப்பையும் அடைந்து கொள்ள முடியாது.

அப்துல்லாஹ்வாகவோ, அப்துல்ரஹ்மானாகவோ பெயரளவில் இருந்து கொண்டு அவ்லியாக்கள் மூலம் உதவிதேடும் பரேலவிகள் இஸ்லாத்திலிருந்து வெளியேறி விடுவதைப் போல் தொழுகையை அலச்சியம் செய்துவிட்டு நன்மையை, ஏவித் தீமையைத் தடுக்கும் ஏனைய அமல்களில் மட்டும் கவனம் செலுத்துவோரும் இஸ்லாத்திலிருந்து வெளியNறி விடுவார்கள்.

அதனால்தான் நோன்பு,ஜகாத்,ஹஜ், போன்ற அனைத்து கடமையான நற்செயல்களையும் அல்லாஹ்வின் அடிமை என்று பிரகடனப்படுத்தும் தொழுகைக்கு அடுத்தநிலைக்கு அல்லாஹ்வின் தூதர்(ஸல்)அவர்கள் கொண்டு வந்தார்கள்.

முதல் கோணல் முற்றும் கோணல்.

அல்லாஹ்வின் அருட்கொடையை வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டவர்களுக்கு கடமையாக்கப்பட்ட நற்செயல்களில் முதல் நற்செயல் தொழுகைதான்.

முதல் நற்செயல் அலச்சியம் செய்யப்பட்டுவிட்டால் அதற்கடுத்து வரும் நற்செயல்கள் நடைமுறைப்படுத்த முடியாத நிலை ஏற்படலாம். 

மறுமையில் மனிதனின் அமல்கள் பற்றி விசாரிக்கப்படும்போது தொழுகை என்ற அமல் முதலில் விசாரிக்கப்படும் அது சீராக அமைந்து விடுமேயானால் அதற்கடுத்த அனைத்து அமல்களும் சீராகவே அமைந்திருக்கும். தொழுகை என்ற அமல் சீராக இல்லை என்றால் அதற்கடுத்த அனைத்து அமல்களும் சீரற்றதாகவே இருக்கும் என்று நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹூரைரா(ரலி) அவர்கள். ஆதாரம்: ஸூனன் அபூதாவூத்.

தொழுகை முறையாக இருந்து அதற்கடுத்து வரும் கடமையான நற்செயல்களில் எதாதவது குறை இருந்தால் தொழுகையின் மூலம் குவியும் மலைப் போன்ற நன்மைகள் அவற்றை சரி செய்துவிடும்;

தொழுகை முறையாக இல்லாமல் அதற்கடுத்து வரும் நற்செயல்கள் மலைபோல் இருந்தாலும் அவைகள் தொழுகையின் குறையை சரி செய்ய முடியாது காரணம் அவைகள் இறைவனிடம் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.


9:54. அல்லாஹ்வையும், அவனது தூதரையும் மறுத்ததும், சோம்பலாகவே தொழுது வந்ததும், விருப்பமில்லாமல் (நல்வழியில்) செலவிட்டதுமே அவர்கள் செலவிட்டவை அவர்களிடமிருந்து ஏற்கப்படுவதற்குத் தடையாக இருக்கிறது.


ஆகவே இறைவனுக்கு சிரம் பணியாமல் இருந்துகொண்டு இறைவன் கொடுத்ததை மட்டும் வாரி இரைத்து நன்மையை அடையலாம் என்று நினைத்தாலும், இறைவனுக்கு சிரம் பணியாமல் இருந்து கொண்டு ஏனைய அமல்களில் மட்டும் ஈடுபட்டு நன்மையை அடையலாம் என்று நினைத்தாலும் அவைகள் விழலுக்கு இரைக்கும் நீர் போன்றதாகும்.

விழலுக்கு நீர் இரைப்பதால் எதையும் அறுவடை செய்து கொள்ள முடியாதோ அதேப்பேன்றே சிரம் பணியாதவரின் ஏனைய நற்செயல்களால் நன்மைகள் விளையாது.  

பொறுமையைத் தரும் தொழுகை.

மேற்காணும் துர்பாக்கிய நிலைக்கு தள்ளப்படாமல் இஸ்லாத்தில் நீடித்து நிலைக்க வேண்டுமானால் ? தொழுகையாளிகளாக இருக்கவேண்டும் தொழுகையின் மூலமே இறைவனிடம் உதவியும், பாவமன்னிப்பும் தேடவேண்டும். 2:45. பொறுமை, மற்றும் தொழுகையின் மூலம் உதவி தேடுங்கள்! பணிவுடையோரைத் தவிர (மற்றவர்களுக்கு) இது பாரமாகவே இருக்கும்

இறைவனை மறுக்கும் நாத்திகவாதிகளுக்குத் தான் தொழுகையும், பொறுமையும் கடினமாக இருக்கும் என்று அல்லாஹ் மேற்காணும் வசனத்தில் கூறுகிறான்.

இறைவன் இருக்கிறான் என்ற உறுதியான நம்பிக்கையில் உள்ளவர்கள் முஸ்லீம்கள் என்பதால்  அல்லாஹ் திருமறையில் பல இடங்களில் நம்பிக்கையாளர்களே ! என்று அழைக்கிறான். 

நம்பிக்கையாளர்கள் தொழவில்லை என்றால் மேற்காணும் மறுப்போர் நிலைக்கு தாமாக தள்ளப்பட்டுவிடுவார்கள். 

பொறுமை இல்லாதவர்களுக்கு பூமியே பாரமாகி விடுவதை நம் வாழ்க்கையில் பல சந்தர்ப்பங்களில் பார்த்திருக்கிறோம்.

தொழுகையாளிகள் தான் விதியின் அமைப்பை நினைத்து தங்களக்கு ஏற்படும் இன்னல்கள், இடர்பாடுகளை சகித்துக் கொள்வார்கள், தொழாதவர்கள் விதியை நொந்துகொண்டு தனக்குத்தானேக் கோரமான முடிவை அவசரப்பட்டு ஏற்படுத்திக் கொள்வார்கள் பொறுமை இல்லாதவர்களை பூமியே வெகு சீக்கிரம் துப்பி வெளியேத் தள்ளிவிடும்.

தொழாமல், அல்லது தொழுகையை இடையில் விட்டு இஸ்லாத்திலிருந்து வெளியேறி இருந்தால் தாமதிக்காமல் தொழுகையின் மூலம் இஸ்லாத்திற்குள் மீண்டும் நுழைந்து கொண்டு அல்லாஹ்விடம் பாவமன்னிப்பும், உலக – மறுமைத் தேவைகளை கோரும் பாக்கியசாலிகளாக ஆகிவிடுவதற்கு வல்ல அல்லாஹ் நம் அனைவரையும் ஆக்கி அருள் புரிவானாக !
وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ


3:104. நன்மையை ஏவி தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....



1 comment:

  1. ஒரு முஃமின் இன்னொரு முஃமினிடம் ஒரு தவறைக் காணும் போது அவர் அந்தத் தவறிலிருந்து அவரைத் திருத்துவதும் அவரிடம் நன்மையை ஏவுவதும் கடமையாகும்.

    நான் ஒருமுறை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் சென்று, ''இஸ்லாத்தைத் தழுவுவதாக தங்களிடம் உறுதிமொழி எடுத்துக் கொள்ள வந்திருக்கின்றேன்'' என்று கூறினேன். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ''முஸ்லிம்கள் ஒவ்வொருவருக்கும் நலம் நாட வேண்டும்'' என்று எனக்கு நிபந்தனை விதித்தார்கள். (அறிவிப்பவர் : ஜரீர் இப்னு அப்தில்லாஹ் ரளியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி 58)
    இந்த ஹதீஸின் அடிப்படையில் நாம் நம்முடைய சக கொள்கைவாதிக்கு நன்மையைக் கருத வேண்டும். அதையொட்டி அவரிடம் ஏற்படும் தவறுகளைச் சுட்டிக் காட்ட நாம் கடமைப்பட்டுள்ளோம். இதை ஆதாரமாகக் கொண்டு நாம் ஒரு தவறைச் சுட்டிக் காட்ட முனைகின்ற போது அவரிடம் ஒரே பாய்ச்சலில் பாய்ந்து விடக் கூடாது.

    தவறைச் சுட்டிக் காட்டுவதில் ஒரு முரட்டுத்தனம் வந்து விடக் கூடாது. தவறை எப்படிச் சுட்டிக் காட்ட வேண்டும் என்பதை இஸ்லாம் தகவாக சொல்லிக் காட்டுகின்றது. இதற்கு அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் உள்ள முன்னுதாரணத்தை வாழ்க்கையில் நாம் பாடமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
    அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அமர்ந்திருக்கும் போது, ஒரு கிராமவாசி பள்ளிக்குள் நுழைந்து, ''யா அல்லாஹ்! எனக்கும் முஹம்மதுக்கும் மன்னிப்பை வழங்குவாயாக! எங்களுடன் சேர்த்து வேறு யாருக்கும் நீ மன்னிப்பளிக்காதே!'' என்று சொன்னார்.

    அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உடனே சிரித்து விட்டார்கள். ''(அல்லாஹ்வின்) விசாலமான தன்மைக்கு நீ தடை விதிக்கின்றாயே!'' என்று கூறினார்கள்.பிறகு அவர் பள்ளியின் ஓரத்தில் ஆடையை அகற்றி சிறுநீர் கழிக்கலானார். (தான் தவறு செய்து விட்டோம் என்று) அவர் உணர்ந்த பின் என்னருகில் வந்து நின்று கொண்டு, ''அவர்கள் கடுமையாக எச்சரிக்கவில்லை. ஏசவில்லை'' என்று சொன்னார்.

    அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ''இது பள்ளிவாசலாகும். இதனுள் சிறுநீர் கழிக்கப் படலாகாது. இது அல்லாஹ்வை நினைவு கூர்வதற்காகவும் தொழுவதற்காகவுமே கட்டப் பட்டுள்ளது'' என்று கூறி ஒரு வாளி தண்ணீர் கொண்டு வர உத்தரவிட்டார்கள். அது அவரது சிறுநீரில் ஊற்றப்பட்டது. (அறிவிப்பவர் : அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல் : இப்னுமாஜா 522 )

    ஒரு கிராமவாசி பள்ளிவாசலில் சிறுநீர் கழித்து விட்டார். உடனே மக்கள் அவரைப் பிடித்தனர். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ''அவரை விட்டு விடுங்கள். அவர் கழித்த சிறுநீர் மீது ஒரு வாளி தண்ணீரை ஊற்றி விடுங்கள். நீங்கள் நளினமாக எடுத்துச் சொல்லக் கூடியவர்களாக அனுப்பப் பட்டுள்ளீர்கள். கடினமாக எடுத்துச் சொல்பவர்களாக நீங்கள் அனுப்பப் படவில்லை'' என்று கூறினார்கள். (அறிவிப்பவர் : அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி 220)

    ReplyDelete

Govindakudi Mosque

zakat calculator