Monday, January 31, 2011

Job Openings

New Job Posted :
Group : Al Jaber Group
Job Title : Various, # of Positions: 230 Plus, Start: ASAP
Location : Abu Dhabi, UAE
Compensation : Competitive Salary, Housing, Transportation, Private Medical and 30 Days Paid Vacation etc. etc.

SNS Group (Riyadh - Saudi Arabia)
Multiple Job Openings

Visit and Download: http://www.uaetamilsangam.com/jobopening.asp

Tuesday, January 25, 2011

GENERAL KNOWLEDGE OF HOLY QURAN.

 



No QUESTION ANSWER
1 How many Sura are in Holy Quran ? 114
2 How many Verses are in Holy Quran ? 6666
3 How many dots are in Holy Quran ? 1015030
4 How many over bar (zaber) are in Holy Quran ? 93243
5 How many under bar ( Zaer ) are in Holy Quran ? 39586
6 How many R u que are in Holy Quran ? 1000
7 How many stop ( Waqf ) are in Holy Quran ? 5098
8 How many Thashdeed are in Holy Quran ? 19253
9 How many letters are in Holy Quran ? 323671
10 How many p e sh are in Holy Quran ? 4808
11 How many Madd are in Holy Quran ? 1771
12 How many words are in Holy Quran ? 77701
13 How many parts of Holy Quran ? 30
14 How many time Besmillah Al-Rahmaan Al-Raheem is repeated ? 114
15 How many Sura start with Besmillah Al-Rahmaan Al-Raheem ? 113
16 How many time the word 'Quran' is repeated in Holy Quran ? 70
17 Which is the longest Sura of Holy Quran ? Al-Baqarah.
18 Which is the best drink mentioned in Holy Quran ? Milk.
19 The best eatable thing mentioned inHoly Quran is ? Honey.
20 Which is the shortest Sura of Holy Quran ? Qausar.
21 The longest verse of Holy Quran is in which Sura? Al-Baqarah No.282
22 The most disliked thing by the God though Halal is ? Divorce
23 Which letter is used for the most time in Holy Quran.? Alaph
24 Which letter is used for the lest time in Holy Quran ? Zaa.
25 Which is the best night mentioned in Holy Quran ? Night of Qadar.
26 Which is the best month mentioned in Holy Quran ? Ramzan.
27 Which is the biggest animal mentioned in Holy Quran ? Elephant.
28 Which is the smallest animal mentioned in Holy Quran ? Mosquito
29 How many words are in the longest Sura of Holy Quran ? 25500
30 How many words are in the smallest Sura of Holy Quran ? 42
31 Which Sura of Holy Quran is called the mother of Quran ? Sura Hamd
32 How many Sura start with Al-Hamdullelah ? Five: Hamd, Inaam, Kahf, Saba & Fatr.
33 Which Sura has the same number of verses as the number of Sura of Holy Quran ? Taqveer, 114 verses.
34 How many Sura's name is only one letter ? Three: Qaf, Sad & Noon.
35 How many Sura start with word " Inna " ? Four sura - Fatha, Nuh,Qadr, Qausar.
36 Which Sura has the number of its verses equal to the number of Masumeen ? Saf, 14 verses.
37 Which sura are called Musabbahat ? Esra, Hadeed, Hsar, Juma, Taghabun & Aala.
38 How many sura are Makkahi and how many are Madni ? Macci 86, Madni 28.
39 Which sura is on the name of tribe of Holy Prophet ? Quresh
40 Which sura is called the heart of Holy Quran ? Yaseen.
41 In which sura the name of Allah is repeated five time ? Sura al-Haj.
42 Which sura are named Azaiam ? Sajdah, Fusselat, Najum & Alaq.
43 Which sura is on the name of one Holy war ? Sura Ahzaab.
44 Which sura is on the name of one metal ? Sura Hadeed
45 Which sura does not starts with Bismellah ? Sura Tauba.
46 Which sura is called ' Aroos-ul-Quran ? Sura Rehman.
47 Which sura is considered as 1/3 of holy Quran ? Sura Tauheed.
48 The name of how many sura are with out dot ? Hamd, Raad, Toor, Room, Masad.
49 In which sura Besmillah came twice ? Sura Naml..
50 How many sura start with the Initials ( Mukette'at )? 29 Sura.
51 Which Sura was revealed twice ? Sura Hamd..
52 In which Sura the back biter are condemned ? Sura Humzah.
53 In which Sura the name of Allah is repeated in every verse ? Sura Mujadala.
54 In which Sura the letter 'Fa' did not come ? Hamd.
55 Which Sura are called Muzetain ? Falk & Nas.
56 Which are those Sura if their name are reversed remain the same ? Lael & Tabbat.
57 Which is that Sura if its first letter is remove becomes the name of one of the city of Saudi Arab ?   Sajdah
58 Which Sura start with word ' Tabara Kallazi' ? Mulk & Furkan
59 Macci Sura were revealed in how many years ? 13 years
60 Madani Sura were revealed in how many years ? 10 years.
61 Which sura start with word Kad ? Mujadala & Momenoon.
62 Which Sura is related to Hazrat Ali ? Sura Adiat.
63 How many Sura are in 30th. Chapter ? 37
64 Which sura every verse ends with letter 'Dal ' ? Tauheed.
65 Which Sura is revealed in respect of Ahllelbayet ? Sura Dahr..
66 Which sura every verse ends with letter ' Ra '?   (sabahclt@yahoo.com) Qauser.
67 In which sura the creation of human being is mentioned ? Sura Hijr V-26.
68 In which sura the regulations for prisoner of war is mentioned ? Sura Nesa
69 Which sura is having the laws about marriage ? Sura Nesa..
70 Which sura if its name is reversed becomes the name of one bird ? Sura Room..
71 In which sura the story of the worship of cow of Bani Esra'iel is mentioned ? Sura Taha..
72 In which sura the law of inheritance is mentioned? Sura Nesa..
73 In which sura the Hegira of Holy Prophet is mentioned ? Sura Infall.
74 In which Sura the 27 Attributes of God are mentioned ? Sura Hadeed

Sunday, January 16, 2011

அலைபேசி அருமைகளும், அவலங்களும்…

மோட்டாரோலாவின் செங்கல் போன்ற மொபைல் போனி லிருந்து இன்றைய ஆப்பிள் 3ஜி போன், பிளாக் பெர்ரி (Black berry) போன் வரை வளர்ச்சியைக் கொண்ட மொபைல் போனின் வயது சுமார் 27 ஆகிறது.
1983ல் டாக்டர் மார்டின் கூப்பர் 2500 பவுண்ட் விலையில் முதன் முதல் மோட்டாரோலா டைனா ஏ.டி.சி 800 எக்ஸ் என்னும் மொபைல் போனை வர்த்தக ரீதியாகக் கொண்டு வந்தார்.
அப்போதெல்லாம் பெரும் செல்வந்தர்களின் சொகுசு சாதனமாக செல்போன் இருந்து வந்தது. இந்நிலை நீண்ட நாட்களாக இருந்து வந்த போதிலும் அண்மைக்காலமாக அன்றாட வாழ்க்கையின் அத்தியாவசிய சாதனமாக அது மாறிவிட்டது.
மொபைல் போன் முதன் முதலில் வந்து ஓராண்டு கழிந்த பின்னர் உலகில் சுமார் 12 ஆயிரம் பேரே அதன் உபயோகிப்பாளர்களாக இருந்தனர். ஆனால் இன்று அனைத்து நாடுகளிலும் கோடிக்கணக்கானோர் பயன்படுத்தி வருகின்றனர். இந்தியாவில் மட்டும் மொபைல் போனை உபயோகிப் பவர்களின் எண்ணிக்கை 670 மில்லியன் என அரசு செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.
பேசுவதற்கு மட்டும் வந்த இந்த மொபைல் போன் இன்று டெக்ஸ்ட் மெஸேஜ்களை (எஸ்எம்எஸ்) அனுப்புவதற்கும் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. இதனைத் தொடர்ந்து பெரிய அளவில் டேட்டா (Data) பரிமாற்றத்திற்காக ஏற்படுத்தப்பட்டதே இன்று 3ஜி மற்றும் இனி வர இருக்கும் 4ஜி மொபைல் சேவைகள் ஆகும். இந்த வேக மாற்றங்கள் இனிவரும் காலங்களில் மொபைல் போனில் எத்தகைய மாற்றங்கள் ஏற்படும் என்பது கற்பனை கூடசெய்து பண்ணிப் பார்க்க முடியாத நிலையிலுள்ளது.
அல்லாஹ் மனிதனுக்கு வழங்கியுள்ள அருட்கொடைகளில் மொபைல் போனும் ஒன்று என்றே சொல்லலாம். இருப்பினும் இவ்வருட் கொடையைப் பயன்படுத்துவதில் இஸ்லாம் காட்டும் வழிமுறைகள் புறக்கணிக்கப்பட்டதால் அது மிகப்பெரும் ஆபத்தாக மாறிவருகிறது.
இஸ்லாத்தை தமது வாழ்க்கை திட்டமாக ஏற்று அதனடிப்படையில் வாழ விரும்பும் மக்களுக்கு மொபைல் போன் உபயோகத்தை எவ்வாறு இஸ்லாமிய முறையில் அமைத்துக் கொள்வது என்பதைத் தெளிவு படுத்துவது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
கீழே குறிப்பிடப்படுபவை மொபைல் போனைப் பயன்படுத்துவோர் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்களாகும்.

1. தொடர்பு கொள்ளும் நேரத்தை கவனத்தில் கொள்ளல்
பொதுவாக இஸ்லாம் பிறருக்கு தொல்லை கொடுப்பதை அனுமதிக்கவில்லை. இந்த வகையில் மொபைல் மூலமாகவும் தொல்லை கொடுப்பது தடை செய்யப்பட்டதே! நாம் தொடர்பு கொள்ளக் கூடிய சகோதரர்கள் நோயாளியாக, பிஸியாக அல்லது ஏதாவது கூட்டங்களில் இருக்கலாம் எனவே அவர்களிடமிருந்து நமது அழைப்புக்கு பதில் வராத சந்தர்ப்பங்களில் அவர்களை மீண்டும் மீண்டும் அழைத்து தொல்லை கொடுக்காமல் இருக்க வேண்டும். அவ்வாறே தூங்கக் கூடிய நேரங்கள், தொழுகை போன்ற வணக்கங்களில் ஈடுபடக் கூடிய சந்தர்ப்பங்களில் பிறரை அழைத்து தொல்லை கொடுப்பது மார்க்கம் அனுமதிக்காத விஷயமாகும்.
2. தொடர்பு கொள்பவரை சங்கடத்தில் ஆழ்த்தாமல் இருப்பது.
தொலைபேசி மூலமாக ஒருவருடன் தொடர்பு கொள்ளக் கூடியவர் ஆரம்பத்தில் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்வதே ஒழுங்காகும்.
ஒருமுறை ஜாபிர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களின் இல்லம் சென்று அவர்களை அழைத்த போது, யார்? என்று நபியவர்கள் வினவினார்கள். அதற்கு ஜாபிர் (ரலி) அவர்கள் ‘நான்’ என்று பதில் சொன்னார்கள். அப்போது வெளியே வந்த நபி (ஸல்) அவர்கள் அவர் (பெயர் கூறி தன்னை அடையாளப்படுத்தாமல்) ‘நான்’ என்று கூறியதை கண்டித்தார்கள். (புகாரீ, முஸ்லிம்)
எனவே ஒருவரோடு தொடர்பு கொள்ளும் போது நாம் யார் என்பதை அடையாளப்படுத்துவது அவசியம் என்பது தெளிவாகின்றது. குறிப்பாக, தொலைபேசி மூலமாக பேசும்போது நாம் யார் என்பதை அடையாளப்படுத்தாவிட்டால் தொடர்பு கொண்டவர் கோபத்தில் அழைப்பைத் துண்டிக்க வாய்ப்பிருக்கிறது.
சிலர் தொடர்பு கொண்டுவிட்டு மறுதரப்பில் உள்ளவர்களிடம் ‘நீங்கள் யார்?’ என வினவுவது அநாகரீகமான செயலாகும். எனவே தொடர்பு கொண்டவரே தன்னை அறிமுகப்படுத்துவதுதான் தொலைபேசி ஒழுங்கும் இஸ்லாம் கூறும் வழிகாட்டலும் ஆகும். மேலும் தொடர்பு கொள்ளக் கூடிய ஒருவர் மறுதரப்பில் இருந்து பதில் எதுவும் கிடைக்காத போது உடனடியாக தனது மொபைலை ஆஃப் செய்துவிடுவதும் அவரை ஒரு வகையில் சங்கடத்தில் ஆழ்த்தும். எனவே இதுவும் தவிர்க்கப்பட வேண்டியதே!
3. கூட்டங்களில் (மீட்டிங்ஸ்) அதிகமாக மொபைலை பயன்படுத்துவது.
கூட்டங்களில் அமர்ந்திருக்கும் ஒருவர் பிறரோடு தொடர்பு கொள்வதும் தனக்கு வரும் அழைப்புகளுக்கு பதில் தருவதும் நாகரீகமற்ற செயலாகும். அவ்வாறு நடந்து கொள்வது கூட்டத்தில் அமர்ந்திருப்போருக்கும் அதை நடத்து பவருக்கும் தொல்லை தரும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. எனவே மொபைலை உபயோகிப்பவர்கள் இச்செயலை கண்டிப்பாக தவிர்ந்து கொள்ள வேண்டும். மொபைலை ‘ஸைலென்ட் மோடில் வைத்துக் கொள்ளலாம். அல்லது ஆஃப் செய்துவிடலாம். இன்று பெரும்பாலான கூட்டங்களின் ஆரம்பத்தில் இவ்விஷயம் நினைவூட்டப்படுவது குறிப்பிடத்தக்கது.
4. பள்ளிவாசலினுள் நுழையும் போது மொபைல் போனை ஆஃப் செய்தல்
தொழுகையில் இறையச்சத்துடனும் உயிரோட்டத்துடனும் ஈடுவது மார்க்கம் வலியுறுத்தியுள்ள விஷயமாகும். எனவே இவ்வாறு பயபக்தியுடன் தொழுது கொண்டிருப்போரையும், அதை வைத்திருப்பவரையும் திசை திருப்பும் அம்சமாக மொபைல் மாறிவிடாமல் இருப்பதற்காக பள்ளிவாசலினுள் நுழையும் போதே அதை ஆஃப் செய்துவிட வேண்டும்.
5. ரிங் டோனாக இசைகளையும், அல்குர்ஆன் வசனங்கள் மற்றும் துஆக்களையும் பயன்படுத்துவது
எனது உம்மத்தில் ஒரு கூட்டம் இருக்கும் அவர்கள் விபச்சாரம், பட்டு, மதுபானம் மற்றும் இசைக்கருவிகளை ஹலாலாக்கிக் கொள்வார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)
இசையும் இசைக்கருவிகளும் தடை செய்யப்பட்டவை என்பதில் நான்கு மத்ஹபுடைய இமாம்கள் உட்பட அனைத்து அறிஞர்களும் ஏகோபித்த கருத்தில் உள்ளனர். மேலும் ஸவூதி அரேபியாவின் ஆய்வுக்குழுவும் இசை ஹராம் என தீர்ப்புவழங்கியுள்ளது. எனவே நமது தேவைகளை பரிமாறிக் கொள்வதற்காக நாம் பயன்படுத்தக் கூடிய மொபைல்களில் இவ்வாறான இசைகளை தவிர்ந்து கொள்வது அவசியமாகும்.
ஒருவர் பயன்படுத்தும் ரிங்டோனை வைத்தே அவரது ஆளுமையை புரிந்து கொள்ளலாம். இளைய தலைமுறையினர் மட்டுமன்றி பெரியவர்களும் சில வேளைகளில் மார்க்க ஈடுபாடு கொண்டோரும் இவ்வாறான இசைகளுக்கு அடிமைப்படுவது வேதனை அளிக்கக்கூடிய விஷயமாகும்.
அவ்வாறே சிலர் அல்குர்ஆன் வசனங்கள்,துஆக்கள் மற்றும் அதான் எனும் பாங்கு போன்றவற்றை ரிங் டோனாகப் பயன்படுத்துகின்றனர். இது பற்றி சமகால இஸ்லாமிய அறிஞர்களுள் ஒருவரான அஷ்ஷெய்க் ஸாலிஹ் அல்ஃபவ்ஸான் அவர்களிடம் வினவப்பட்ட போது, இவற்றை ரிங்டோனாகப் பயன்படுத்துவது அவற்றை இழிவுபடுத்துவதாகவே அமையும் என்று பதிலளித்தார். எனவே, இவ்விஷயத்தில் முஸ்லிம்கள் மிக கவனமாக இருக்க வேண்டும்.
6. வாகனத்தை ஓட்டும் போது மொபைலை உபயோகிப்பது.
வாகன ஓட்டுனர்கள் வாகனங்களை ஓட்டும் போது மொபைல் போன்களை பயன்படுத்துவது அதிக அளவில் விபத்துக்கள் ஏற்படுவதற்கு காரணமாக அமைவதாக ஆய்வுகள் கூறுகின்றன. விபத்துக்களில் 28 சதவீதமானவை வாகனங்களை ஓட்டும் போது மொபைல் போன்களில் பேசுவதாலும், எஸ்எம்எஸ் அனுப்புவதாலும் ஏற்படுவதாக ‘தி வாஷிங்டன் போஸ்ட்’ இணையதளம் கூறுகிறது. இதனாலேயே பல நாடுகளில் இது ஒரு தண்டனைக்குரிய குற்றமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்லாத்தில் உயிர்கள் பெறுமதிப்புமிக்கவையாக உள்ளன. பிறர் உயிர்களுக்கு ஆபத்தை உண்டு பண்ணுவதும், தன்னைத்தானே அழித்துக் கொள்வதும் இஸ்லாம் தடைசெய்திருக்கும் பாவங்களாகும். எனவே வாகனங்களை ஓட்டும் போது மொபைல் போனை பயன்படுத்துவதைத் தவிர்ப்பது மார்க்க ரீதியில் கடமை என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.
7. எஸ்எம்எஸ் (குறுஞ் செய்தி) அனுப்பும் போது பேண வேண்டியவை
மொபைல் போனின் பயன்பாடுகளில் டெக்ஸ்ட் மெஸேஜ் அனுப்புவது மிக முக்கியமான ஒன்றாக உள்ளது. ஆனால் இதில் மார்க்கமும் ஒழுக்கமும் பேணப்படாமல் பயன்படுத்துவோர் நடந்து கொள்வது வேதனை தரும் அம்சமாகும். ஆபாசமான, விரசமான செய்திகளையும் உறுதிப்படுத் தப்படாத தகவல்களையும் அனுப்புவதும் அடுத்தவர்களின் மனங்களை புண்படுத்தக் கூடிய செய்திகளை பரப்புவதும் இஸ்லாம் தடைசெய்துள்ள பாவங்களாகும்.
‘தான் கேட்கின்ற அனைத்தையும் (உறுதிப் படுத்தாமல்) உடனே அறிவிப்பது ஒருவன் பொய்யன் என்பதற்குப் போதுமான சான்றாகும்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)
‘ஈமான் கொண்டவர்கள் மத்தியில் ஆபாசம் பரவ வேண்டுமென விரும்புகிறவர்களுக்கு இம்மையிலும் மறுமையிலும் நோவினை தரும் தண்டனை உண்டு’ (24:19) என்று அல்லாஹ் கூறுகின்றான்.
எனவே எஸ்எம்எஸ் அனுப்பும் போது அல்லாஹ் நம்மை பார்த்துக் கொண்டிருக்கின்றான் என்ற உணர்வு நம்மிடம் இருக்கவேண்டும். மொபைல் போன்களின் மூலமாக ஆபாசத்தையும் அவதூறுகளையும் வதந்திகளையும் பரப்புவோர் மறுமையில் கடுமையான தண்டனைக்கு உட்படுத்தப் படுவார்கள் என்பதையும் மறந்துவிடக் கூடாது.
8.மொபைல் போன்கள் மூலமாக முஸ்லிம்களின் குறைகளைத் தேடுவதும் பரப்புவதும் கூடாது
பொதுவாக மனிதர்களின் குறிப்பாக முஸ்லிம்களின் மானம் புனிதமானது என்று இஸ்லாம் கூறுகிறது. ஒரு முஸ்லிமின் குறைகளைத் தேடுவதும் அவனை மானபங்கப்படுத்துவதும் மார்க்கத்தில் கடுமையாக தடைசெய்யப்பட்டுள்ளது.
‘நாவினால் ஈமான் கொண்டு உள்ளத்தில் ஈமான் நுழையாமல் இருக்கும் மக்களே! முஸ்லிம்களை நோவினை செய்யாதீர்கள்! அவர்களை மானபங்கப்படுத்தாதீர்கள்!
மேலும் அவர்களின் குறைகளைத் தேடாதீர்கள்! யார் தனது சகோதர முஸ்லிமின் குறைகளைத் தேடுகிறாரோ அவரது குறைகளை அல்லாஹ் தேடுவான். மேலும் அவர்களின் உள் வீட்டில் வைத்தேனும் அவர்களை இழிவுபடுத்திவிடுவான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அஹ்மது, அபூதாவூத், திர்மிதீ)
மொபைல் போன் என்பது தகவல் தொடர்பு வசதிக்காக வந்த ஒரு சாதனமாக இருந்த போதிலும் அதையே வேடிக்கையாகப் பயன்படுத்தும் போக்கு இன்று பலரிடம் வளர்ந்து வருகிறது. மேற்கூறப்பட்ட ஹதீஸில் வந்துள்ள வழிகாட்டல்கள் அனைத்தையும் மறந்து சிலர் செயல்படுவது வேதனை அளிக்கக் கூடியதாகும்.
மொபைல் போன்களில் உள்ள வீடியோ, போட்டோ கேமராக்களை வைத்து அந்நியப் பெண்களை படம் எடுப்பதும் அவற்றை அசிங்கமான முறையில் பயன்படுத்துவதும் தம்முடன் தொடர்பு கொள்வோரின் உரையாடல்களை திருட்டுத்தனமாக பதிவு செய்வதும் இஸ்லாம் தடைசெய்துள்ள மோசமான செயல்களாகும். இதனால் பல விபரீதமான விளைவுகளும் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன.
போன்கள் பழுதடையும்போது அவற்றைத் சரிசெய்வதற்காக டெக்னீஷியனிடம் ஒப்படைக்கும் போது மிக கவனமாக இருக்க வேண்டும். மொபைல் போனிலுள்ள மெமரி கார்டை எடுக்காமல் கொடுத்ததனால் சில பெண்கள் தங்களது கற்புகளை இழந்த நிகழ்வுகளும் உள்ளன.
9. பிள்ளைகள் மொபைல் போன் பயன்படுத்தும் போது அவர்களை கவனிப்பது பெற்றோரின் பொறுப்பு
பிள்ளைகள் பெற்றோரிடம் அமாநிதமாக ஒப்படைக்கப்பட்ட செல்வங்கள். எனவே அவர்களை மார்க்கப்பற்றுடனும் ஒழுக்கத் துடனும் வளர்த்தெடுப்பது பெற்றோரின் கடமையாகும். இதில் கோட்டை விட்டால் அவர்கள் மறுமையில் கடுமையான விசாரணைக்கு உட்படுத்தப்படுவார்கள்.
“நீங்கள் ஒவ்வொருவரும் பராமரிப்பாளர்கள், உங்கள் பராமரிப்புப் பற்றி (மறுமையில்) விசாரிக்கப் படுவீர்கள். ஓர் ஆண் தனது குடும்பத்தைப் பராமரிக்க வேண்டியவன். அதுபற்றி அவன் விசாரிக்கப்படுவான்..” என்று நபி(ஸல்) கூறினார் கள். (புகாரி)
மொபைல் போன் என்பது நல்ல நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டது. ஆனால் இன்றைய இளைய தலைமுறையினர் அதை வேடிக்கைக்காகவும் பொழுதுபோக்கிற்காகவும் பயன்படுத்த ஆரம்பித்து விட்டனர். இதனால் பல மோசமான விளைவுகள் ஏற்படுகின்றன. இளைஞர்களிடம் ஒழுக்கச் சீர்கேடுகள் வேகமாகப் பரவுகின்றன. அவர்களது கல்வியிலும் பாதிப்புகள் ஏற்படுகின்றன. இதனால்தான் உத்தரப்பிரதேசம் போன்ற சில இடங்களில் திருமணமாகாத பெண்கள் மொபல் போனில் பேசத் தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே, பெற்றோர் தேவையில்லாமல் தமது பிள்ளைகளுக்கு மொபைல் போன் வாங்கிக் கொடுப்பதை தவிர்க்க வேண்டும். அவர்கள் அதனை வைத்துக் கொள்ள வேண்டுமென்ற? நிலை ஏற்பட்டால் அவர்களை சரியான முறையில் கவனித்து வழிகாட்ட வேண்டும்.
10. மொபைல் போனால் வீண் விரயங்கள் தவிர்க்கப் படல் வேண்டும்.
“உண்ணுங்கள் பருகுங்கள், வீண் விரயம் செய்யாதீர்கள்” என்றும் “வீண் விரயம் செய்யாதீர் நிச்சயமாக வீண் விரயம் செய்வோர் ஷைத்தானின் தோழர்கள் என்றும் அல்குர்ஆன் கூறுகின்றது.
மொபைல் போன் உபயோகிப்பாளர்கள் பணம், நேரம் போன்றவற்றை வீண் விரயம் செய்வது பரவலாக உணரப்படுகிறது, எனவே, வீண் விரயம் செய்வது மொபைல் விஷயத்திலும் ஹராம் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். அவ்வாறே மொபைல் போனை நீண்ட நேரம் பயன்படுத்துவதால் உடல் நலத்திற்குரிய பாதிப்புகளை ஏற்படுத்துவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
ஆக, அல்லாஹ்வின் அருட்கொடைகளில் ஒன்றாக கருதப்படும் மொபைல் போனை இஸ்லாமிய வரையறைகளுக்குள் பயன்படுத்தி நன்மைகளை அடைய முயற்சி செய்வோம்.

Wednesday, January 5, 2011

VACANCIES IN SAUDI ARAMCO

Required by Saudi Aramco Contractor (Final client interview first week of January 2011. CV short listing in progress.)
  • Manager Project
  • Manager Project QA & QC
  • Site Manager (E &I)
  • HSE & Scaffolding
  • Project Engineer (Structural / Mechanical / HVAC & Civil)
  • Erection Engineer Site (Mechanical)
  • Site Engineer (Piping)
  • Site Engineer (Civil)
  • Planning Engineer
  • Instrumentation Engineer
  • Commissioning Engineer Communication / Electrical / Instrumentation & Mechanical / Piping
  • Service Manager Maintenance
  • I.T. Engineer
  • Welding Engineer
  • Material Engineer / Material Controller Senior / Lead Engineer Mechanical, Piping, Pipeline, Structural, Instrument/ Control
  • Senior/ Lead Engineer Civil, Process Material, Electrical, Telecom & Design, Internal Auditor.
  • Supervisor Civil, Electrical, I.T., Instrument, Steel Structural, Steel Fabrication & Erection (Structural)
  • Supervisor Hydro Test, Welding, Safety & Scaffolding & Project QC
  • Quantity System Engineer
  • Inspector QC Welding, QC Plant Coating, QC Civil, QC Structural, QC Mechanical (Piping & Rotary Equipments)
  • Inspector QC Telecom, QC HVAC System, QC Instrument, & Scaffolding
  • Superintendent (Mechanical)
  • Quantity Surveyor
  • Land Surveyor Estimator
  • Instrumentation
  • Mechanical, Civil, Electrical
  • Junior Quantity Surveyor
  • Instrument Foreman
  • Commissioning Technician
  • Material Expeditor / Material Man
  • Store Keeper
  • Secretary
  • Data Entry Operator
  • Filling Distribution/ Clerk
  • Time Keeper
  • Document Controller
  • Data Entry Operator (I.T.). for commissioning.
Attractive Salary + Free Food & Accommodation candidates should have Degree / DIP. / ITI min. 3 yrs Exp. & above in Petrochemical Oil & Gas Industry in preferred.
Please meet in person with Original Passport, 2 sets of Photographs, Exp. & Qualification Certificates to:
A.G. Enterprises 

B-8, Everest Bldg., 3rd Flr, Tardeo Rd., Mumbai - 34 
Tel.: 022-6662 1037 / 38. Fax: 022-2351 0534 


Govt. Regn. No. 000512/BOM/PART/1000+/3/218/84

Saturday, January 1, 2011

தொழுகையை விட்டவர் அல்லாஹ்வின் அருட்கொடையை தவற விட்டவராவார்...

ஏகஇறைவனின் திருப்பெயரால்....

2:45. பொறுமை, மற்றும் தொழுகையின் மூலம் உதவி தேடுங்கள்! பணிவுடையோரைத் தவிர (மற்றவர்களுக்கு) இது பாரமாகவே இருக்கும்


وَاسْتَعِينُواْ بِالصَّبْرِ وَالصَّلاَةِ وَإِنَّهَا لَكَبِيرَةٌ إِلاَّ عَلَى الْخَاشِعِينَ {45} 

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

கடந்த கட்டுரைகளில் தொழுகை சம்மந்தமான தகவல்களை அகிலம் அனைத்திற்கும் பொதுமறையான அருள்மறைக்குர்ஆனிலும், அகிலத்தார் அனைவருக்கும் அழகிய முன்மாதிரியாகிய அண்ணல் நபி(ஸல்) அவர்களின் அறிவுரைகளிலும் சிறிதைப் பார்த்தோம்.

பாங்கு சொல்வதற்கு பதில் அளிப்பது தொடங்கி தொழுகையை முடித்து பள்ளிவாசலை விட்டு வெளியேறும் வரை அவற்றில் ஓதப்படுகின்ற வாசகங்களில் அதிகமானவைகள் அல்லாஹ்வைப் புகழ்வதை விட தொழுவோரின் உலக - மறுமைத் தேவைகளுக்கான, பாவமன்னிப்புக்கான வாசகங்களே அடங்கி இருப்பதைப் பட்டியலிட்டோம். பாவமன்னிப்பு, மற்றும் உலக- மறுமை தேவைகளை அல்லாஹ்விடம் கோரிக்கை வைப்பதற்கு தொழுகை தான் சிறந்த தருனமாக அமைகிறது என்பதையும் பார்த்தோம்.

தொழுகையை விட்டவர் அல்லாஹ்வின் அருட்கொடையை தவற விட்டவராவார்.

தொழுகைக்கு வெளியில்(தொழாதவர்கள்) வைக்கும் கோரிக்கை இறைவனிடம் அறவே ஏற்றுக்கொள்ளப் படமாட்டாது என்பதை பெருமானார்(ஸல்) அவர்கள் திட்டவட்டமாகக் கூறிவிட்டார்கள். யார் ஒருவர் வேண்டுமென்றே தொழுகையை விட்டு விடுகிறாரோ அவர் அல்லாஹ்விடத்திலே  எதையும் அடைய இயலாது (இப்னுமாஜா)

ஒருவர் தன்னை ஈன்றெடுத்த தனது தந்தையுடன் கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறிப்போய் பொருளாதார உதவியை மட்டும் பிறர் மூலம் அவரிடம் கேட்டனுப்பினால் ? அவர் கூறும் பதில் முதலில் அவனை வீட்டுக்கு வரச்சொல்லுங்கள் என்பதாகத்தான் இருக்கும். இருக்க வேண்டும்.

மனம் வருந்தி மகன் தன் வீட்டுக்குள் வந்து விட்டால் அவனுக்குத் தேவையான அனைத்தையும் தந்தை செய்து கொடுப்பார், மறுக்க மாட்டார். மறுக்கக் கூடாது. 

மகனின் தேவை நிறைவேற்றப்பட வேண்டுமென்றால் மகன் வீட்டுக்குள் இருக்க வேண்டும் என்று  தந்தை விரும்புவது போல் இறைவன் தன்னுடைய அடியார்களில் தொழாதவர்களை, தொழுகையை விட்டவர்களை மீண்டும் தொழுகையின் மூலம் இஸ்லாத்திற்குள் அழைக்கிறான்.

மனம் வருந்தி மீண்டும் தொழுகையை ஆரம்பித்து அதில் பாவமன்னிப்புக் கோரி, உலக- மறுமைத் தேவைகளைக் கேட்டால் குறைவின்றி வழங்குவதாக இறைவன் வாக்களிக்கிறான்.

19:59. அவர்களுக்குப் பின்னர் வழித் தோன்றல்கள் வந்தனர். அவர்கள் தொழுகையைப் பாழாக்கினர். மனோ இச்சைகளைப் பின்பற்றினர். அவர்கள் நஷ்டத்தைச் சந்திப்பார்கள்.

19:60. திருந்தி நம்பிக்கை கொண்டு நல்லறம் செய்தவரைத் தவிர. அவர்கள் சொர்க்கத்தில் நுழைவார்கள். சிறிதளவும் அவர்கள் அநீதி இழைக்கப்பட மாட்டார்கள்.

இறைவனிடம் ஒப்புக்கொள்ளப்பட்ட மார்க்;கம் இஸ்லாம் தான் என்பதை நாம் அனைவரும் அறிந்து வைத்திருக்கிறோம் ளூpஓôல®Pஅ ருôழனடுஅ குரவுÕ டீஎஓôúரு.... 3:19. இறைவனிடம் ஒப்புக்கொள்ளப்பட்ட மார்க்;கமாகிய இஸ்லாத்தில் இருந்து கொண்டுதான் இறையருளை எதிர்பார்க்க வேண்டும்.

இஸ்லாமியராக இருக்க வேண்டுமென்றால் தொழுகையாளியாக இருக்க வேண்டும், தொழவில்லை என்றால் இஸ்லாத்திலிருந்து தாமாக வெளியேறக் கூடிய அபாயம் உருவாகும்.

30: 31, 32. அவனை நோக்கியே திரும்புங்கள்! அவனை அஞ்சுங்கள்! தொழுகையை நிலை நாட்டுங்கள்! தங்களது மார்க்கத்தைப் பிரித்து பல பிரிவுகளாகி விட்ட இணை கற்பித்தோரில் ஆகி விடாதீர்கள்! ஒவ்வொரு கூட்டத்தினரும் தம்மிடம் உள்ளதில் மகிழ்ச்சியடைகின்றனர்.

இணை வைத்தல் மற்றும் இறை மறுப்புக்கும் (முஸ்லிமான) அடியானுக்கும் இடையில் உள்ள வேறுபாடு தொழுகையை விடுவதாகும்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி) நூல்: முஸ்லிம் 116

தொழுகையை அலச்சியம் செய்துவிட்டு கோடி, கோடியாய் தர்மம் செய்வபர்களும் இஸ்லாத்திலிருந்து தாமாக வெளியNறி விடுவார்கள்.   

காரணம் கோடி, கோடியாக கொட்டிக் கொடுத்தாலும் அவைகள் இறைவனுக்கு சிரம் பணிவதற்கு நிகராகாது.   

ஏன் என்றால் ?

அவர் கொட்டும் கோடிகள் அவருக்கு இறைவன் வழங்கிய கோடான கோடிகளில் சில கோடிகள் தான். அவனுக்கு சிரம் பணியாமல் அவன் கொடுத்ததிலிருந்து சிறிதை, சிலதை எடுத்து வழங்கிவிட்டு தொழாமல் இருந்து விடுவதால் அவனது அருட்கொடையையும், பாவமன்னிப்பையும் அடைந்து கொள்ள முடியாது.

அப்துல்லாஹ்வாகவோ, அப்துல்ரஹ்மானாகவோ பெயரளவில் இருந்து கொண்டு அவ்லியாக்கள் மூலம் உதவிதேடும் பரேலவிகள் இஸ்லாத்திலிருந்து வெளியேறி விடுவதைப் போல் தொழுகையை அலச்சியம் செய்துவிட்டு நன்மையை, ஏவித் தீமையைத் தடுக்கும் ஏனைய அமல்களில் மட்டும் கவனம் செலுத்துவோரும் இஸ்லாத்திலிருந்து வெளியNறி விடுவார்கள்.

அதனால்தான் நோன்பு,ஜகாத்,ஹஜ், போன்ற அனைத்து கடமையான நற்செயல்களையும் அல்லாஹ்வின் அடிமை என்று பிரகடனப்படுத்தும் தொழுகைக்கு அடுத்தநிலைக்கு அல்லாஹ்வின் தூதர்(ஸல்)அவர்கள் கொண்டு வந்தார்கள்.

முதல் கோணல் முற்றும் கோணல்.

அல்லாஹ்வின் அருட்கொடையை வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டவர்களுக்கு கடமையாக்கப்பட்ட நற்செயல்களில் முதல் நற்செயல் தொழுகைதான்.

முதல் நற்செயல் அலச்சியம் செய்யப்பட்டுவிட்டால் அதற்கடுத்து வரும் நற்செயல்கள் நடைமுறைப்படுத்த முடியாத நிலை ஏற்படலாம். 

மறுமையில் மனிதனின் அமல்கள் பற்றி விசாரிக்கப்படும்போது தொழுகை என்ற அமல் முதலில் விசாரிக்கப்படும் அது சீராக அமைந்து விடுமேயானால் அதற்கடுத்த அனைத்து அமல்களும் சீராகவே அமைந்திருக்கும். தொழுகை என்ற அமல் சீராக இல்லை என்றால் அதற்கடுத்த அனைத்து அமல்களும் சீரற்றதாகவே இருக்கும் என்று நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹூரைரா(ரலி) அவர்கள். ஆதாரம்: ஸூனன் அபூதாவூத்.

தொழுகை முறையாக இருந்து அதற்கடுத்து வரும் கடமையான நற்செயல்களில் எதாதவது குறை இருந்தால் தொழுகையின் மூலம் குவியும் மலைப் போன்ற நன்மைகள் அவற்றை சரி செய்துவிடும்;

தொழுகை முறையாக இல்லாமல் அதற்கடுத்து வரும் நற்செயல்கள் மலைபோல் இருந்தாலும் அவைகள் தொழுகையின் குறையை சரி செய்ய முடியாது காரணம் அவைகள் இறைவனிடம் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.


9:54. அல்லாஹ்வையும், அவனது தூதரையும் மறுத்ததும், சோம்பலாகவே தொழுது வந்ததும், விருப்பமில்லாமல் (நல்வழியில்) செலவிட்டதுமே அவர்கள் செலவிட்டவை அவர்களிடமிருந்து ஏற்கப்படுவதற்குத் தடையாக இருக்கிறது.


ஆகவே இறைவனுக்கு சிரம் பணியாமல் இருந்துகொண்டு இறைவன் கொடுத்ததை மட்டும் வாரி இரைத்து நன்மையை அடையலாம் என்று நினைத்தாலும், இறைவனுக்கு சிரம் பணியாமல் இருந்து கொண்டு ஏனைய அமல்களில் மட்டும் ஈடுபட்டு நன்மையை அடையலாம் என்று நினைத்தாலும் அவைகள் விழலுக்கு இரைக்கும் நீர் போன்றதாகும்.

விழலுக்கு நீர் இரைப்பதால் எதையும் அறுவடை செய்து கொள்ள முடியாதோ அதேப்பேன்றே சிரம் பணியாதவரின் ஏனைய நற்செயல்களால் நன்மைகள் விளையாது.  

பொறுமையைத் தரும் தொழுகை.

மேற்காணும் துர்பாக்கிய நிலைக்கு தள்ளப்படாமல் இஸ்லாத்தில் நீடித்து நிலைக்க வேண்டுமானால் ? தொழுகையாளிகளாக இருக்கவேண்டும் தொழுகையின் மூலமே இறைவனிடம் உதவியும், பாவமன்னிப்பும் தேடவேண்டும். 2:45. பொறுமை, மற்றும் தொழுகையின் மூலம் உதவி தேடுங்கள்! பணிவுடையோரைத் தவிர (மற்றவர்களுக்கு) இது பாரமாகவே இருக்கும்

இறைவனை மறுக்கும் நாத்திகவாதிகளுக்குத் தான் தொழுகையும், பொறுமையும் கடினமாக இருக்கும் என்று அல்லாஹ் மேற்காணும் வசனத்தில் கூறுகிறான்.

இறைவன் இருக்கிறான் என்ற உறுதியான நம்பிக்கையில் உள்ளவர்கள் முஸ்லீம்கள் என்பதால்  அல்லாஹ் திருமறையில் பல இடங்களில் நம்பிக்கையாளர்களே ! என்று அழைக்கிறான். 

நம்பிக்கையாளர்கள் தொழவில்லை என்றால் மேற்காணும் மறுப்போர் நிலைக்கு தாமாக தள்ளப்பட்டுவிடுவார்கள். 

பொறுமை இல்லாதவர்களுக்கு பூமியே பாரமாகி விடுவதை நம் வாழ்க்கையில் பல சந்தர்ப்பங்களில் பார்த்திருக்கிறோம்.

தொழுகையாளிகள் தான் விதியின் அமைப்பை நினைத்து தங்களக்கு ஏற்படும் இன்னல்கள், இடர்பாடுகளை சகித்துக் கொள்வார்கள், தொழாதவர்கள் விதியை நொந்துகொண்டு தனக்குத்தானேக் கோரமான முடிவை அவசரப்பட்டு ஏற்படுத்திக் கொள்வார்கள் பொறுமை இல்லாதவர்களை பூமியே வெகு சீக்கிரம் துப்பி வெளியேத் தள்ளிவிடும்.

தொழாமல், அல்லது தொழுகையை இடையில் விட்டு இஸ்லாத்திலிருந்து வெளியேறி இருந்தால் தாமதிக்காமல் தொழுகையின் மூலம் இஸ்லாத்திற்குள் மீண்டும் நுழைந்து கொண்டு அல்லாஹ்விடம் பாவமன்னிப்பும், உலக – மறுமைத் தேவைகளை கோரும் பாக்கியசாலிகளாக ஆகிவிடுவதற்கு வல்ல அல்லாஹ் நம் அனைவரையும் ஆக்கி அருள் புரிவானாக !
وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ


3:104. நன்மையை ஏவி தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....



Govindakudi Mosque

zakat calculator