Wednesday, August 4, 2010

ரமலானின் சிறப்புகள்

ஒவ்வொரு வருடத்திலும் அல்லாஹூ தஆலா பல விஷேச தினங்களை ஏற்படுத்தி அவற்றில் செய்யும் நல்அமல்களுக்கு பன் மடங்கு நன்மைகளைத் தருகின்றான். அப்படிப்பட்ட நாட்களைக் கொண்டதுதான் ரமலான் மாதமும் இதில் செய்யும் நன்மைகளுக்கு அதிக கூலிகள் கொடுக்கப்படுகின்றன.


மற்ற மாதங்களில் செய்யும் அமல்களைவிட இம்மாதத்தில் நபி (ஸல்) அவர்கள் அதிகமான அமல்களைச் செய்வார்கள். இம்மாதத்தில் ஷைத்தான்களுக்கு விலங்கிடப்படுகின்றது. அல்லாஹ்வின் அருள் இறங்குகின்றது. நரகத்திலிருந்து விடுதலை கிடைக்கின்றது. அல்லாஹ் பாவங்களை மன்னிக்கின்றான்.

யார் இம்மாதத்திலும் அல்லாஹ்விடம் பிழை பொறுப்புத் தேடவில்லையோ அவன் நாசமாகட்டும்‘’ என ஜிப்ரயீல் (அலை) அவர்கள் பிரார்த்தனை செய்தார்கள். நபி (ஸல்) அவர்கள் அதற்கு ஆமின் சொன்னார்கள்.இன்னும் யார் இம்மாதத்தின் நன்மையை இழந்தானோ அவன் எல்லா நன்மைகளையும் இழந்தவனாவான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆகவே யாரெல்லாம் இம்மாதத்தை அடைந்தீர்களோ இதை ஒரு பெரும் பாக்கியமாகக் கருதி நன்மைகளை அதிகம் செய்யுங்கள்! இன்னும் செய்த தவறுகளுக்காக பாவ மன்னிப்பும் தேடுங்கள் அல்லாஹ் நம் அனைவரையும் அவனின் அருளையும் பாவ மன்னிப்பையும் நரக விடுதலையையும் பெற்றவர்களாக ஆக்குவானாக!


 இறையோனின் மாதமாக ரஜபும், கண்மணி நாயகத்தின் மாதமாக ஷஃபானும் என் உம்மத்தினர்களின் மாதமாக ரமலானும், என் உம்மத்தினர்களின்
இந்த‌ மாத்தில் வைக்கும் நேன்பு மற்ற மாதங்களில் வைக்கும் நோன்பை விட சிறந்தது. ஏனெனில் இந்த மாதத்தில் தான் திருக்குரான் இறக்கப்பட்ட மாதம்மாகும், மேலும் இந்த மாதத்தில் நபிமார்களுக்கும், ஸீஹ்புகளும் இறக்கப்பட்ட மாதமாகும். இது தான் வல்ல இறையோனின் மாதமாக ரஜபும், கண்மணி நாயகத்தின் மாதமாக ஷஃபானும் என் உம்மத்தினர்களின் மாதமாக ரமலானும் இருக்கிறது என்று நபிகள் நாயகம் (ஸ்ல) அவர்கள் கூறுகிறார்கள்.

இந்த மாதத்தில் எவர் ஓருவர் இறைவனின் நன்மையினை நாடி நோன்பு வைக்கிறானோ அவர்களுடைய முந்தைய அனைத்து பாவங்களும் இறைவனால் மன்னிக்கப்படும் என்று நபி ஸ்ல்லாஹீ அலைஹிவசலாம் கூறுகிறார்கள். ரமலான் மாதத்தின் முதல் இரவிலேயே ஷைத்தான்களுக்கும் கெட்ட ஜீவன்களுக்கும் விலங்கிடப்படும். நரகத்தின் கதவுகள் மூடப்படும். அதில் ஒரு கதவும் திறந்திருக்காது. சுவர்க்கத்தின் கதவுகள் திறக்கப்படும் அதில் ஒரு கதவும் மூடப்பட்டிருக்காது. இன்னும் ஒரு இறை அழைப்பாளர் ‘’நன்மை செய்பவர்களே! முன் வாருங்கள் பாவம் செய்பவர்களே நிறுத்திக் கொள்ளுங்கள்!’’ என்று உரக்கச் சொல்வார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.


அல்லாஹ் மனிதனைப் படைத்து அவன், தான் விரும்புவது போல் வாழ்ந்துக் கொள்ள விட்டுவிடாமல் வாழ்க்கை நெறியை வேதங்களின் மூலமும் தூதர்களின் மூலமும் வகுத்துக் கொடுத்தான். இந்த அடிப்படையில் மனித சமுதாயத்திற்கு இறுதி வேதமாக அல்குர்ஆனையும் இறுதித் தூதராக முஹம்மது(ஸல்) அவர்களையும் அனுப்பியுள்ளான். எனவே நமது வாழ்க்கையை மன இச்சைப்படி அமைத்துக் கொள்ளாமல் அல்குர்ஆனும் நபிமொழியும் காட்டித்தரும் நெறியிலேயே அமைத்துக் கொள்ள வேண்டும். இதுவே முஸ்லிமின் உயரிய பண்பும் குர்ஆன் மற்றும் ஹதீஸின் எதிர்பார்ப்புமாகும். மார்க்கத்தின் இவ்விரு அங்கங்களில் முதலிடம் பெறுவது அல்குர்ஆன் ஆகும்.


நோன்பு வைப்பது மூலம் நமது உடல் தூய்மையாகிறது, ஆன்மா தூய்மையாகிறது.ரமலான் மாதத்தில் செய்கின்ற வணக்கங்களுக்கு எண்ணற்ற நன்மைகளை அல்லாஹ் தருகிறான்.எவர் ஒருவர் ரமலானில் ஜமா அத்துடன் நிரந்தரமாக தொழுதால் அவனுக்கு அல்லாஹ் ஓளியினால் ஆன பட்டணத்தை கொடுக்கிறான்.தன் பெறோர்களுக்கு நன்மைகள் செய்கிறானோ அவர்களை அல்லாஹ் கிருபை கண்கொண்டு பார்பான்.

எந்த பெண் இம்மாத்தில் தன்னுடைய கணவனின் திருப்தியை பெற்றுக்கொள்கிறாளோ அப்பெண்மணிகளுக்கு மர்யம்(அலை) ஆசியா நாயகி அவர்களின் தாவாப் அல்லாஹ்விடத்தில் கிடைக்கும்.


ஏழைகளுக்கும், அனாதைகளுக்கும் அவர்களின் தேவைகளுக்கு உதவி செய்பவனுக்கு அல்லாஹ் அவனின் தேவைகளை நிறைவேற்றி தருவான்.

ஏவ‌றேனும் ஒருவர் நோன்பு திறக்க வைத்தால் மலக்கு மார்கள் அவர்களுக்காக இந்த மாதம் முழுவதும் இரவில் மன்னிப்பு தேடுவார்கள்.

லைலத்துல் கதிர்‍ன் நாளை அறிந்து கொள்ள நோன்பின் கடைசி 10ன் இரவுகளில் அதிகமாக இறைவனை நினைத்து அமல்கள் செய்யுங்கள். லைலத்துல் கதிர் இரவில் பல மலக்குமார்கள் இறங்குவார்கள். ஓவ்வொரு படைப்புகள் மீதும் அல்லாஹ்வை சுஜீது செய்து கொண்டிருக்கும். இந்த நாளில் நாமும் அதிகமாக தொழுது,பாவ மன்னிப்புகள் அழுது மனமுறுகி கேட்டு திக்ரு செய்து இறைவனின் நன்மைகளை அடைவோம். அனைவருக்கும் தூவா செய்யவும்.

அன்பு நண்பர்களே இந்த புனித மிகுந்த ரமலானின் பொருட்டால் அனைவருடைய ஹலாலான நாட்டங்களை அல்லாஹ் நிறைவேற்றி ஈருலக நன்மையினை கிடைக்க செய்வானாகவும் ஆமீன்


 ரமலான் மாதத்தின் சிறப்புகள்:
நரகத்தின் கதவுகள் மூடப்படும். அதில் ஒரு கதவும் திறந்திருக்காது.(திர்மிதீ)


சுவர்க்கத்தின் கதவுகள் திறக்கப்படும், அதில் ஒரு கதவும் மூடப்பட்டிருக்காது. (திர்மிதீ)

ரமளான் (மாதம்) வந்துவிட்டால் அருள்களின் வாசல்கள் திறக்கப்படுகின்றன.(நஸயீ)

ரமளான் மாதத்தின் முதல் இரவிலேயே ஷைத்தான்களுக்கும் கெட்ட ஜின்களுக்கும் விலங்கிடப்படும்.(திர்மிதீ)

ஒரு இறை அழைப்பாளர் “நன்மை செய்பவர்களே! முன் வாருங்கள், பாவம் செய்பவர்களே! நிறுத்திக் கொள்ளுங்கள்!” என்று உரக்கச் சொல்வார். (திர்மிதீ)

அல்லாஹ்வை ஈமான் கொண்டவராகவும், நன்மையை எதிர்பார்த்தவராகவும் ரமளான் மாதத்தில் யார் நோன்பு நோற்கின்றாரோ அவரின் முன் சென்ற பாவங்கள் மன்னிக்கப்படும்.(புகாரி)

நோன்பு மாதத்தில் உம்ராச் செய்வது ஹஜ் செய்வதற்குச் சமமாகும். (நஸயீ)

ஆயிரம் மாதங்களை விட மகத்துவமிக்க  இரவு (லைலத்துல் கத்ர்) இம்மாதத்தில் தான் இருக்கிறது.

ரமலானின் கடைசி இரவில் நோன்பாளிகளுக்கு மன்னிப்பு வழங்கப்படுகின்றது

ரமலானின் ஒவ்வொரு இரவிலும் அல்லாஹ் நரகிலிருந்து சிலரை விடுதலை செய்கின்றான். (இப்னுமாஜா)

புனிதமிக்க அல்-குர்ஆன் ரமலானில் தான் இறக்கியருளப்பட்டது. (2:185)



 நோன்பு நோற்பதன் சிறப்புகள்

நோன்பு கெட்ட செயல்களில் இருந்து பாதுகாக்கும் (புகாரி)
நோன்பு நரகத்திலிருந்து பாதுகாக்கும் ஒரு கேடயமாகும். (அஹ்மத்)

நோன்பு சுவர்கத்திற்குள் நுழைவதற்கு காரனமான அமலாக இருக்கிறது
நோன்பு அல்லாஹ்விடத்தில் பரிந்துரை செய்யும்

நோன்பாளிகள் மட்டுமே ரய்யான் என்னும் வாசல் வழியாக சுவனத்திற்குள் பிரவேசிப்பார்கள் (புகாரி)
நோன்புக்குரிய கூலியை அல்லாஹ்வே கொடுக்கின்றான். (திர்மிதி)

நோன்பு தக்வாவுக்கு (அல்லாஹ்வை பயப்படுவதற்கு) முக்கிய காரணமாக அமைகின்றது. (2:183)

நோன்பாளியின் வாய்வாடை அல்லாஹ்விடத்தில் கஸ்தூரி வாடையை விட மிக நறுமணமுள்ளது. (புகாரி)

நோன்பாளிகள் நோன்பு திறக்கும் வரை அவருக்காக மலக்குகள் பாவமன்னிப்பு தேடுகின்றனர்.

நோன்பாளிகளின் பிரார்த்தனைகள் அல்லாஹ்வால் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. (பைஹகி)

 நோன்பு யாருக்கு கடமை?

 புத்தி சுவாதீனமுள்ள, பருவமடைந்த, ஊரில் இருக்கக்கூடிய நோன்பு நோற்க சக்தியுள்ள ஒவ்வொரு முஸ்லிமான ஆண், பெண் அனைவருக்கும் நோன்பு நோற்பது கடமையாகும்.

நோன்பை விட்டுவிட சலுகைகளையுடையவர்கள்:

தற்காலிக நோயாளி (குணமாக கூடிய நோயாளி): நோன்பு நோற்பது இவருக்கு சிரமமாக இருந்தால் இவருக்கு நோன்பை விட்டுவிட சலுகை இருக்கிறது. ஆயினும் விடுபட்ட நோன்பை பின்னர் நோற்க வேண்டும்.

நிரந்தர நோயாளி: நோய் குணமாகாது என்ற அளவிற்கு நிரந்தர நோயாளியாக இருப்பவர் நோன்பு நோற்பது கட்டாயமில்லை. ஆயினும் அவர் அதற்கு பகரமாக ஒவ்வொரு நாளும் ஒரு ஏழைக்கு உணவளிக்க வேண்டும்.

பயணி: பயணிகளுக்கு அவர் தன் ஊருக்கு திரும்பி வரும்வரை நோன்பை விட்டுவிட சலுகையிருக்கிறது. பிரயாணி தன் பிரயாணத்தை முடித்துக் கொண்டதும் விட்ட நோன்புகளை நோற்க வேண்டும்

கர்ப்பிணிப்பெண் மற்றும் பாலூட்டும் தாய்: இவர்கள் நோன்பு நோற்பதினால் தனக்கோ அல்லது குழந்தைக்கோ ஏதும் ஆபத்து ஏற்படுமென்று பயந்தால் நோன்பை விட்டுவிடலாம், இவர்கள் குழந்தையை பெற்றெடுத்ததற்கு பிறகு அல்லது பாலூட்டியதற்கு பிறகு விடுபட்ட நோன்புகளை நோற்க வேண்டும்.

நோன்பு நோற்க இயலாத முதியவர்கள்: இவர்களுக்கு நோன்பை விடுவதற்று அனுமதி உண்டு. இவர்கள் ஒரு நாளைக்கு ஒரு ஏழைக்கு வீதம் உணவளிக்க வேண்டும். அல்லாஹ் நன்கறிந்தவன்.


 “ரமளான் மாதம் வந்துவிட்டால் சொர்க்கத்தின் கதவுகள் திறக்கப்படுகின்றன. நகரத்தின் கதவுகள் மூடப்பட்டு விடுகின்றன. ஷைத்தான்களுக்கு விலங்கிடப்படுகிறது” என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), புகாரி)


ரமளான் மாதத்தின் முதல் இரவிலேயே ஷைத்தான்களுக்கும் கெட்ட ஜின்களுக்கும் விலங்கிடப்படும். நரகத்தின் கதவுகள் மூடப்படும். அதில் ஒரு கதவும் திறந்திருக்காது. சுவர்க்கத்தின் கதவுகள் திறக்கப்படும், அதில் ஒரு கதவும் மூடப்பட்டிருக்காது. இன்னும் ஒரு இறை அழைப்பாளர் “நன்மை செய்பவர்களே! முன் வாருங்கள், பாவம் செய்பவர்களே! நிறுத்திக் கொள்ளுங்கள்!” என்று உரக்கச் சொல்வார் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: திர்மிதீ, இப்னுமாஜா)

 பிறையைக் கண்டே நோன்பு நோறுங்கள், நோன்பை விடவும் செய்யுங்கள். மேகம்(பிறையை) மறைத்துவிட்டால் ஷஃபான் மாதத்தை முப்பது நாட்களாகக் கணக்கிட்டுக் கொள்ளுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)


“ரமளான் மாதத்தை விட ஒரு நாள் அல்லது இரண்டு நாளைக்கு முன்னால் உங்களில் யாரும்(சுன்னத்தான) நோன்பு நோற்கக்கூடாது. வழமையாக அந்த நாளில் நோன்பு நோற்பவர் நோற்றுக் கொள்ளட்டும்” என நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள். (புகாரி)


 நோன்பை முறிக்கும் விஷயங்கள்:

உடலுறவில் ஈடுபடுதல்

சாப்பிடுவது, குடிப்பது

மாதவிடாய் ஏற்படுதல்

பிரசவ கால இரத்தம் வெளியேறுதல்

வேண்டுமென்றே வாந்தியெடுப்பது

முத்தமிடுதல், சுய இன்பம் போன்றவற்றின் மூலம் இந்திரியம் வெளிப்படுத்துவது

நரம்பு வழியாக சத்தூசி போன்றவற்றை உட்கொள்ளுதல்

இரத்ததானம் போன்றவற்றிக்காக இரத்தம் வெளியேற்றுதல்


 நோன்பை முறிக்காத செயல்கள்:

வேண்டுமென்று என்றில்லாமல் மறதியாக சாப்பிடுவது, குடிப்பது

கணவின் மூலம் விந்துவெளிப்படுதல்

இரத்தப் பரிசோதனைக்காக குறைவான இரத்தம் எடுத்தல்

சுயவிருப்பமின்றி காயம், பல் பிடுங்குதல் மற்றும் மூக்கிலிருந்து இரத்தம் தானாக வெளியாகுதல் (மேற்கண்டவைகளை மறதியானால் அல்லாமல் வேண்டுமென்றே செய்தால் நோன்பு முறிந்துவிடும்.)

குளித்தல், நீந்துதல்

வெப்பத்தைத் தனித்துக்கொள்வதற்காக தண்ணீரை உடலில் தெளித்துக்கொள்வது

பல் துலக்குதல் (விரும்பத்தக்கது)

வாய் வழியாக உட்கொள்ளாத வகையில் வைத்தியம் செய்துகொள்வது (உ.ம். ஊசி போடுவது, கண், மூக்கு, காது ஆகியவற்றிக்கு சொட்டு மருந்து இடுதல்)

வயிற்றுக்குள் சென்றுவிடாத வகையில் உணவை ருசிபார்ப்பது

வாய்கொப்பளிப்பது

வயிற்றினுள் தண்ணீர் சென்றுவிடாத வகையில் பக்குவமாக நாசிக்கு தண்ணீர் செலுத்துவது.

வாசனைப் பொருட்களை உபயோகிப்பது, அவற்றை நுகர்வது

நேரம் தெரியாது, சூரியன் மறைந்துவிட்டதாக எண்ணி, சூரியன் மறைவதற்கு முன்னரோ, அல்லது பஜ்ரு நேரம் வரவில்லை என்று எண்ணி, பஜ்ர் நேரம் வந்ததற்குப் பின்னரோ, சாப்பிட்டு விட்டால் நோன்பு முறியாது. எனினும் சரியான நேரத்தை தெரிந்து விட்டால், உடனே உணவை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

கண்ணுக்கு சுருமா இடுதல்

 நோன்பின் சுன்னத்துக்கள்

 ஸஹர் செய்தல் , விரைந்து நோன்பு துறத்தல் , துஆச் செய்தல்

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் ‘ஸஹர் செய்யுங்கள்; ஏனெனில் ஸஹர் உணவில் பரக்கத் உள்ளது’ (புகாரி, முஸ்லிம்)

இரவின் கடைசி வரை ஸஹர் செய்வதை பிற்படுத்துவது சுன்னத்தாகும்.

பர்ளான நோன்பு நோற்கும் விசயத்தில் பஜ்ர் உதயமாவதற்கு முன் நோன்பிற்குரிய நிய்யத்தை வைத்துக்கொள்வது கடமையாகும்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ‘யார் நோன்பு நோற்க பஜ்ருக்கு முன்னால் நிய்யத்தை சேர்த்து வைக்கவில்லையோ அவரது நோன்பு கூடாது’ (அறிவிப்பவர் : ஹஃப்ஸா (ரலி), ஆதாரம் : அபூதாவுது, திர்மிதி, நஸயீ)




நிய்யத் (எண்ணம்) வைப்பது உள்ளத்தில் தான்! வாயால் அல்ல!



நோன்பாளிகள் தவிர்ந்துக்கொள்ள வேண்டியவை

யார் கெட்ட, பொய் பேச்சுக்களையும், அதை செயல்படுத்துவதையும் விட்டுவிடவில்லையோ அவன் நோன்பு நோற்று அவனது சாப்பாட்டையும் குடிப்பையும் விட்டு பசியில் இருப்பதனால் அல்லாஹ்வுக்கு எந்த தேவையும் இல்லை!’ (புகாரி)


 “நோன்பாளி நோன்பு திறக்கும் நேரத்தில் கேட்கும் துஆ மறுக்கப்படமாட்டாது” (இப்னுமாஜா)


 கனிந்த பேரித்தம் பழம் மூலம் நோன்பு திறப்பது சுன்னத் ஆகும். அது கிடைக்காவிடில் காய்ந்த பேரீத்தம் மூலமும் அதுவும் கிடைக்காவிடில் தண்ணீர் மூலமும் அதுவும் கிடைக்காவிடில் கிடைப்பதைக்கொண்டு நோன்பு திறப்பது சுன்னத்தாகும்.

எவர் ரமலான் இரவில் ஈமானுடனும் நற்கூலி கிடைக்கும் என்ற எண்ணத்துடனும் நின்று வணங்குகிறாரோ அவரது முன் சென்ற பாவங்கள் அவருக்கு மன்னிக்கப்படுகின்றன’ என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (புகாரி, முஸ்லிம்)

No comments:

Post a Comment

Govindakudi Mosque

zakat calculator