Wednesday, April 14, 2010

குறைந்த செலவில் MBA/ MCA/ M.E/ M.Tech படிக்க

குறைந்த செலவில் MBA/ MCA/ M.E/ M.Tech படிக்க அண்ணா பல்கலை கழகம் நடத்தும் நுழைவு தேர்வு
செய்தி வெளியிடப்பட்ட நாள் Friday, April 9, 2010, 11:24
கல்வி வழிகாட்டி

தமிழகத்தில் உள்ள அரசு கல்லூரிகள், அரசு உதவி பெறும் கல்லூரிகள், தனியார் கல்லூரிகளில் MBA/ MCA/ M.E/ M.Tech/ M.Arch./ M.Plan படிக்க அண்ணா பல்கலை கழகம் வருடம் தோறும் TANCET என்ற நுழைவு தேர்வை நடத்துகின்றது. இந்த தேர்வை எழுதி நல்ல மதிப்பெண் எடுப்பதின் மூலம் மிக குறைந்த கட்டணத்தில் MBA/ MCA/ M.E/ M.Tech படிக்கலாம் . இதில் முஸ்லீம்களுக்கு 3.5% இட ஒதுத்கீடு உள்ளது.

பொதுவாக MBA/ MCA/ M.E/ M.Tech படிக்க கல்லூரிகளில் லட்ச கணக்கில் பணம் கேப்பார்கள். ஆனால் இந்த தேர்வை எழுதி அரசு நடத்தும் Counseling மூலம் கல்லூரிகளில் சேறும் போது சில ஆயிரங்களில் படிப்பை முடித்துவிடலாம். (அண்ணா பல்கலை கழகத்தில் M.E/ M.Tech படிக்க வருடத்திற்க்கு 22 ஆயிரம் ரூபாய் மட்டுமே).

பெரும்பாலும் மாணவர்கள் படிப்பை முடித்தவுடனே MBA/ MCA/ M.E/ M.Tech படிக்க வேண்டும் என பெற்றோர்களிடம் சொல்வார்கள். இதற்க்கு பல லட்சம் செலவாகும். எனவே பெற்றோர்கள் மாணவர்களிடம் இந்த TANCET நுழைவு தேர்வை எழுதுமாறு வழியுறுத்துங்கள், இந்த தேர்வை எழுதி தேர்சி பெறுமாரு கூறுங்கள். இந்த மூலம் உங்களின் பல லட்ச ரூபாய் மிச்சமாகும். நல்ல கல்லூரியில் படிப்பதன் மூலம் நல்ல சம்பளத்தில் நல்ல வேலையும் கிடைக்கும்.

தேர்வை பற்றிய முழுவிபரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. மேலதிக விளக்கத்திற்க்கு இந்த www.annauniv.edu/tancet2010 இணைய தளத்தை பாருங்கள்.

1 comment:

Govindakudi Mosque

zakat calculator