Sunday, July 31, 2011

புனித ரமளானை வரவேற்போம்!

அல்லாஹ்வின் திருப்பெயரால்...

"இறைநம்பிக்கையாளர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது கடமையாக்கப்பட்டுள்ளது போல் உங்கள் மீதும் நோன்பு கடமையாக்கப் பட்டிருக்கிறது. (அதன் மூலம்) நீங்கள் இறையச்சம் பெறவேண்டும் என்பதற்காக!" ( அல்குர்ஆன் 2:183)

நபி (ஸல்) கூறினார்கள்:
இதோ! ரமழான் மாதம் உங்களிடம் வந்துவிட்டது. அம்மாதத்தில் நோன்பு நோற்பதை இறைவன் உங்கள் மீது கடமையாக்கியுள்ளான். இம்மாதத்தில் ஓர் இரவு உண்டு. அது ஆயிரம் மாதங்களை விட மேலானது. அந்த இரவில் பாக்கியம் பெறாதவர் ஒட்டு மொத்த பாக்கியத்தையும் இழந்தவராவார். (நஸயீ)

ரமழானின் சிறப்பு
இறைவன் ரமழானுக்கென்று சில சிறப்புகளை வழங்கியுள்ளான் அவற்றுள் சில:
  •   இம்மாதத்தில் தான் திருக்குர்ஆன் அருளப்பட்டது,
  •  ஷைத்தான்களின் சூழ்ச்சிகள் கட்டுப்படுத்தப்படுகிறது. இதன் மூலம்   நன்மைகளை பெருக்கிக்கொள்ள வாய்ப்பு கிடைக்கிறது.
  • - ஆயிரம் மாதங்களைவிட மேலான இரவு இம்மாதத்தில்தான் உள்ளது. எனவே
  • குறைந்த வழிபாடுகளை செய்து நிறைந்த நன்மைகளை அடைய முடிகிறது,
  • - நோன்பாளியின் வாயிலிருந்து வரும் வாடை இறைவனிடம் கஸ்தூரியை விட அதிக
  • மணமுடையது,
  • - இம்மாதத்தில் நோற்கும் நோன்பு 700 மடங்குக்கும் அதிகமாக கணக்கிலடங்காத நன்மைகளை வாரித்தருகிறது.
  • மேற்கண்ட அனைத்தும் குர்ஆன், சுன்னா ஆதாரங்களிலிருந்து தெரியவரும் உண்மைகளாகும்
ரமழானில் அமல்கள்
ரமழானில் செய்ய வேண்டிய சில முக்கிய அமல்கள் பின்வருமாறு:
1. தூய்மையான நோன்பு

"இறை நம்பிக்கையுடன் நன்மையைக் கருதி ரமழானில் நோன்பு நோற்பவரின் முந்திய பாவங்கள் மன்னிக்கப்படுகிறது." (புகாரி, முஸ்லிம்)
வெறுமெனே உண்ணாமல், பருகாமல் இருப்பதன் மூலம் மட்டும் இந்ந நன்மையை ஒரு நோன்பாளி அடைந்து விட முடியாது. ஏனெனில் நபி(ஸல்) கூறினார்கள்:

"பொய் பேசுவதையும் அதன் அடிப்படையில் செயல்படுவதையும் ஒரு நோன்பாளி தவிர்த்துக் கொள்ளவில்லையெனில் அவர் பசித்திருப்பதிலும், தாகித்திருப்பதிலும் இறைவனக்கு எந்தத் தேவையுமில்லை." (புகாரி)
"நோன்பு ஒரு கேடையமாகும். எனவே உங்களில் நோன்பிருப்பவர் தீய வார்த்தைகளை பேசக்கூடாது, பாவச்செயல்கள் செய்யக்கூடாது. முட்டாள்தனமாக நடக்கக்கூடாது. யாரேனும் அவரை திட்டினால் "நான் ஒரு நோன்பாளி' என்பதை மட்டுமே பதிலாகக் கூறவேண்டும். (புகாரி, முஸ்லிம்)

2. இரவு நேரத் தொழுகை

நபி (ஸல்) கூறினார்கள்:
"இறை நம்பிக்கையுடன் நன்மையைக்கருதி ரமழானில் இரவு நேரத் தொழுகையை நிறைவேற்றுபவரின் முந்திய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன" (புகாரி, முஸ்லிம்)
இரவு நேரத்தொழுகை ரமழானல்லாத காலங்களிலும் செய்யப்படும் வழிபாடாக இருந்தாலும் ரமழானில் அது அதிக முக்கியத்துவத்தைப் பெறுகிறது.
"ரமழானிலும் ரமழானல்லாத காலங்களிலும் இரவுத்தொழுகையை நபி(ஸல்) அவர்கள் 11 ரக்அத்களுக்கு மேல் தொழுததேயில்லை" என ஆயிஷா(ரலி) அறிவிக்கிறார்கள். (புகாரி)

3. தருமம்
 
"நபி (ஸல்) அவர்கள் காற்றைவிட வேகமாக ரமழானில் தருமம் செய்பவர்களாக இருந்துள்ளார்கள். மேலும் ரமழானில் நிறைவேற்றப்படும் தருமமே மேலான தருமம்" என்று கூறினார்கள். (திர்மிதி)
தருமத்தை பணமாகவோ அல்லது உணவாகவோ தரலாம். நோன்பாளிகளுக்கு இஃப்தார் உணவளிப்பதும் இதில் அடங்கும்.
"நோன்பாளிகளுக்கு இஃப்தார் உணவளித்தால் நோன்பாளிகளுக்கு கிடைக்கும் நன்மையைப் போல உணவளிப்பவருக்கும் கிடைக்கும்' என நபி(ஸல்) கூறியுள்ளார்கள் (அஹ்மத்)

4. குர்ஆன் ஓதுதல்

ரமழான் குர்ஆன் இறங்கிய மாதமாதலால் இதில் குர்ஆனை அதிகமாக ஓதுவதும் அதன் பொருளுணர்ந்து சிந்திப்பதும், செயல்படுத்துவதும் மிகவும் அவசியமானதாகும். ஒவ்வொரு ரமழானிலும் ஜிப்ரீல் (அலை) வந்து நபி (ஸல்) அவர்களிடம் குர்ஆனை படித்துக் காண்பிப்பார்கள். இது குர்ஆனுக்கும் ரமழானுக்குமுள்ள தொடர்பை மேலும் உறுதிப்படுத்துகிறது.

5.இஃதிகாஃப்

நபி(ஸல்) ஒவ்வொரு ரமழானிலும் கடைசிப் பத்து நாட்கள் பள்ளிவாசலில் இஃதிகாஃப் (தங்கி வழிபடுதல்) செய்துள்ளார்கள்.
இந்த வழிபாடு ஆண், பெண் இருபாலாருக்கும் பொதுவானதாகும். எனவே இருபாலாருமே இதில் அதிக ஆர்வம் காட்ட வேண்டும்.

6. உம்ரா
 
"ரமழானில் நிறைவேற்றப்படும் உம்ரா ஹஜ்ஜுக்கு நிகராகும்' என்று நபி(ஸல்) கூறியுள்ளார்கள்.
(புகாரி, முஸ்லிம்)

7. லைலத்துல் கத்ரை அடைய முயற்சிப்பது

லைலத்துல் கத்ரின் சிறப்பு மேலே கூறப்பட்டுள்ளது. அது பிந்திய பத்து இரவுகளில் ஒற்றைப்படையான இரவில் இருப்பதாக நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். எனவே ரமழானின் பிந்திய 10 நாட்களில் அதிக வழிபாடுகள் செய்து அந்த பாக்கியத்தை அடைய முயற்சிக்க வேண்டும். இஃதிகாஃப் இருப்பது இதற்கு சிறந்த வழியாகும்.

8. பாவமன்னிப்புக் கோருதல்

"நோன்பு திறக்கும் நேரத்தில் கேட்கப்படும் துஆ நிராகரிக்கப்படமாட்டாது' என நபி(ஸல்) கூறியுள்ளார்கள். மேலும் ஸஹர் நேரத்தில் பாவமன்னிப்புக்கோருதல் திருக்குர்ஆனிலும் ஹதீஸிலும் வலியுறுத்திக்கூறப்பட்டுள்ளது. (பார்க்க அல்குர்ஆன் 51:18)
எனவே இந்த நல்ல நேரங்களில் இஸ்திஃபார்களையும், துஆக்களையும் அதிகப்படுத்த வேண்டும். ஸஹர் நேரத்தில் டி.வி. சானல்களில் மூழ்கியிருப்பதை விட இதுவே மேலானது என்பதை சிந்திக்க வேண்டும்.

அனுமதிக்கப்பட்டவை
நோன்பாளிகளுக்கு கீழ்கண்டவை குர்ஆன் சுன்னா அடிப்படையில் அனுமதிக்கப்பட்டவையாகும். இவற்றை மறுக்கும் உரிமை எவருக்கும் இல்லை.
  • -குளிப்பு கடமையான நிலையில் நோன்பு நோற்கலாம்.
  • நபி(ஸல்) அவர்கள் (ரமலான் இரவுகளில்) உடலுறவு கொண்ட பின் அதிகாலையில் குளிப்பு கடமையானவர்களாகவே ரமலான் நோன்பை நோற்பார்கள் என ஆயிஷா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (புகாரி, முஸ்லிம்)
  • - பல்துலக்குவதில் ரமழான், ரமழானல்லாத காலம் என நபி(ஸல்) அவர்கள் வேறுபடுத்திக் கூறவில்லையென்பதால் ரமழான் காலங்களில் நன்கு பல்துலக்குவதில் தவறேதுமில்லை.
  • - உளுவின் போது வாய்க்கொப்பளிப்பதிலும் நாசிக்கு தண்ணீர் செலுத்துவதிலும் தண்ணீர் உள்ளே சென்றுவிடாத வகையில் எச்சரிக்கையாக இருப்பது அவசியமாகும். (பார்க்க : அபூதாவூத்)
  • - எல்லை தாண்டாத அளவிற்கு சுயக்கட்டுப்பாடு உள்ளவர் நோன்பு நேரத்தில் மனைவியை அணைப்பதும் முத்தமிடுவதும் கூடும். (பார்க்க : அஹ்மத்)
  • - இரத்ததானம் செய்தல், ஊசி வழியாக உடம்பில் மருந்து செலுத்துதல், கண், காதுக்கு சொட்டு மருந்து விடுதல், எச்சில் விழுங்குதல், தொண்டைக்குழிக்குள் சென்றுவிடாத வகையில் உணவை ருசிபார்த்தல், வாந்தி எடுத்தல், பகல் வேளையில் குளித்தல், தலைவலி போன்றவற்றிற்கு களிம்பு தடவிக்
  • கொள்ளுதல், வாசனை திரவியங்கள் பூசுதல், நகம் களைதல், முடி வெட்டுதல், ஸ்கலிதம் ஏற்படுதல் ஆகிய எவையும் நோன்பை முறிக்கும் என்பதற்கு எந்த சரியான ஆதாரமும் இல்லை.
அனுமதிக்கப்படாதவை
  • - உண்ணுதல், பருகுதல், உடலுறவுக்கொள்ளுதல் ஆகிய மூன்றும் நோன்பை முறிக்கின்ற செயல்களாகும். (பார்க்க அல்குர்ஆன் 2:187)
  • எனவே இவற்றை ரமலானின் பகல் வேளையில் நோன்பாளிகள் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். எனினும் ஒரு நோன்பாளி மறந்து உண்பதாலோ, பருகுவதாலே அவரது நோன்பு முறிந்து விடாது. தொடர்ந்து நோன்பை நிறைவு செய்ய வேண்டும். (ஆதாரம் : புகாரி முஸ்லிம்)
  • - இவற்றில் ஏதேனும் ஒன்றை ஒருவர் வேண்டுமென்றே செய்து நோன்பை முறித்துவிட்டால் அதற்கு பரிகாரமாக தொடர்ந்து இரண்டு மாதங்கள் நோன்பு நோற்க வேண்டும் அல்லது 60 ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும். பரிகாரம் செலுத்த சக்தியற்றவர்கள் முறிந்த நோன்பை மீண்டும் நோற்க வேண்டும். (ஆதாரம் : புகாரி, முஸ்லிம், அஹ்மத், அபூதாவூத்)
  • - வீண் விளையாட்டுகள், கேளிக்கைகள், சண்டையிடுதல் மற்றும் தீய வார்த்தைகள் ஆகியவற்றை நோன்பாளிகள் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
சலுகையளிக்கப்பட்டவர்கள்
 
நோயாளிகள், கர்ப்பிணிப்பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள், பிரயாணிகள், தள்ளாத வயதினர்கள் ஆகியவர்களில் தள்ளாத வயதினர்கள் தவிர மற்ற அனைவரும் நோன்பை தள்ளிப் போடுவதற்கு அனுமதிக்கப் பட்டவர்கள். தள்ளாத வயதினர்கள் நோன்பை விட்டு விட்டு நோன்பொன்றுக்கு பகரமாக ஒரு ஏழைக்கு உணவளிக்க வேண்டும்.
(பார்க்க அல்குர்ஆன் 2:184,185 மற்றும் புகாரி, முஸ்லிம், அஹ்மத், நஸயீ)

தடைசெய்யப்பட்டவர்கள்
 
மாதவிடாய் மற்றும் பிரசவத்தீட்டுள்ள பெண்கள் மீது நோன்பு நோற்பது தடையாகும். விடுபட்ட நோன்புகளை கணக்கிட்டு அவர்கள் சுத்தமான பிறகு மற்ற நாட்களில் நோற்க வேண்டும்.
(புகாரி, முஸ்லிம், அஹ்மத்)
நன்மைகளை அள்ளித்தரும் ரமழானில் சட்ட விதிகளைப் பேணி வழிபாடுகள் அதிகம் செய்து ஈருலகிலும் வெற்றியடைய முயற்சிப்போம், அல்லாஹ் மிக அறிந்தவன்.

இனிய ரமழான் நல்வாழ்த்துக்கள்.

--

இயலாமையிலிருந்தும் சோம்பலிருந்தும் கோழைத் தனத்திலிருந்தும் கருமித்தனத்திலிருந்தும் கடன் சுமையிலிருந்தும் மனிதர்களின் அடக்குமுறைகளிலிருந்தும் உன்னிடம்...பாதுகாப்புக் கோருகிறேன்...

Friday, July 22, 2011

மெரிட்- உதவித்தொகை திட்டம்


உதவித்தொகை பெற விண்ணப்பிக்கவும்




திட்டம் விவரம் : குறிக்கோள்: திட்டத்தின் நோக்கம் இன்னும் தொழில் மற்றும் தொழில்நுட்ப படிப்புகள் தொடர செயல்படுத்த சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த ஏழை மற்றும் meritorious மாணவர்களுக்கு நிதி உதவி வழங்க உள்ளது.

நோக்கம்: இந்த கல்வி உதவி தொகை மட்டுமே இந்தியாவில் ஆய்வுகள் உள்ளன மற்றும் இந்த நோக்கத்திற்காக அரசு / யூடி நிர்வாகம் நியமிக்கப்பட்ட ஒரு ஏஜென்சி மூலம் வழங்கப்படும்.

ஸ்காலர்ஷிப் எண்ணிக்கை:

ஒவ்வொரு வருடமும் 20000 கல்வி உதவி தொகை நாடு முழுவதும் சிறுபான்மை சமூகங்களின் மாணவர்கள் மத்தியில் பகிர்ந்தளிக்கப்படும். இந்த சமூகங்கள், புலமையின் விநியோகம் மாநில வாரியான popolation அடிப்படையில் கீழ் இருக்கும்:

Tamil Nadu
 
No. of Scholarship for Muslim

 366 
உதவித்தொகை நிபந்தனைகள்:



* நிதி உதவி அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்திடமிருந்து பட்டதாரி அளவிலான தொழில்நுட்ப மற்றும் தொழில்முறை படிப்புகள் பட்டம் மற்றும் / அல்லது தொடர கொடுக்கப்படும். பராமரிப்பு உதவித்தொகை மாணவர் கணக்கில் வரவு இருக்கும். நிச்சயமாக கட்டணம் கவலை நேரடியாக புகைப்பிடித்தல் மாநிலம் துறை மூலம் வழங்கப்படும்.
 
* ஒரு போட்டி தேர்வின் அடிப்படையில் தொழில்நுட்ப / தொழில்முறை படிப்புகள், தொடர ஒரு கல்லூரிக்கு அனுமதி கிடைக்கும் மாணவர்கள் உதவித்தொகை தகுதி இருக்கும்



* எந்த போட்டி தேர்வு எதிர்கொள்ளும் இல்லாமல் தொழில்நுட்ப / தொழில்முறை படிப்புகள் சேர்க்கை யார் மாணவர்கள் உதவித்தொகை தகுதி இருக்கும். எனினும், அத்தகைய மாணவர்கள் குறைவாக 50% மதிப்பெண்கள் பட்டம் / மேல்நிலை மட்டத்தில் கூடாது. இந்த மாணவர்கள் தேர்வு கண்டிப்பாக தகுதி அடிப்படையில் செய்யப்படும்.



* பயனாளியின் / பயனாளியின் பெற்றோர் அல்லது பாதுகாவலர் ஆண்டு வருமானம் அனைத்து ஆதாரங்களில் இருந்து Rs.2.50 லட்சம் தாண்ட கூடாது.


மேலும் விவரங்களுக்கு :






Thursday, July 21, 2011

உங்களது ரத்த வகை எது? அதற்கேற்ற உணவு எது?

ஏ' பிரிவு இரத்த வகை
இவர்களுக்கு சைவ உணவு மட்டுமே பொருத்தமானது. புத்தம் புதிய காய்கறிகள்,கீரை வகைகளை இவர்கள் அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். பீன்ஸ் மற்றும் பயறுவகைகளில் அதிகமான புரதச்சத்து உள்ளது. அவை இவர்களுக்கு இதய நோய்கள், புற்றுநோய்,நீரிழிவு போன்றவை ஏற்படுவதை ஓரளவு தடுக்கும். 'ஏ' இரத்த பிரிவு கொண்டவர்களுக்கு மேற்கண்ட நோய்கள் ஏற்படும் சூழ்நிலை அதிகம் இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த இரத்த வகை கொண்டவர்கள் பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களை தவிர்ப்பது நலம். இவை இவர்களுக்கு எளிதில் சீரணம் ஆவதில்லை. முட்டைக்கோஸ், தக்காளி, உருளைக்கிழங்கு,மிளகு போன்றவற்றில் இருக்கும் 'லெக்டின்' என்ற பொருள் இவர்களின் வயிற்றுக்கு தொந்தரவை தரும்.

'பி' இரத்த வகை
மிதமான மென்மையான உணவுகளே இந்த வகை இரத்த பிரிவு கொண்டவர்களுக்கு ஏற்றவை. பழம், காய்கறிகளை இவர்கள் அதிகமாக சாப்பிடலாம். பாலும், பால்வகை பொருட்களும் உடலுக்கு உகந்தவை அல்ல. தக்காளி அதிகமாக சாப்பிட்டால் வயிற்றுக் கோளாறுகளை உருவாக்கும். சோளம், கோதுமை,பயறு வகைகள்,வேர்க்கடலை சாப்பிட்டால் இவர்களின் உடல் எடை அதிகரிக்கும். இவற்றில் இருக்கும் சில ரசாயனங்கள் இந்த ரத்த பிரிவுகாரர்களுக்கு மந்தம், சோர்வை உருவாக்கும்.

'ஏ'பி' பிரிவு இரத்த வகை
இந்த பிரிவு இரத்தம் இருப்பவர்கள் இறைச்சி உணவை அதிகம் உண்பது கூடாது. இவர்களது வயிற்றில் உணவை சீரணம் செய்யும் அமிலச்சுரப்பு குறைவாக இருப்பதுண்டு. அதனால் சீரணம் மெதுவாக நடக்கும். குறிப்பாக இவர்கள் கோழி இறைச்சியை உண்பது கூடாது. பால், வேர்க்கடலை மற்றும் பருப்பு வகை பொருட்கள், தானியங்களை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். ஆனால் கோதுமையை அதிகம் சேர்க்க கூடாது. இந்த இரத்த பிரிவு கொண்டவர்களுக்கு அதிகமாக சளித் தொந்தரவு இருக்கும். காலையில் இளம் சுடுநீரில் பாதி எலுமிச்சை பழத்தை பிழிந்து வெறும் வயிற்றில் குடித்தால் சளி தொந்தரவு நீங்கும்.

'ஓ' இரத்த பிரிவு
இவர்கள் மாமிச உணவுகளை சாப்பிடலாம். ஆனால் அதைவிட அதிக நார்ச்சத்து நிறைந்த காய்கறிகளை சாப்பிடலாம், இயற்கையாக இவர்களின் வயிற்றில் சீரணத்திற்கு சுரக்கும் அமிலத்தின் அளவு அதிகமாக இருப்பதுண்டு. அதனால் செரிக்க சற்று கடினமான உணவுகளை எடுத்துக் கொண்டாலும் எளிதில் சீரணமாகி விடும். கோதுமை இவர்களுக்கு பொருந்தாது. காரணம், கோதுமையில் இருக்கும் ஒரு வகை ரசாயனம் இவர்களது உடலுக்கு பொருந்துவதில்லை. பால் பொருட்களும் பொருந்துவதில்லை. பீன்ஸ்,பயறு வகைகளும் இவர்களுக்கு எதிராக இருக்கின்றன. இவற்றை அதிகம் சாப்பிடும் நிலையில் மந்தமான குணம் காணப்படுவதுண்டு. அது போல் முட்டைகோஸ்,காலிபிளவர்,கடல் உயிரினங்கள்,அயோடின் சேர்நத உப்பு போன்றவற்றையும் தவிர்ப்பது நல்லது.

Monday, July 18, 2011

ஹராமான உணவால் ஏற்படும் விளைவுகள் !!!!

1. நல்ல அமல்கள் செய்வதற்கு வாய்ப்பு கிடைக்காது.

2. அவ்வாறு செய்தாலும் அதில் இன்பம் இருக்காது.

3. நற்செயல்கள் ஏற்றுக் கொள்ளப் படாது.

4. துஆக்கள் ஒப்புக்கொள்ளப்படாது.

5. செல்வத்தில் பரக்கத் இருக்காது.

6. கெட்ட செயல்களைச் செய்யுமாறு உள்ளம் தூண்டும்.

7. குழந்தைகள் மோசமாகிவிடுவார்கள்.

8. ஹராமான பணம் வந்ததைப் போன்றே சென்றுவிடும்.

9. ஹராமான பொருளைச் சாப்பிடு பவன் சொர்க்கம் செல்லமாட்டான்.

10. ஹராமால் வளர்ந்த சதை நரகத்திற்கே உரியது.

11.ஹராமை சாப்பிடுபவன் அல்லாஹ், ரசூல் ஆகியோரின்


கோபத்திற்கு ஆளாவான்.

எடுத்துக்காட்டாக இங்கே சில வற்றைக் குறிப்பிட்டாலும் இன்னும் ஏராளமான தீமைகள் ஹராமான வருவாயில் உள்ளன. எனவேதான், ஹராமை விட்டும் தவிர்ந்திருக்கும்படி குர்ஆன் ஹதீஸில் வலியுறுத்தப்படுகிறது.


" மேலும், உங்களுடைய பொருட் களை உங்களிடையே தவறான முறையில் (ஒருவருக்கொருவர்) உண்ணாதீர்கள். இன்னும், நீங்கள் அறிந்து கொண்டே மனிதர்களின் பொருட்களி லிருந்து ஒரு பகுதியை பாவமான முறையில் நீங்கள் உண்ணும் பொருட்டு, அவற்றை அதிகாரிகளிடம் (இலஞ்சமாகக்) கொண்டு செல்லாதீர்கள்."  (அல்குர்ஆன். 2:188)


இறை நம்பிக்கையாளர்களே! உங்களுக்குள் (ஒருவருக்கொருவர்) ஒப்புதலின்அடிப்படையில் நடைபெறும்


" வணிகத்தின் மூலமாகவேயன்றி, உங்களிடையே ஒருவர் மற்றவரின் பொருட்களைத் தவறான முறையில் உண்ணாதீர்கள்."  (அல்குர்ஆன் 4:29)

ஹலாலான உணவுதான் நல்ல அமல் செய்ய உதவும்; ஆகையால்தான், இறைவன் தன் அருள்மறையில், “இறைத்தூதர்களே! ஹலாலான உணவை உண்ணுங்கள். நல்ல அமல்கள் செய்யுங்கள். நீங்கள் செய்கின்ற அமலை நான் அறிந்தவனாக இருக்கின் றேன்” எனக் கூறியுள்ளான். ஹலாலான உணவுக்கும் நற்செயலுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்பது இவ்வசனத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக விரிவுரையாளர்கள் கூறுகின்றனர்.

 
ஹலாலான உணவின்றி வணக்கத்தில் இன்பம் இருக்காது.

Monday, July 4, 2011

இறுதித் தீர்ப்பு நாள் எப்போது?

இஸ்லாம் மார்க்கத்தை ஏற்றுக் கொண்ட முஸ்லிம்கள், மறுமை நாள் – இறுதித் தீர்ப்பு நாள் என்ற அந்த நாள் நிச்சயமாக வரும் என நம்பிக்கை கொள்ள வேண்டும். இறைத்தூதர் (ஸல்) அவர்களின் காலத்தில் வாழ்ந்த நிராகரிப்பாளர்களில் மறு உலக வாழ்க்கையில் நம்பிக்கை இல்லாதவர்களும் இருந்தார்கள். மறுமை வாழ்க்கையை அவர்களால் நம்ப முடியாமல் போனது, இந்த மண்ணுலக வாழ்க்கையைத் தவிர வேறு எந்த வாழ்க்கையும் இல்லை என்ற நம்பிக்கையும்தான் நபிமார்களையும் அவர்களின் போதனைகளையும் நிராகரிக்கும்படிச் செய்தது…

”இந்த உலக வாழ்க்கையைத் தவிர வேறு வாழ்க்கை கிடையாது, நாங்கள் உயிர்ப்பிக்கப்படுவோர் அல்லர்” என்று அவர்கள் கூறினார்கள். (திருக்குர்ஆன், 006:029)




”மகத்தான நாளில் அவர்கள் உயிர்ப்பிக்கப்படுவார்கள் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டாமா? அந்நாளில் அகிலத்தின் இறைவன் முன்னால் மனிதர்கள் நிற்பார்கள்.” (திருக்குர்ஆன், 083:004 – 006)


இஸ்லாத்தை நிராகரித்தவர்கள் இறுதி நாளை மறுத்து வந்ததையும், அவர்கள் மறுப்புக்கு பதிலடியாக இறுதி நாள் நிச்சயமாக நிகழ இருக்கிறது என்று இறைவன் கூறியதையும் திருக்குர்ஆனில் இன்னும் பல வசனங்களில் காணமுடியும். இறுதித் தீர்ப்பு நாள் எப்போது வரும் – எந்த நேரத்தில் சம்பவிக்கும் என்பது இறைத்தூதர்கள் உள்பட – மனிதர்கள் எவருக்கும் தெரியாது. அது பற்றிய ஞானம் இறைவனிடமே உள்ளது…


”நிச்சயமாக அந்த நாள் வரக்கூடியதாக உள்ளது. ஒவ்வொரு மனிதனுக்கும் அவனது முயற்சிக்கேற்ப கூலி வழங்கப்படுவதற்காக அந்த நாளை மறைத்து வைத்திருக்கிறேன்.” (திருக்குர்ஆன், 020:015)


"அந்த நாள் பற்றிய அறிவு அல்லாஹ்விடமே உள்ளது..” (திருக்குர்ஆன், 31:34)

மறுமை நாள் எப்போது வரும்”? என்றக் கேள்விக்கு அது பற்றிய அறிவு அல்லாஹ்விடமே உள்ளது என்று 031:034வது வசனத்தை இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ஓதிக்காட்டினார்கள். மேலும் ”மறுமை நாள் எப்போது சம்பவிக்கும்”? என்பது பற்றி இறைவன் எனக்கும் அறிவித்துத் தரவில்லை என்று பொருள்படும் வகையில் ”அதைப் பற்றிக் கேள்வி கேட்பவரை விட நான் அறிந்தவரல்ல” என்று தமக்கு மறுமை நாள் எப்போது சம்பவிக்கும் என்பது தெரியாது என்று பதிலளிக்கிறார்கள்!


இறுதி நாள் எப்போது நிகழும் என்பது பற்றிய அறிவு இறைவனிடம் மட்டுமே உள்ளது என்றாலும் அந்த நாள் வருவதற்கு முன் நிகழவிருக்கும் சில சம்பவங்களை, அடையாளமாக, இறைவன் தனது தூதருக்கு அறிவித்திருக்கிறான். இறைத்தூதர் (ஸல்) அவர்களும் மனித சமுதாயத்திற்கு அதை அடையாளங்காட்டி முன்னறிவிப்பு செய்துள்ளார்கள்…

இறுதி நாள் வருவதற்கு, முன் அடையாளமாக இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பல அறிவிப்புகள் செய்துள்ளார்கள். அதில் மிக முக்கியமானதாக 10 அடையாளங்களை அறிவித்திருக்கிறார்கள்.

1. புகை மூட்டம்

2. தஜ்ஜால்

3. (அதிசயமானப்) பிராணி

4. சூரியன் மேற்கிலிருந்து உதிப்பது.

5. ஈஸா (அலை) இறங்கி வருவது.

6. யாஃஜுஜ் மஃஜுஜ்

7,8,9. அரபு தீபகற்பத்தில் கிழக்கில் ஒன்று, மேற்கே ஒன்று என மூன்று நிலச்சரிவுகள் ஏற்படுவது.

10. ஏமனிலிருந்து கிளம்பும் தீப்பிழம்பு மக்களை விரட்டி ஒன்று சேர்ப்பது.

”இந்த பத்து நிகழ்ச்சிகளையும் நீங்கள் காணும் வரை அந்த நாள் வராது” என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள். ஒரு நிமிட நேரத்தில் உலகெங்கும் தொடர்பு கொள்ள முடியும் என்ற காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். மேற்கண்ட முன்னறிவிப்பு அடையாளங்களில் ஏதாவது ஒன்று எங்கு நடந்தாலும், நடந்து முடிந்தவுடன் அந்த செய்தி உடனடியாக உலகத்திற்கே செய்திகள் மூலம் தெரிந்துவிடும்.

மேலும், தஜ்ஜாலின் வருகை, நபி ஈஸா (அலை) அவர்கள் வானத்திலிருந்து இறங்கி வருவது, இவையெல்லாம் நிகழும் நேரத்தில் அந்த அதிசயங்கள் உலகெங்கும் அறிவிக்கப்படும். அதிலும் முக்கியமாக சூரியன் மேற்கிலிருந்து உதிப்பதை செய்திகள் இல்லாமலே ஒவ்வொருவரும் நேரில் காண முடியும். அதிசயப் பிராணி பற்றி திருக்குர்ஆன்…

”அவர்களுக்கு எதிரான (நமது) கட்டளை நிகழும் போது பூமியிலிருந்து ஓர் உயிரினத்தை வெளிப்படுத்துவோம். நமது வசனங்களை மனிதர்கள் உறுதி கொள்ளாமல் இருந்தது பற்றி அவர்களிடம் அது பேசும்.” (திருக்குர்ஆன், 027:082)

இந்த வசனத்தில் சொல்லப்பட்டுள்ள உயிரினம், இறுதி நாளுக்கு முன்பு, இறுதி நாளின் அடையாளமாகத் தோன்றும் என்பதையும் நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள். இந்த அதிசயப் பிராணி தோன்றி மனிதர்களிடம் பேசினால் அதுவும் மிக அதிசயமாக உலகிற்கு அறிவிக்கப்படும்.














Govindakudi Mosque

zakat calculator